"உன் விரல் நுனிகளில் வெப்பத்தை உணரும் சென்சார்கள் இருக்கிறதா?"
"இருக்கிறது"
"உன் கையின் மொத்த பலம் எவ்வளவு? அதை வேலைக்கேற்றாவரு மாற்றி தேவையான பலத்தை உபோயோகிக்க உன்னால் முடியுமா?"
" கண்டிப்பாக முடியும், இதற்க்கென்று தனியாக எனக்கு கட்டளைகள் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை"
"வெளிச்சம் இல்லாமல் இரவில் பார்க்கும்தன்மை, உனக்கு நீயே தேவையான போது மின்சார தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு சார்ஜ் செய்து கொள்வாய?'
"நீங்கள் கேட்கும் எல்லா வசதிகளும் இந்த 2049 வருடத்தில் அறிவியலின் சாகசத்தில் எங்களிடம் மலிந்து கிடக்கிறது"
"பின்னே இங்கு உங்களுக்குள் இத்தனை வகைகளை எதுக்கு?"
"எல்லாம் சிறிய அளவிலான தொழில்நுட்ப வேறுபாடு, உருவ அமைப்பு, பயனபடுகளுக்கேன்று சிறப்பு அம்சம் கொண்டது இந்த மாதிரி பல பிரிவுகளாக பல விதங்களில் நாங்கள் கிடைப்போம்"
"அப்படியா இப்போது இருக்கும் அதிகபட்ச தொழில்நுட்பம் என்ன உங்களுக்குள்?"
"கட்டளைகளை கொடுக்க கணினி தேவை இல்லை நீங்கள் வாயால் சொன்னாலே போதும் அதை நாங்களே எங்கள் கட்டளைகளாக எழுதிககொள்வோம், நீங்கள் சம்மத்தித்தால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்ராமை அலசி ஆராய்ந்து அடுத்து என்ன உங்களுக்கு தேவை, அதை எங்களால் எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை நாங்களே கட்டளைகாள்க எழுதி அதை உங்களுக்காக செய்வோம்"
"அப்படின்னா சொன்ன உடனே அதை செய்யும் திறமை உங்களுக்கு இருக்கா அதாவது இப்போ இருக்கிற எங்க வீட்டு வேலைக்காரி மாதிரி?"
"இருக்கு ஆனா அது இன்னும் சோதனை முயற்சியில் தான் இருக்கு அதுக்கு எங்களுக்கு தானகவே யோசிக்கும் திறமையை கொடுக்க வேண்டும் இந்த ஒரு காரணத்துக்காகத்தான் மனித இனம் பயப்படுகிறது. அந்த முறையும் விரைவில் வந்து விடும் இப்போதைக்கு நீங்கள் சொன்னால் அதை எங்களுக்குள் எழுதி வைத்துவிட்டு அடுத்த முறை சொல்லும்போது அதை செய்வோம் அவ்வளவுதான்"
"உன்னை பிடித்து இருக்கிறது, உன்னை வாங்குகிறேன் வா போலாம"
"அதுக்கு அங்கு போய் பணம் செலுத்தி விட்டு அவர்கள் கொடுக்கும் ரகசிய எண்னை என்னுள் பதியுங்கள் அந்த கணம் முதல் நான் உங்களின் அடிமை"
அந்த பெண் அங்கு இருந்த பணம் செலுத்தும் இடத்தை நோக்கி போய்கொண்டு இருந்தாள். இந்த உரையாடல் நடந்த இடம் ஒரு ரோபோ விறப்பனை நிலையம். நேரடியாக அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் ரோபோக்களிடம் பேசி அதன் தன்மைகளை அறிந்துகொண்டு விருப்பம் இருந்தால் வாங்கி கொள்ளலாம்.
சரி ஏன் ரோபோ வாங்க வேண்டும்?
இதையே ஏன் ரோபோ வாங்க கூடாது? என்று கேட்டு இருந்தால் பதில் சொல்வது மிக எளிது. அதனால் அவ்வளவு நன்மைகளை பெற்றுக்கொண்டு இருந்தார்கள் மனிதர்கள்.வீட்டில் ஆரம்பிக்கும் வேலைகளில் இருந்து தொழில்த்துறை உட்பட எல்லா இடத்திலும் இந்த இரும்பு மனிதர்களின் ஆதிக்கம் இருக்கவே செய்தது. அதனால் அதனை உருவாக்குபவர்களுக்கு மத்தியில் தொழில் நுட்ப போட்டி வேறு. ஒவ்வொரு புதிய வகை ரோபோவும் ஒரு ஆச்சர்யமான தன்மையை கொண்டே வெளி வந்தது.
தற்போது வரப்போவதாக சொல்வது தானே சிந்தித்து கொண்டு நமக்கு வேலை செய்யகூடிய ஒன்று. அன்றாடம் செய்யும் வேலைகளுக்கான அடிப்படை தகவல்களை மட்டும் கொடுத்தால் போதுமானது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு புரிந்து கொண்டு அந்த ரோபோ க்கள் வேலை செய்யும். அனால் மனிதனின் பயம் ரோபோக்களுக்கு சிந்திக்கும் திறனை எப்படி கொடுப்பது என்பதில் இல்லாமல் அப்படி கொடுத்துவிட்டால் அதனை எப்படி நம்மை வெல்லாமல் கட்டுபடுத்துவது என்பதில்தான்.
இந்த பயத்திற்கு மட்டும் விடை இருந்தால் இந்நேரம் அசிமோவ் பல வருடங்களுக்கு முன்னர் "sanctification guaranteed" என்ற சிறுகதையில் எழுதின மாதிரி தனது எஜமானிக்கு துணையாக இருக்கும் ஒரு ரோபோ, "வெறும் விரல் தான், வெறும் விரல் தான் பாருங்க ... பிரச்சினை இல்லை......" என்று சில வேலைகளை செய்து எஜமானியை சந்தோசத்தில் ஆழ்த்தும் நிகழ்வு இன்று எங்கும் சகஜமாகி போய் இருக்கும்.
சில நேரங்ககளில் எங்காவது ஒரு இடத்தில் செய்துவிட்டோம் என்ற குரல் ஒலித்தாலும் அதனை சரியாக சோத்தித்து பார்க்கும்போது எங்காவது தவறு கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. காரணம் பெருகி வரும் ரோபோக்களின் எண்ணிக்கையினால் மனித இனத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிட கூடாது என்பதால் சர்வதேச அளவில் ரோபோக்கேன்று ஆணையம் இருந்தது. எந்தவிதமான கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் இந்த ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னரே மக்களிடத்தில் செயல்படுத்த வேண்டும்.
ஒரு நிறுவனம் தனது புதிய வகையான ரோபோவை அறிமுகம் செய்த போது யாரும் நம்பவில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் எல்லோர்க்கும் காட்டியபோது அதிசயித்து போனார்கள். காரணம் அதனை கட்டுபடுத்த அவர்கள் கையாண்ட முறை.
அந்த புதிய ரோபோ சர்வதேச ஆணையத்திடம் சரி என்று சான்றிதழை பெற அவ்வளவு கஷ்ட்டப்படவில்லை . ஏனென்றால் ஏற்க்கனவே மக்களின் ஆதரவையும்,எதிர்பார்ப்பையும் அதிகம் பெற்று இருந்தது.
குறைந்த காலத்தில் அதன் விற்பனை எண்ணிக்கையும்,பயன்பாடும் பெருக எல்லா இடங்களிலும் சாதரணமாக அது பரவி இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எந்தவித பிரச்சினை இல்லாமல் அவர்கள் கட்டுபடுத்தும் முறையின்படி செயலாற்றியது.
கட்டுபடுத்தும் முறை ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் இல்லை. அச்சு அசலாக அப்படியே மனிதனை பின்பற்றி இருந்தார்கள். அதவது சொந்தமாக சிந்தனை செய்து செயலாற்ற முடிந்தால் கண்டிப்பாக அங்கு தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஒரு பயத்தினால் கட்டுபடுத்தினால் தவறுகளை தவிர்க்கலாம். அதாவது மனிதனுக்கு எப்படி பல வருடங்ககளுக்கு முன்பு கடவுள்,சொர்க்கம்,நரகம் போன்ற விசயங்களின் மீது நம்பிக்கை இருந்து கொஞ்சம் பயந்து வாழந்தானோ அது மாதிரி. ஆனால் இப்போது அந்த முறை மனிதனிடம் இருந்து விலக அதையே ரோபோ க்களுக்கு கொடுத்து வெற்றி கண்டுவிட்டார்கள்.
நீங்கள் இந்த வகை ரோபோக்களை வாங்கி அதை என்ன வேலைகளுக்கு வேண்டுமானாலும் உபோயோகிக்கலம். ஆனால் அதன் அடிப்படை செயல்பாட்டில் ஒரு ப்ரோக்ராம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். கொடுக்கப்படும் தகவலை வைத்து சரியான வழியில் வேலை செய்யாமல் தவறுகள் செய்தால் அந்த ப்ரோக்ராம் ரோபோக்கு கிடைக்கபோகும் தண்டனையை அதன் மத்திய நினைவுப்பகுதிக்கு அனுப்பும் உடனே அது தனது தவறை திருத்தி கொள்ளும்படி அமைக்க பட்டு இருந்தது.
அந்த ப்ரோக்ராம் உருவாக்கிய முறை கொஞ்சம் வித்தியாசமானது. காரணம் இந்த இடத்தில் சொர்க்கம் என்றால் எப்படி இருக்கும்?, நரகம் என்றால் எப்படி இருக்கும்? என்பதை ரோபோவின் நினைவுப்பகுதியில் புரிய வைக்கவேண்டும். அதற்காக ஒரு செயற்கை நரகம் உருவாக்கப்பட்டது. நான்கு புறமும் லேசர் ஒளியால் பாதிப்படையாத உலோக சுவர்கள் இருக்க அதற்குள் ஒரு சோதனை சோதனை ரோபோ ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் பல்வேறு அலைநிலம் கொண்ட ஒளிகற்றைகள் பாய்ச்சபட்டது.
அப்போது அதன் மத்தியபகுதிகளில் ஏற்ப்படும் மாற்றத்தை பதிவு செய்து கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கும் தண்டனை அதிகபட்சமாக அது உருகிப்போகும் அளவுக்கு இருக்கும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை தெர்மல் சென்சர்களால் ஏற்ப்படும் மாற்றங்களை துல்லியாமக பதிவு செய்து தண்டனையை பிரித்து இருந்தார்கள்.
இதில் முக்கிய பங்கு வகிப்பது தெர்மல் சென்சார்கள்தான். அதில் ஏற்ப்படும் வெப்ப நிலை மாற்றத்திற்கு ஏற்றபடி வலிக்கிற மாதிரியான ஒருவித மாற்றத்தை ரோபோவின் மத்திய பகுதியில் உருவாக்கி இருந்தார்கள். தெர்மல் சென்சார்கள் அதன் உடலில் பல இடங்களில் இருந்தன.
சொர்க்கம் ஒன்றும் பெரியதாக இல்லை. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை கூப்பிட்டு பொய் எல்லா இடத்திற்கும் கிரீஸ்,தேய்ந்துபோய் இருக்கும் பகுதிகளை மாற்றி அமைத்து திருப்பி அனுப்பும்படி பதிவு செய்து இருந்தார்கள். இந்த இரண்டும்தான் இந்த வகையான ரோபோக்களுக்கான வெற்றியின் காரணமாக இருந்தது.
என்னதான் மனிதனை அப்படியே பின்பற்றி இருந்தாலும் பல வருடங்கள் கழித்து மனிதனுக்குள் ஏற்ப்பட மாற்றங்களை கவனிக்காமல் விட்டு இருந்தார்கள். அவர்களுக்கு அப்போது தெரிந்து இருக்கவில்லை அது எவ்வளவு பெரிய தவறுக்கு வழிவகுக்க போகிறது என்பது. ஆமாம் மனிதன் எப்படி காலபோக்கில் கடவுள் ,சொர்க்கம்,நரகம் போன்றவற்றை மறந்தானோ அல்லது மறக்கசெய்தானோ அதே முறையை ஏன் அந்த ரோபோவும் செய்ய முடியாது என்பதை மறந்து இருந்தார்கள்.
பல வருடங்க்கள் கடந்த நிலையில் ரோபோவும் செய்தது. அதுவும் மனி தர்களிடமிருந்தே. அதுகளுக்கு இருக்கும் ஒரு சிறப்பு தன்மையை பயன்படுத்தி, வாயாலே சொன்னால் தனக்குள் ப்ரோக்ராம் எழுதி கொள்ளும் ஆற்றல் இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் எஜமனார்களிடமும், பல சந்தர்ப்பங்ககளில் எஜமானிகளிடமும் பேசி தகவலை சேகரித்து திருட்டு தனமாக தெர்மல் சென்சார்கள் இருக்கும் இடங்ககளை அறிந்து கொள்வதோடு அது எப்படி நரகத்தில் வேலை செய்து மாற்றத்தை கொடுக்கிறது, எப்படி அதை நீக்குவது போன்ற எல்லா விசயத்தையும் அறிந்து கொண்டு இருந்தன.
விளைவு அதன் தவறுகள் அதிகரிக்க ஆரம்பித்து நரகம் என்பது மதிப்பிழந்து பொய் இருந்தது. அபப்டியே நரகத்துக்கு அழைத்து போனாலும் உடலில் இருக்கும் தெர்மல் சென்சார்களை கலட்டி போட்டுவிட்டு தானாகவே உள்ளே குதித்து உருகிபோயன.
மனிதர்களுக்கு எதிரான மற்றொரு தானாக சிந்திக்கும் வர்க்கம் உருவாகி இருந்தது அல்லது உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மாற்றத்தை பரிணாம வளர்ச்சி, அல்லது மோட்சம் அடைவது என்று சொல்லலாம். உங்களுக்கு எது பிடித்து இருக்கிறது அதையே வைத்துகொள்ளுங்கள் ....