விசயத்திற்கு செல்லும் முன் இதை எழுதுவதற்கான காரணத்தை கொஞ்சம் நான் சொல்லிவிட்டால் உங்களுக்கு படிக்க எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்....
நான் இதற்க்கு அடுத்த படியாக தயார் செய்துகொண்டிருப்பது.. காதலின் தொடக்கம்...அதாவது காதலின் ஆணி வேர்.. அல்லது காதலின் ரிஷிமூலம்...எங்கிருந்து...எப்படி உருவாகின்றது என்பதைப்பற்றி ......
அதற்க்கு முன்னால் என் பார்வையில் காதல் என்பது எப்படி என்று ஒரு சிறு முன்னுரையை கொடுத்தால் அடுத்து வருவதை நிங்கள் படிக்கும் போது கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து....
சரி முதலில் நான் காதலைப்பற்றி படித்ததை சொல்லுகிறேன்....
அதிகம் புத்தககங்கள் படித்து இருந்தாலும் இன்றுவரை என் மனதில் காதலுக்கு என்று தனி இடம் பிடித்து இருப்பது AYAN RAND எழுதிய WE THE LIVING என்ற புத்தகம்தான்...
இது ஏன் எனக்கு பிடிக்கும் என்று சொல்லுவதற்கு முன்னால் இந்த ஆசிரியை பற்று சில வரிகள் பார்க்கலாம்...
AYAN RAND 1905 ஆம் ஆண்டு russia வில் உள்ள St.petersburg பிறந்தவர். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் தனது 9 வயதிலேயே தனக்கு உண்டான வழியை தேர்ந்து எடுத்து அதில் நடந்தார் என்பதே..அவர் தேர்ந்து எடுத்தது fiction writting.
russia என்றாலே communism என்பது அனைவருக்கும் தெரிந்த்ததே..அதுவும் இவர் வாழ்ந்த காலத்தில் சொல்லத் தேவையில்லை....
எனவே இவர் russia வில் இருந்து நாடு பெயர்ந்து america சென்று அங்கு ஒரு பெரிய நவலாசியரகவும். திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி we the living ல் அப்படி என்ன இருக்கின்றது ...பார்க்கலாம்..
.
இந்த கதை என்னை பொறுத்தவரையில் (மக்கள்) காதலர்கள் communism தின் பிடியில் எப்படி பாடுபடுகிறாகள் என்பதே.
கதையின் கதாநாயகி ஹிரா (kira) கதாநாயகன் leo ... இந்த இருவருக்கும் உண்டான வாழ்க்கை (காதல்) போராட்டம்தான் கதை.
இந்த காதல் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அவர் காட்டியிருப்பது communism. communism த்தின் விளைவுகளை மிக துல்லியமாக கதையில் ஓட விட்டு இருக்கிறார்.
அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்பதாலோ தெரியவில்லை காதலியே காதலுக்காக அதிகம் தியாகம் செய்கிறார்.(உண்மையில் யார் செய்கிறார்கள் என்று எனக்குத்தெரியாது அனுபவம் இல்லை.... இருப்பவர்கள் சொல்லலாம்) இந்த கதையில் ஹிரா எனக்கு மிகவும் பிடித்துப்போன கதாப்பாத்திரம்.
அவள் தன் காதலுக்க்காக எல்லவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றாள். அனால் லியோ சாதாரண communism த்தை எதிர்க்கும் மனிதனாக இருக்கிறான்.
இந்த இருவரின் மூலம் RUSSIA வின் communism த்தை துல்லியமாக சொல்லியிருக்கிறார் AYAN RAND.
அவள் தன் காதலனுக்கு என்ன தேவையோ அதை தன்னால் செய்ய முடிந்தவற்றை எல்லாம் அவனுக்குத்தேரியமலே செய்து முடிக்கிறாள்.
அதை அந்த communism த்தின் ஆதிக்கத்தின் நடுவில் அவள் போராடி செய்யும் விதம்தான் அவளிடத்தில் இருந்து அவன் மீது கொண்டுள்ள காதல் எவ்வளவு அதிகம் என்பதை வெளிக்காட்டுகின்றது.
ஒரு கட்டத்தில் communism த்தை எதிர்த்ததாக சொல்லி அவனை நாடு கடத்துகிறார்கள். இவள் துடித்து போகிறாள். அங்கு இருக்க பிடிக்கமால் நாட்டை விட்டே ஓட முயற்சிக்கிறாள்.
அப்படி நாட்டின் எல்லையை கடக்கும் போது சுட்டு கொல்லப்படுகிறாள்.அவள் இறக்கும் அந்த கடைசி நிமிடத்தை ayan rand தனக்கு உண்டான பாணியில் சொல்ல்யிருப்பது மனதை கலங்கசெய்கின்றது..
முடிந்தால் படியுங்கள் ஒரு நல்ல புத்தகம். மேலும் THE FOUNDAIN HEAD, ATLAS SHRUGGED போன்ற நாவல்கள் நான் படித்ததில் AYAN RAND ன் சிறந்த புத்தகங்கள்.
அடுத்ததாக நான் பார்த்த விதத்தில் சொல்லப்போனால் ..காதல் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.....
நான் சென்னயில் வேலை பார்த்த போது காதல் என்ற பெயரில் நடந்த சம்பவங்களை என் நண்பர்கள் மூலமாக காண நேர்ந்த்தது. அதில் சிலவற்றை தெரிவிக்கிறேன்...
என் நண்பன் ஒருவன் வெகு நாட்களாக ஒரு பெண்ணை பின் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவள் இவனை பார்த்து சிரித்த அடுத்த வாரமே தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து அவளுக்கு ரோஜா கொடுக்க அவளும் அப்போது அதை வங்கி கொண்டாள்.
அவன் எங்கள் ரூமுக்கு வந்து அதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவ்ள அவளின் அண்ணனோடு அங்கு வந்து சேர்ந்தாள்.
அன்று சண்டைபோடாத குறைதான்...ஒருவழியாக இனிமேல் அப்படி நடக்காது என நாங்கள் சொல்ல அவர்கள் சென்றார்கள்..
அடுத்த சில நாள்களில் அதே நண்பன் வேறொரு பெண் பின் சுற்றினான் அது வேறு விஷயம்.
அடுத்து மற்றொருவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். நாங்கள் அவனை எச்சரித்தோம் எங்கே அவள் அண்ணனும் இங்கே வரப்போகிறான் என்று... அதற்க்கு அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. நாங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கின்றோம்.. என்றான்.
அவர்களின் காதல் ஒருவருடம் நீடித்தது. அதற்குள் அவனுக்கும் என்னோடு சேர்த்து டெல்லியில் வேலை கிடைத்ததால் அவன் அவளை பிரிய நேர்ந்தது.
அன்று டெல்லிக்கு புறப்படும் நாள் ..அவன் அவளை பார்க்க போவதாக சொல்லி அருகில் இருந்த தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் க்கு சென்றான்... சரியாக ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான்....
வந்தவன் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை....டெல்லிக்கு சென்ற பிறகும் அவளிடத்தில் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு வருடக்காதல் எப்படி ஒரு மணி நேரத்தில் முடிந்தது என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை....
இப்போது அவனுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. குழந்தையின் பெயர் அவள் காதலித்த பெண்ணின் பெயர் இல்லை என்பது எனக்குத் தெரியும்........
இவ்வளவுதான் நான் கண்ட காதல் சம்பந்த்மனவைகள்.
நான் அடுத்து எழுதப்போவதர்க்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது அதை படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
சரி எந்தவொரு காதல் அனுபவவும் இல்லாமல் கதலைப்பற்றி நி எப்படி எழுத முடியும் என்று நிங்கள் கேட்டால் ..நான் எழுதுவது காதல் ..அறிவியலின் பார்வையில் எப்படி என்றுதான்.
இதற்காக ஒரு பெண் பின்னால சுற்ற வேண்டிய அவசியம் என்னகுத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
மற்றபடி என்னை பொறுத்த வரையில் என் காதல் அனுபவங்கள் என்று சொல்லிகொள்ளும்படியாக ஒன்றும் இல்லை.
அதற்க்கு மூன்று காரணங்கள் இருந்ததன....
ஒன்று எப்போதும் நண்பர்களை விட்டு சற்று தனியே விலகி இருப்பது.... அடுத்து தனிமை கலந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்.....மூன்றாவதக காதலுக்காண வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை... அல்லது அதற்காக நான் சரியாக முயற்சிக்கவில்லை... அவ்வளவுதான்...
என்னை பொறுத்தவரையில் நாம் காதலைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் அளவுக்கு அதிகமகவே நினைத்து அல்லது கற்பனை செய்து வைத்து அதில் கலந்து உலாவிக்கொண்டு இருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.
1 comments:
ம்ம் உண்மைதான். ஏற்றுக்கொள்ளவேண்டிய கூற்றுகள் நிறைய இருக்கின்றது..
இன்னும் உங்களின் பதிவுகள் எல்லாவற்றையும் படிக்க முயன்றுகொண்டிருக்கிறேன்.
Post a Comment