(சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து கொடுத்து இருக்கிறேன்.....
கடவுள்களை பார்த்தேன்..........
நான் ஒரு நாள் கடவுள்களை பார்த்தேன்......
வலி அதிகமாக இருந்தாலும் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து காலை நொண்டியபடியே நடந்து சாலை ஓரத்தில் இருந்த ஒரு திண்டில் அமர்ந்தேன்.... அமர்ந்தேன் என்று சொல்வதை விட சரிந்தேன் என்று சொல்லலாம்...
நான் சரிந்ததறக்கு காரணம்..... காலையில் வேலைக்கு செல்லும் போது தவறுதலாக வந்த ஒரு வாகனம் என் மீது மோத நான் சற்று பலமாக தாக்கப்பட்டு கிழே விழுந்தேன்... மோதியவகனதின் டிரைவர எதோ ஹிந்தியில் பேசியபடியே என்னை கடந்து சென்றது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது....
அந்த திண்டில் அமர்ந்த பின் மெதுவாக என் கண்களை மூடினேன்.. என் கால் மற்றும் இடுப்பில் நல்ல அடி.. அதிக வலி அதனால் கண்கள் சொருகி மயக்கம் வருவது போல் இருந்தது...மெதுவாக அதிகம் வலித்த கால்களை பிடித்து கொண்டே கிழே குனிந்து உட்கார்ந்து கொண்டேன்.... அந்த நேரத்தில்.... நான் கிழே விழுந்ததில் இருந்து இதுவரை யாரும் என் அருகில் வரவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்...
கண்கள் சொருகி அடுத்த ஐந்தாவது நிமிடம் என்க்கு முழு மயக்கம் வரும் என்பது தெரிந்தது....ஹிந்தி பேச்சுக்கள் ..வாகன இரைச்சல்கள் மெதுவாக காற்றில் கரைந்து போய்க்கொண்டிருந்த்தன.....
அந்த நேரத்தில் என் மனதில் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று மெதுவாய் நிழல் ஆட தொடங்கியிருந்தது...எந்த காரணத்திற்காக என்று எனக்குத் தெரியாது... முடிந்தால் நீங்கள் சொல்லுங்கள்...
பள்ளி விடுமுறை நாள்களில் வெளியூரில் இருக்கும் என் அத்தை வீட்டிற்கு சென்றிருக்கிறேன்... அத்தை கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்கள்... அவர்களுக்கும் அது விடுமுறை நேரம்...
அன்று மாலை என் அத்தை வீட்டில் உள்ள காரை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அதற்க்கு தயார் ஆனோம். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். நகரின் எல்லைவரை காரை டிரைவர ஓட்டி வந்தார் அதற்க்கு பிகு கார் என் அத்தையின் கையில் கொடுக்கப்பட்டது.
டிரைவர அருகில் அமர்ந்து சொல்லிகொடுக்க அத்தை ஓட்டிக்கொண்டிருந்த்தார்... புதுப்பழக்கம் என்பதால் மெதுவாக சாலையில் ஆங்கும் இங்கும் செல்வதாக இருந்தார்...
அது ஒரு சிறு கிராமத்திற்கு செல்லும் சாலை என்பதால் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் இருந்தது....
அத்தை கார் ஓட்டியதில் எந்த ஒரு முன்னேற்றமும் இருந்தததாக எனக்கு நினைவில்லை.... சற்று தூரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த டிரைவர அத்தையிடம் பார்த்து மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினார்... அத்தை அதற்க்கு தலை ஆட்டினது என்னவோ நினைவிருக்கின்றது...அனால் அடுத்த சில நிமிடங்களில் ஒரு சிறிய ஆட்டின் மிது கார் மோதி அது சற்று தூரம் தள்ளி விழுந்ததற்கு அப்புறம் கார் சற்று தூரம் போய் டிரைவரால் நிறுத்தப்பட்டு நாங்கள் கிழே இறங்கினோம்.....
அந்த ஆடு அதே இடத்தில் கத்திக்கொண்டே படுத்து கிடந்த்தது... அதற்குள் சத்தம கேட்டு பக்கத்தில் காட்டில் வேலை பார்த்தவர்கள் ஓடி வந்தார்கள்...வந்தவர்கள் விழுந்து கிடந்த ஆட்டு குட்டியை துக்கி அதற்க்கு என்னானது என்று பார்ப்பதில் ஆர்வமாக இருந்தனர்......
அதில் ஒருவர் அதான் அடிப்பட்ட ஒரு காலை பிடித்து இழித்துவிட்டுக் கொண்டிருந்தார்...அது வழியால் கதிக்கொண்டிருந்த்தது....
அந்த கூட்டத்தில் இருந்து விலகி வந்தவர்களில் சிலர் எங்களிடம் சற்று கடுமையாக...... பார்த்து வறவேண்டியதுதானே பாவம் வாயில்ல ஜிவான் என்ன செய்யும் பாவம் என்று முனுமுனுத்தபடி சென்று விட்டனர்...
அதற்க்கு மேலும் நாங்கள் அங்கு இருக்கவில்லை...அந்த இடத்தோடு முடிந்தது எங்களின் பயணம்... திரும்பி வரும்போது டிரைவர்தான் காரை ஓட்டி வந்தார்.... அத்தை என்னோடு பின் இருக்கையில் வந்து அமர்ந்தார்.... முகம் முழுவது வேர்த்து வலிந்தது பயத்தினால்.....
அன்று இரவு நான் தூங்க செல்லும் முன் அதை நினைத்து பார்த்தேன்... அந்த ஆட்கள் சொல்லியது என் மனத்தில் ஒலித்தது..... பாவம் அது வாயில்ல ஜீவன் என்ன செய்யும் பவாம்..... அப்படியே தூங்க கண் மூடினேன்....
கண்ணை முழுவதும் மூடி ஆழ்ந்த நிரந்த்தர மயக்கத்திற்கு செல்ல இன்னும் ஒரு நிமிடத்திற்கு குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.... இப்போது வலி அதிகமகியிருந்தது...மயக்கத்தின் விளிம்பில் இருக்கிறேன்.....
என்னை பொறுத்தவரையில்... கடவுள் என்ற ஒன்று இல்லை.... கடவுளும். சாத்தானும்... சாதாரண மனிதனின் வெளிப்பாடே......( ஐன்ஸ்டீன் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.........) அதனால் நல்ல மனிதர்களை கடவுள் என்று சொல்ல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து....
அந்த வகையில் இந்த சாதாரண மனிதர்களுக்கிடையில் நான் சிறு வயதில் பார்த்த அந்த கிராமத்து மனிதர்கள் கடவுள்களே....அவர்கள் நான் பார்த்த கடவுள்கள்... அவ்வளவுதான்......
அந்த இறுதி நிமிடத்தில் அவர்களை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என நினைத்தேன்... எழுதினேன்.. நான் அந்த கடவுள்களை பற்றி எழுதியதை பற்றி படிக்க வேண்டும் என்றால் இந்த கதையை மீண்டும் முதலில் இருந்து படிக்குமாறு வேண்டுகிறேன்....
குறிப்பு :- மயங்கியவன்னுக்கு என்ன ஆனது என்று நீங்கள் அக்கறை கொண்டால் அவன் சில நாள்களில் சரியாகி........... அவன் இறுதியாக மயக்கத்திற்கு போகும் முன் நினைத்ததைச் செய்து முடித்து விட்டான் அதுதான் நீங்கள் மேலே படித்தது......
.
0 comments:
Post a Comment