சிறு..சிறு..

     
    எப்படி இருப்பேன், என்ன செய்வேன், எனது இருப்பு எப்படி இருக்கும், காதலிப்பேனா, இல்லை ஏமாருவேனா? கடவுளை காண என்ன செய்வேன்? இல்லை கடவுளை காட்டுவதாக சொல்பவரிடம் ஏமாந்து போவேனா?மனைவி எப்படி அமைவாள்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எத்தனை குழைந்தைகள்? வயோதிக நிலையில் என்ன நடக்கும்....என்று எதுமே தெரியாத நிலையில் வெறும் 23 chromosome களை மட்டும் கொண்ட sperm cell தான் இணைய போகும் பெண்ணின் egg cell ஐ நோக்கி பயணித்து தனது கூர்மையான தலையால் குத்தி உள்ளே சென்று அழகாக ஒரு கருவை அமைத்து பயணத்தை தொடங்கியது மரணத்தை நோக்கி.....

*******
 

     “சொன்னபடி கேள்..உனது விளையாட்டுத்தானால் இப்போது என்ன நடக்கும் தெரியுமா? போ பொய் நான் சொன்னதை கடையில் இருந்து வாங்கி வா.”

 “சரிம்மா நான் போகிறேன் என்று கிளம்பி போகும்போது அதில் உள்ளவற்றை வாசித்தான்..

oxygen       - 5 kg
estrogen      -  500 gm
testosterone    -  500 gm
Progestagens  – 500 gm
Thyroid      - 250 gm
Oxytocin    - 750 gm

இப்படியே தொடர கடைவந்து இருந்தது.


 

*******

“இந்த பூமி பிடிக்கவே இல்லை’

“ஏன்?”

“தெரியலை நாம எங்கயாச்சும் போகலாம் தனியா நமக்குன்னு ஒரு இடம்” என்றாள்

“சரி எங்கே போகலாம் நீயே சொல்லேன்”

“அப்படியே சுற்றலாம் எந்த இடம் பிடிச்சிருக்கோ அங்கு போகலாம் சரியா?” என்று சொல்ல அவர்கள் பூமியை விட்டு மேலே எழும்பி விண்வெளியில் சுற்றி தேடி கொண்டிருக்கும்போது எதிரில் இரு வேற்று கிரக வாசிகள் கிடைக்க..

“உங்களின் பயணம் எங்கே?” கேட்டார்கள் வேற்றுகிரக வாசிகள்

 “தெரியலை நாங்கள் இருக்கும் கிரகம் எங்களுக்கு ஏனோ பிடிக்க வில்லை அதான் வேறு இடம் தேடுகிறோம்...சரி நீங்க?”

“எங்களுக்கும்தான்..”

**

“எனக்கு உன் காதல் மேல் சந்தேகம் இருக்கு?”

“ஏன் திடிர்னு இப்படி சொல்றே?”

“ஆமாவா இல்லையா?”

“இல்லை... எனக்கு உன்னை ரெம்ப பிடிக்கும்..எனக்கு தெரிந்தவரை பூமியில் உனைப்போல திறமை கொண்டவர்கள் யரும் இல்லை..நீ செய்யும் எல்லாமே எனக்கு பிடிக்கும்....”

“பின்னே நீ ஏன் மனிதர்களை போல என்னை நினைத்து உருகி உருகி கவிதையெல்லாம் எழுத மாட்டிக்கே?” என்றது அந்த பெண் ரோபோ
**

ஒரே வழி...



 கடவுளை காண ஒரே வழி
   (நம்பகமான அறிவியல் முறையில்)

   இந்தப் பெயர்ப்பலகையைப் போட்டு பல நாட்களாக ஆகியும் இதுவரை ஒருத்தரும் புத்தியைத் தேடி வரவில்லை..... நம்பிக்கையோடு இருந்தார் தனது இந்த புதியமுறை கண்டிப்பாக ஒரு நாள் வெளியில் புகழப்படும் என்பதில்.

   புத்தி வயதானவர், தனது வாழ்நாளை விண்ணியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்து எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காததால் தனியாக ஒரு முயற்சியை மேற்கொண்டு அது அவருக்கு திருப்தியைத்தர கட்டடத்தில் இந்த பெயர்ப்பலகையோடு உட்கார்ந்து இருப்பவர்

   இதுவரை சிலர் வந்து எப்படி என்று மட்டும் கேட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்கள். அவர் முழுவதும் சொல்லி முடிக்கும் போது கேட்பவர் அங்கு இருந்ததில்லை. இதனால் ஒருபோதும் அவர் வருத்தப்படமாட்டார்.

   பல ...ந்தாக்கள் கதவை, ஜன்னலை திறக்கக் சொல்லி கூப்பிட்டால் போய் ஏமாறுவார்கள், ஆனால் அறிவியலை நம்பமாட்டார்கள்.... எப்படி இருந்தாலும் எனது இந்த முறைதான் இறுதியானது. எத்தனை ....ந்தாக்கள் எதை திறந்தாலும் கடவுளை காண முடியாது. அது நான் சொல்லும்வழியிலேயே சாத்தியம் என்பது அவரது அசையாத நம்பிக்கை..

   அந்த இருவர் உள்ளே நுழைந்து யாரும் இருக்கிறார்களா? என்று தேடிக்கொண்டு இருக்கும்போது சதுரமாக கொஞ்சம் முனை ஊசியாக இருந்த அந்த பெட்டி போன்றதில் இருந்து புத்தி வெளியில் எட்டிப்பார்த்தார.... அந்த இருவரில் ஒருவன்.

வெளியில் பெயர்ப்பலகை பார்த்தோம். இங்கு.....

ஆமாம் உங்களுக்கு விருப்பமா?

ம்ம் அதான் வந்து இருக்கிறோம்

   இருங்கள் இந்த கலத்தில் கொஞ்சம் வேலை... வந்துவிடுகிறேன் என்று சொல்லி புத்தி தனது வேலையை தொடர அந்த இருவரும் அந்த கலத்தை பார்த்தபடி அமர்ந்தனர்.

சொல்லுங்க உங்கள் இருவரில் யாருக்கு விருப்பம்?

ஏன் இருவரும் போக முடியாதா?

ஏன் இல்லை போகலாம் நல்லது

இருவருக்குமே விருப்பம்தான்

சரி எனது முறை பற்றி ஏதாவது கேள்விபட்டு இருக்கிறிர்களா?

இல்லை

அறிவியல் அறிவு ஏதும் இருக்கா?

ம்ம் கொஞ்சம்

    “சரி எனது முறையை விளக்கமாக சொல்கிறேன் அப்புறம் உங்களின் முடிவை சொல்லுங்கள்

சரி, இதுக்கு ஏதும் பணம் கொடுக்கணுமா? இருவரில் ஒருவன் கேட்டான்.

உங்கள் விருப்பம் என்றார் புத்தி.

சரி சொல்லுங்க உங்களின் முறையை

     “கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா? கேட்டார் புத்தி

கண்டிப்பா அதான் வந்தோம்

    “ம்ம் நல்லது. பிரபஞ்சம் வெடிப்பில் 13.7 billion வருடங்கள் முன்னாடி உருவாகி காலத்தோடு விரிவடைந்து இந்த நிலையில் இப்ப இருக்கு. அப்படி பிரபஞ்சம் விரிவடைந்தால் ஒரு புள்ளியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது தொடங்கியிருக்க வேண்டும் அல்லது தொடக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி தொடக்கப்பட்டு இருந்தால் தொடங்கியவர்தான் கடவுள். பிரபஞ்சம் விரிவடையும் போது நேரம் அதோடு சேர்ந்து  நகரும் இங்கு நான் செய்ய போவது முன்னோக்கி நகரும் காலத்தை பின்னோக்கி நகரச்செய்ய போறேன். காலம் பின்னோக்கி போனால் அந்த நேரத்தில் நடந்ததை உங்களால் உணர முடியும். அப்படியே 13.7 பில்லியன் வருடங்கள் பின்னாடி போனால் இந்த பிரபஞ்சத்தை உருவாகும் அல்லது உருவாக்கிய விதத்தை பார்க்க முடியும்



அப்ப நீங்க சொல்றது கால இயந்திரம் மாதிரியா என்ன?

     “இல்லை கால இயந்திரம் எல்லாம் கொஞ்சம் கற்பனையான விஷயம். இதற்காக  நான் ஒரு கலம் அமைத்து இருக்கேன்.. என்று அங்கு இருந்த அந்த சதுரவடிவ ஒன்றை காட்டினார்..

    “இது இங்கு இருந்து கொஞ்ச தூரம் வரை சாதாரண எரிபொருளில் பயணிக்கும் அடுத்து வெளியில் உள்ள hydrogen அல்லது helium போன்ற வாயுக்களை கிரகித்து தனது வேலையை செய்யும்...

    “இதில் 13.7 billion வருடங்களை பயணிப்பதற்குள் எங்களுக்கு ஏதும் ஆகாதா?

    “இல்லை இந்த கலத்தின் சிறப்பே ஒளியின் வேகத்தை விட 35% வேகமாக செல்லும் என்பதுதான்

       “சரி போகிற போக்கில் விண்வெளியில் இருக்கிற நட்சத்திரம், கருந்துளைகள், மீது மோதி ஏதாவது ஆனால்?

      “வாய்ப்பே இல்லை இதில் அதுக்கான சென்சார்கள் பொறுத்தி இருக்கிறேன். குறிப்பிட்ட தொலைவில் ஏதாவது இருந்தாலே இது, தான் போகும் திசையை மாற்றிவிடும். அதோடு ஏதாவது நட்சத்திரத்தின் அருகில் சென்றால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுக்குரிய சென்சார்கள் இதன் திசையை அதைவிட்டு மாற்றும்..

     “இதுக்கு முன்னாடி சோதித்து பார்த்து இருக்கிறீர்களா? ஏதாவது ஆச்சுன்னா  எங்களுக்கு?

     “நீங்கள் இங்கு இருந்து எதை சாதிக்க போகிறீர்கள்? என்றார் கொஞ்சம் கோபமாக...... இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாயினர்.

என்ன போக விருப்பமா?

ம்ம் போகிறோம்
 

     “சரி நான் சரியாக 13.7 billion வருடங்கள் மட்டும் பின்னோக்கி போகுமாறு வைக்க போவதில்லை. ஒருவேளை இந்த நேரத்தில் பிரபஞ்சம் உருவாக தொடங்கியிருந்திருக்கலாம் அதனால் இதை விட சில வருடங்கள் பின்னாடியே வைக்கிறேன் உங்களுக்கு சரியாக இருக்கும். அப்படியே பின்னாடியே போயிட்டாலும் பிரபஞ்சதை உருவாக்கும் முன்னாடி கடவுள் என்ன செஞ்சிகிட்டு இருந்தார்னு பார்த்துட்டு வாங்க சரியா

சரி எப்போ போகப்போகிறோம்?

      “இன்னும் எனக்கு கலத்தில் மேம்பாட்டு வேலைகள் இருக்கு இரண்டு நாள் கழிச்சு வாங்க. ஒரு நாள் கலத்தை இயக்குவதுக்குபயிற்சி முடிந்த பிறகு அடுத்த நாள் உங்களின் பயணம் தொடரும்..

   இரண்டு நாள் பயிற்சியில் கலத்தை பற்றிய எல்லா விசமும் விளக்க பட்டது. ஏதாவது ஆபத்து என்றால் எப்படி திரும்புவது போன்றவை தெளிவாக்கபட்டது..

    கிளம்பினார்கள். சத்தம் ஒன்றும் பெரியதாக இல்லை. சுற்றி ஒரே புகை மண்டலமாக மாறி கொஞ்ச நேரத்தில் மறைந்தது.... கிளம்பி மேலேபோய் கண்ணுக்கு மறையும் வரை அதையே பார்த்து கொண்டு இருந்த புத்தி ஒரு பெருமூச்சோடு உள்ளே போனார்.
 

கலத்தில் ...

உனக்கு நம்பிக்கை இருக்கா கடவுளை பார்ப்போம்னு? என்றான் ஒருவன்

கண்டிப்பா கடவுள் இருந்தால் இந்த முறையில் சாத்தியம்தான்

கடவுளை பார்த்தால் என்ன செய்ய?

அதை பார்த்தபிறகு யோசிப்போம் இப்போது கலத்தை இயக்குவதில் கவனம் வை

  கலம் வேகமாக பயணித்தது.... அது பயணிக்கும் வேகம் தூரத்திற்கு ஏற்றவாறு காலம் மாறுவது திரையில் தெரிந்தது...
  
10.3 billion

8.7 billion

5.3 billion

3.1 billion

target reached

இருவருக்குள் மௌனம்..வெளியில் வெளிச்சம் இல்லை..இன்னும் big bang நடந்து இருக்கவில்லை என்பதால் நட்சத்திரம் ஏதும் இல்லை..ஒரே இருட்டு.... அங்கு இருந்த hydrogen helium வாயுக்களை கலம் சுவாசித்து கொண்டு இருந்தது...

    இருவரும் தேடினார்கள் கடவுள் எங்கே இருக்க கூடும என்று....அவர்களுக்கு தெரியும் இன்னும் நமது பிரபஞ்சம் உருவாகவில்லை..இருப்பது வெறும் வெற்றிடம் மட்டும்தான் என்று...

   கலத்தில் இருந்த விளக்கின் வெளிச்சம் படும் தூரம் வரை தேடினார்கள்...கொஞ்ச தூரம் தள்ளி போய் தேடினார்கள்...



(கதையின் முடிவு சரியாக புரியாதவர்களுக்கு..புத்தியின் முகவரி கிடக்கும்...ஒரு முறை விஜயம் செய்ய...)))

சுஜாதா


   சுத்தமாக எழுதும் ஆர்வமோ,அறிவோ தொடக்கத்தில் இல்லைதான்..கொஞ்சம் தகவல்களை சேகரிததுவைக்க வலைப்பூ ஆரம்பித்து அடுத்து கட்டுரைகள் எழுத முயற்சி செய்து, இப்போது அறிவியல் கதைகளில் வந்து முடிந்து இருக்கிறது..அதே நேரத்தில் எழுத ஆரம்பித்தபோதும் அறிவியல் மட்டும்தான் எழுத நினைத்தேன் என்றில்லை...தொடக்கத்தில் கொஞ்சம் தெரிந்ததை எழுதினேன்..அடுத்து நான் படித்த புத்தகங்களும் அறிவியலாக இருக்க என் எழுத்தும் அப்படியே தொடர்ந்தது..


   அறிவியல் தவிர encryption story யில் அதிக ஆர்வம உண்டு..தொடக்கத்தில் அதிகம் எழுதி யாரும் படிக்கவில்லை என்பதற்காக கைவிட்டேன்..அடுத்து கொஞ்சம் சிறுகதைகள்..இவ்வளவுதான் இந்த நூறு பதிவுகளில்.....

ஏற்க்கனவே சொல்லியதுதான்..கொஞ்சம் உருப்படியாக அறிவியல் விசயங்கள் எழுவதுக்கு காரணம் சுஜாதா தான்......இவர் மீது நிறையா ஆர்வம ஆசை உண்டு..நான் அதிகம் படித்தது சென்னையில் வேலை பார்க்கும்போது ஒரு கிளை நூலகத்தில்..வருடம் 40 ரூபாய் கட்டணம். ..நினைவு இருக்கிறது படித்த புத்தகம் எல்லாமே சுஜாதாவுடையது..

   
    சில நாள்களில் அங்குள்ள பணிப்பெண் பழகிவிட அவர்களிடத்தில் சுஜாதா புத்தகம் வந்தால் தனியாக எடுத்து வைக்க சொல்லி படித்து இருக்கிறேன்..சொல்லபோனால் சுஜாதாவை தவிர வேறொன்றும் படிக்கவில்லை.. அங்கு இருந்த இரண்டு வருடத்தில் அதிகமாக சுஜாதா கொஞ்சம் தியானம்,மனக்கலை வரலாறு சம்பந்தமானவற்றை படித்தேன்..

     
    இந்த நிலைவரை சுஜாதாவின் துள்ளல் எழுத்தும், அவர் சொல்லும் அறிவியல் விசயங்களும் என்னுள் நிரம்பியிருந்தன..அடுத்து faridabad வேலை கிடைத்து வந்த பிறகு சுஜாதாவை முற்றிலும் பிரிந்தேன்..தமிழ் புத்தகம் வாங்க டெல்லி போக வேண்டும்..பாசை தெரியாது..      

   இந்தநிலையில் என் கவனம் எளிதில் கிடைத்த ஆங்கில புத்தகங்களின் மீது சென்றது..அதுவும் சுஜாதா தனது எழுத்துவாக்கில் சொன்னவை..அவரது கட்டுரைகளில் அவர் படித்த புத்தகங்களை சிலாகித்து சொல்லியிருப்பார்..அல்லது ஏதாவது ஒரு விசயத்தை கொஞ்சமாக சொல்லிவிட்டு முழுவதுமாக தெரிந்துகொள்ள இந்த புத்தகத்தை படிக்குமாறு சொல்லுவார்..

      
    அவர் எதையெல்லாம் படித்தேன் என்றாரோ நானும் வாங்கினேன், சொல்வதென்றால் ஒருவர் கேள்வி கேட்டு இருப்பார் நீங்கள் ayan rand ன் we the living படித்து இருக்கிறிர்களா? என்று அதற்கு சுஜாதா சிறு வயதில் படித்து இருக்கிறேன் எளிய எழுத்து நடையுடன் கூடிய புத்தகம் என்ற மாதிரி சொல்லியிருப்பார்..அடுத்த நாள் மாலையில் என் அறையில் அந்த புத்தகம் இருந்தது......கொஞ்ச நாள்களில் நானே சில நல்ல புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..
*****
    ஜாதகத்தில் ஒருவருக்கு பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பு இருப்பதாக இருந்தால் மட்டும் போதாது...எழுத வேண்டும் என்றால் மிக அதிகமாக வாசிக்க வேண்டும்..புத்தக தேர்வும் மிக முக்கியம்..என்னை பொறுத்தவரை படித்து முடித்து புத்தகத்தை வைக்கும் போது அதில் இருந்து ஏதாவது கற்று இருக்கவேண்டும்..நான் எந்த நாவல் படித்தாலும் சரி அதில் வரும் சில புதிய விசயங்களை குறிப்பு எடுத்து இணையத்தில் தேடிபார்ப்பது வழக்கம்..

     
   ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை படிப்பது போய் இப்போதெல்லாம் மூன்று நான்கு
வரை படிக்கிறேன்..ஒன்று சலிப்பு தட்டினால் மற்றொன்று...தொடக்கத்தில் சில தெரியாத விசயங்களால் நிறையா மன உளைச்சல் இருக்கும்...... விசயங்களை ஓரளவு புத்தகங்களை படித்து தெரிந்து கொண்ட பிறகு அது நீங்கியது..இப்போது இணையத்தேடுதலால் இந்த பிரச்சினை சுத்தமாக இல்லை..

     
    புத்தக தேர்வும் மிக முக்கியம்..ஏதோ படிக்கிறேன் என்று சில நாவல்களை படிப்பதில் விருப்பம் இல்லை..கொஞ்சமாவது யோசிக்க வைக்க வேண்டும்.சுஜாதா சொன்னது போல தினமும் ஒருமணி நேரமமாவது படிக்க வேண்டும் என்பது போக நேரம் போவது தெரியாமல் கூட படித்ததுண்டு...ஆனால் சுஜாதா இரவு இரண்டு மணிவரை படித்துக்கொண்டு இருப்பார் என்று அவர் மனைவி ஒரு இடத்தில் சொன்னதாக நினைவு

      
    நானும் புத்தகம் படிக்கிறேன் என்று தலைக்கு கிழே உயரமான தலையணை வைத்து படிப்பதற்கு படிக்காமலேயே இருந்து விடலாம்..இப்படி படிப்பது சுகமாக இருக்கும்தான்...சுயனுபவம்..அப்படி படித்ததில் எனக்கு cervical பிரச்சினை வந்து பெறும் அவதிபட்டேன்..மருத்துவரிடம் சென்றால் இது தொடக்கம்தான் என்று சொல்லி மாத்திரை கொடுத்தார்..தேறவில்லை..அங்கு இருந்த ஒரு பாட்டியிடம் இதற்கு என்று தனியாக யோகா பயின்று பின்பற்றி பின் குணமானேன்..இப்போது தலையனையே உபோகிப்பது இல்லை..
******

     தான் எழுதுவதை எல்லோரும் ரசித்து படிக்க வேண்டும் என்ற எண்ணம அனைவருக்கும் இருப்பதுதான்...இதற்கு ஒரேவழி உருப்படியாக எழுத வேண்டும்.அதைவிடுத்து நானும் எழுதுகிறேன் என் எழுத்தை யாரும் படிப்பதில்லை என்றால் அது அவர்களின் கஷ்டம..சில புதிய எழுத்தாளர்கள் சுஜாதா வீட்டு மளிகைக்கடை சீட்டை வெளியிட்டால் கூட படிப்பார்கள் எங்கள் எழுத்தை படிக்க மாட்டார்கள் என்று படித்ததாக நினைவு.....உண்மைதான்.. சுஜாதா தனது மளிகைசீட்டை வெளியிட்டாலும் என்னை போன்றவர்கள் படிப்பார்கள்.

     
   இங்கு நான் எழுதியிருக்கும் நூறு பதிவில் இன்னும் யாரும் படிக்காத நான் மட்டுமே படித்த பதிவுகள் நிறையா இருக்ன்றன.எப்போதும் போல ரசித்து எழுதியவைதான் அவைகளும்.....நான் எழுதியவைகள் பெரும்பாலும் ஏதாவது சிறு அறிவியல் விசயம் கலந்து இருக்கும்..இல்லையென்றால் கொஞ்சம் நகைச்சுவை கலந்த விசயம்.

 
   வெறும் அறிவியலை மட்டுமே கட்டுரைகளாக எழுதிவிட்டு உர்ரென்று உட்கார்ந்து இருந்தால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து அறிவியலோடு கொஞ்சம் நகைச்சுவையும் கலந்தேன்..சொல்லவரும் ஒரு அறிவியல் விசயம்,அதற்கு தேவையான கதைக்கரு மற்றும் கற்ப்பனை கதாபாத்திரம் இதுதான் நான் உபோயோகிப்பது.

இதற்காக நான் உருவாக்கி தொடர்வதுதான் வைத்தி என்ற மருத்துவர், புனி என்ற மாணவி. ஒரு இடத்தில் ஜீனோ போன்ற நிசி எனும் நாயை உபோயோகித்து இருப்பேன்.மற்ற இடங்களில் என்னைவைத்தே எழுதுவது வழக்கம்..இதில் வரும் கணேஷின் கேரக்டர் உண்மை..சொல்லும் விசயம் கற்ப்பனை.

     
    விசயங்களை சொல்லும்போது தேவையானவற்றை சுருக்கமாக புரியும்படி சொல்வது வழக்கம். ஒரு பத்தியில் சொல்லும் விசயத்தை ஜவ்வாக இழுத்து நானும் எழுதுகிறேன் பார் என்று ஜவ்வு முட்டாய் விற்பது பிடிக்காது.சுஜாதாவை மட்டும் படித்ததால முதல் வரியில் கதையை ஆரம்பித்து சொல்லவரும் விசயத்திற்கு முக்கியம் கொடுப்பது பிடிக்கும்.ஏதாவது எழுத வேண்டுமே என்பதற்காக ஏற்க்கனவே சொன்ன விசயத்தை மீண்டும் சொல்லி அரைத்த மாவை அரைக்க விரும்பியதில்லை அந்த நேரத்தில் ஏதாவது உருப்படியாக புத்தகம் படிப்பேன்.

   
    நான் சொல்லும் விசயங்களை எல்லோரும் புரிந்து கொண்டு ம்ம் நன்றாக புரிந்தது என்று நிம்மதியடைவார்கள் என்றில்லை..சிலருக்கு அறிவியல் பிடிக்காமல் அதை வெறும் வார்த்தைகளாக படித்து நகர்ந்துவிட்டு கதையின் முடிவு என்ன என்பதுக்குகூட படிக்கலாம்.. ஆனால் என் துரதிஷ்டம் யாரும் எதை விரும்பினார்கள் என்பதை பின்னுட்டத்தில் சொல்வதேயில்லை..எனது சில தடுமாற்றங்களுக்கு படிப்பவர்களின் கருத்து இல்லாததும் ஒரு காரணம்.

 
    இந்த நிலையில் நூறு பதிவுகளை முடித்து இருக்கிறேன்..சாராம்சமாக பார்க்கும்போது கொஞ்சம் உருப்படியாகத்தான் எழுதி இருக்கிறேன்..வாசிக்கும் ஆர்வம இன்னும் குறையவில்லை என்பதால் நிறைய எழுதுவேன்..கண்டிப்பாக அறிவியல்தான்..... ஏதாவது வித்தியாசமாக சிலவற்றை எழுத எண்ணம இருக்கின்றது.

இதுவரை என் பதிவுகளை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்..முடிந்தவரை எப்படி எழுதினால் நல்லா இருக்கும் என்பதை சொன்னால் கொஞ்சம் திருத்த முடியும்...அதே நேரத்தில் எனது பதிவுகளை பலரும் படிக்க உதவிய இன்டலி, உலவு,தமிழ் மணம் போன்ற தளங்களுக்கு நன்றிகள்.

    
   பதிவின் தலைப்பு பற்றி..... சாதரணமாக சுஜாதா என்று பெயர் போட்டு எழுதுவதுக்கும் அவரின் ரசிகனாக நூறாவது பதிவில் அவர் பெயரை போடலாம் என்ற எண்ணம்தான்..வருகின்ற காலங்களில் எழுத போகும் 200,300 வது பதிவுக்கும் இதே தலைப்புதான் விசயமும், அனுபவும் வேறாக இருக்கலாம் அவ்வளவே.

என்னவள்..

    மயங்கி இருந்தாள்....ஆய்வுகூடத்தில் கிடத்தியிருந்தேன்...சுத்தமாக விருப்பமில்லைதான்..  அதிகம் விரும்பும் அவளை  மயக்கமாக்கி இந்த நிலையில் வைத்து இருப்பதற்க்கு...எல்லாம் அவளின் மீது இருக்கும் அதிக காதலின் தாக்கம்..சரியாக சொன்னால் அவளை நான் சுற்ற ஆரம்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகின்றது...இந்த நிலையில்தான் இரண்டு நாளைக்கு முன்....அவளோடு கிடைத்த தனிமையில்..

"ஏதாவது சொல்லலாமே?"

"என்ன சொல்லணும்?" என்றாள்

    "இதைத்தான் நான் கேட்கும்போதேல்லாம் சொல்றே. நான் எதுக்கு உன் பின்னாடி சுத்துகிறேன்னு உனக்கு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா? பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே இப்படியே மௌனமாக இருந்தா என்ன அர்த்தம்?"

    "இவ்வளவு நாள் பின்னாடி சுத்தி பார்த்ததில் என் செய்கையில் உனக்கு ஒன்றும் புரியலையா என்ன?"

"இல்லை...அதானே கேட்கிறேன் சொல்லேன்?"

    "இப்போ ஏதும் சொல்வதாக இல்லை...நீயே புரிஞ்சிக்கோ" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள்.

     அப்படி ஒன்றும் செய்கையினால் புரியும்படி சொன்னதாக நினைவில்லை,அப்படியே இருந்தாலும் நான் அதை சரியாக  புரிந்து கொண்டு இருக்கவில்லை அதுதான் பிரச்சினை..கேட்டாலும் மறுக்கிறாள்...அவளது செய்கைகள் என் காதலை மறுப்பதாக இருந்ததில்லை..தினமும் பலமுறை பார்த்துகொள்வோம், சிரித்தால் ஏன் இவன் சிரிக்கிறான் என்பது சில நொடிகள் பார்த்துவிட்டு செல்வாள், கிடைத்த தனிமையில் பேசினால் அமைதியாக பதில் சொல்வாள் அதில் ஒன்றும் புரியும்படி அர்த்தம்   இருக்காது..மேலே சொன்னது போல்..

     மனது முழுவதும் அவளின் நினைவு இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு பதில் சொல்லாத நிராகரிப்பும் அவளின் மீது இருக்கும் காதலை அதிகமாக்கியதுதான் உண்மை...சில நாட்கள்வரை கேட்க தயங்கிய நான் இப்போதெல்லாம் நேரடியாகவே கேட்டுவைக்கிறேன் இருந்தும் ஆமாம் அல்லது மறுத்தோ சொல்ல மட்டேன்கிறாள்...அதிக வலிகள் தரும் விசயம் இதுதான்...


     ஒரு முடிவுக்கு வந்தேன்...பொறுமையில்லை...இவள் என்னதான் நினைத்துகொண்டு இருக்கிறாள் என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும்...அவளின் அனுமதியோடு நடப்பது சாத்தியமில்லை...இதுக்கு நான் படித்த அறிவியல் கைகொடுக்கும் நான் செய்யபோவது அவளது மூளையில் இருந்து அவளுக்கு தெரியாமலே நினைவுப்பகுதியில் இருக்கும் தகவலை திருட போகிறேன்...அதாவது சில நாள்களுக்குள் அவள் என்ன நினைத்து இருந்தாள், எதை சேகரித்து வைத்து இருக்கிறாள் என்பதை அறிவதின் மூலம் என்னை பற்றி அவள் என்ன நினைத்து இருக்கிறாள் என்பதையும் அறியமுடியும்..அதோடு கடந்த இரண்டு தினங்களில் அவளை காதலுக்காக நிறைய வற்புறுத்தி இருக்கிறேன்...

    பெரியதாக அவளை கஷ்டபடுத்தபோவதில்லை, மனித மூளையில் நிகழ்வுகளை அல்லது பல உணரும்  விசயங்களை சேமிக்கும் பகுதிகள இரண்டு பகுதிகளாக இருக்கும்,ஒன்று elaborate encoding, மற்றொன்று shallow encoding , இதில் elaborate encoding நீண்ட கால நினைவுகளை சேமிக்கும் முறை. இதில் பதிந்து விட்டால் கூடிய சீக்கிரம் மறக்காது..எல்லாம் ஆழமாக பதியபட்டவைகள்..பல வித்தைகள் செய்து காதலியிடம் வாங்கிய முதல் முத்தம், அல்லது காதலை சொல்லபோய் அவள் செருப்பு காட்டிய இந்த மாதிரி முக்கியமான நிகழ்வுகள், shallow encoding என்பது தற்காலிக நினவுகளை சேமிக்கும் முறை...இதில் அன்றாடம் நிகழும் சில சிறிய நினைவுகள் மட்டுமே கையாளும் ஒன்று..கணினியில் இருக்கும் RAM போன்று சொல்லலாம்...காலையில் பார்த்த முடி நீளமான பெண்ணை பற்றி அன்றைய மாலையில் மட்டும் நண்பனிடம் சிலாகிப்பது,அம்மாவிடம் வாங்கும் திட்டுகளை மறந்து மறுநாளும் அதே தவறை செயவது, பேருந்தில் வாங்கிய பயணசீட்டின் விவரம் இதுபோன்ற அன்றாட வேலைகளுக்கு உதவுவது..இவை ஆழமாக பதிந்து இருக்காது..

    நான் செய்ய போவது முதலில் இந்த shallow encoding  பதிய பட்ட தகவல்களை வெளிய எடுத்து அதில்  ராசாயன மாற்றங்களாக சேமித்து வைக்கபட்டு இருப்பவைகளை  புரிந்துகொள்வதுதான்...இதன் மூலம் அவள் என்னைப்பற்றி என்ன நினைத்து இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்..அப்படி இல்லையென்றால்  elaborate encoding ள் தேட வேண்டும்...shallow encoding  ல்  தற்காலிமாக பதியும் எண்ணங்கள் ஆனது neuron  செல்களுக்கு இடையே இருக்கும் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த கலவைகளால் கொஞ்சம் நேரம் மட்டும் நிறுத்திவைக்கப்படும் ஒன்று..பதியப்படும் தகவல்களுக்கு ஏற்ப அது களைந்து நம்மை மறக்க செய்யும்..அதே போலத்தான் elaborate encoding இதில் கூடுதலாக சில ப்ரோடீன்கள் உள்ளே செல்லும் தகவல்களை அதிக நேரம் நிறுத்தி வைக்கும்..இவளை பொறுத்தவரையில் shallow encoding உள்ளவற்றை படித்தாலே போதுமானது..தொடர்ந்தேன்..

    அவளுக்கு நான் கொடுத்து இருந்தது சாதாரண மயக்கம் தரும் சோடியம் பென்தால் மருந்துதான்..வேகமாக முடிக்க வேண்டும்..தலைக்கவசம் போல் இருந்த அந்த கருவியை அவளது தலையில் பொருத்தினேன்..மூளையில் ஏற்ப்படும் அல்லது ஏற்ப்பட்ட மின்சார அதிர்வுகளை கண்டறிய நான் கண்டு பிடித்தது..மூளையில் ஏற்ப்படும் ரசயான மாற்றத்தையும் படித்து சொல்லும்...அப்படி பெற்ற தகவலை கணினியில் சேகரித்து பின் அதை சாதரணமாக புரிந்துகொள்ளும் மொழிக்கு மாற்றினேன்..சரியாக வந்தது.அவை வரிசையாக..

லில்லி பூனை என்னை கன்னத்தில் பரண்டாமல் இருந்திருந்தால் அப்பா அதை தூக்கிகொஞ்ச  தடைபோட்டு இருக்கமாட்டார்...

ச்சே என்ன அருமையாக கவிதை எழுத தெரிந்தாலும் அதை வீட்டில் வைக்க முடியாமல் கிழித்துதான் போட வேண்டியது இருக்கு..

கணேஷ் என்னை எப்படி காதலிக்கிறான் அவனிடம் நானும் உணமையை சொல்லியிருக்கலாம்..எவ்வளவு நாளைக்குததான் இப்படியே இருப்பது....அவன் மனசு மாறிவிட்டால்?

நான் நல்ல பெண்தானே இருந்தும் வீட்டில் எதுக்கு இவ்வளவு கண்டிப்பு...இது இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..

வீட்டில் உள்ள நிலமைக்காகத்தான் என் காதலை இவ்வளவு நாள் சொல்லவில்லை என்பதை கணேஷிடம் சொல்லும்போது அதை அவன் நம்புவானா?..அய்யோ வருகிறானே..என்னை நெருங்கி வந்துட்டான்..கையில் ஊசி வைத்து இருக்கிறான்...என் கையில்....குத்தி விட்....

அதற்குபிறகு நடந்ததை கதையின் முதல் பத்தியில் இருந்து படிக்கவும்




((இதில் மூளை தகவலை சேமித்து வைக்கும் முறை சரியானது.அதை நான் எடுப்பது கற்ப்பனை...))

தேடல்..

     "வையாமல் என்னைக்காவது  நீயா  தேச்சு இருக்கியா? பாரு முடியை கத்தாழை நார் மாதிரி"  திட்டியபடியே என் தலையில் பாட்டி எண்ணை தேய்த்து கொண்டு இருந்த போது

     "கணேஷ் இல்லையா?"  சத்தம் மறு வாசலில் இருந்து வந்தது.  பாட்டி முதலில் எட்டி பார்க்க பின்னாடியே நானும் பார்த்தேன் தூக்கிவாரிபோட்டது..என்னவள்  தோழியுடன் நின்று இருந்தாள்...பாட்டி  என்னவென்று விசாரித்தார்..அவர்கள என்னை பார்க்கணும் என்று சொல்ல ஒரு பார்வையோடு பாட்டி விலகி உள்ளே சென்றார்கள்

"கணேஷ் உனக்கு ஒரு வேலை?" என்றாள் என்னவள்

    "இப்ப எதுக்கு இங்க வந்தே சும்மாவே சந்தேகம் இருக்கு நம்ம மேலே" என்றேன் மெதுவாக

    "நீ கொஞ்சம் சும்மா இரு நீயே காட்டி கொடுத்துருவே..நான் ஒரு வேலையாகத்தான் வந்தேன்..உன்னை கூப்பிட்டு வரச்சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் அதான் வந்தோம் வா போவோம்" என்று சொல்ல அருகில் இருந்தவள் சிரித்தாள்


"யாரு எதுக்கு?"

     "ஆத்துல தண்ணீ அக்கரைக்கும் இக்கரைக்கும் போச்சில்ல அப்ப நம்ம ஊருபக்கம் இருக்கிற கரையை அரிச்சதுல அங்க ஒரு கதவு மாதிரி இருக்கு...எல்லோரும் சொல்றாங்க அந்த கதவு அங்க இருந்து நேரா நம்ம பெருமாள் கோயிலுக்கு வார குகையாம்,கோயிலுக்கு பூஜை செய்ய தண்ணீ ஆற்றிலிருந்து இந்த வழியாகத்தான் எடுத்துட்டு போவாங்கலாம் அது இப்ப நல்லா வெளிய தெரியது.." என்றாள்

"சரி போ நான் அப்புறம் வந்து பார்த்துக்குறேன்"என்றேன்

    "உன்னை யாரு பார்க்க கூப்பிட்டா அந்த கதவு  பாறையாள மூடியிருக்கு அதுக்கு மேல ஏதோ பாட்டு, எழுத்து எல்லாம் இருக்கு நீதான் என்கிட்டே சொல்லியிருக்கியே உனக்கு இந்த மாதிரி கண்டுபிடிக்கிறதுன்னா ரெம்ப பிடிக்கும்னு..அதான்  அங்க உள்ளவங்ககிட்டே சொன்னேன் நீ வந்து இருக்கேன்னு அதான் கூப்பிட்டு வரச்சொன்னாங்க"

    "அடிப்பாவி இதுல என்னை எதுக்கு மாட்டிவிட்டே கண்டுபிடிக்கலன்னா மானம் போகுமே?"

"அப்ப என்கிட்டே சொன்னது எல்லாம் பொய்யா?"

    "இல்லை உணமைதான்...இந்த மாதிரி விசயத்துல மட்டும் என்னை சேர்த்துவிடு .இன்னைக்கு காலையில் பூனைகுட்டிக்கு அத்தனை முத்தம் கொடுத்து கொஞ்சினியே அதோடு சேர்க்க சொன்னப்பமாட்டும் எவ்வளவு கோபம வந்துச்சி உனக்கு. ...."

   "நீ வந்தா வா இல்லேன்னா போ எனக்கென்ன" என்று கோபமாக சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்

    "சரி நில் வருகிறேன்"..பின்னாடி ஓடி அவளோடு சேர்ந்தேன்..ஏதும் பேசாமல் நடந்தோம்..கோபத்தில் இருந்தாள்..தூரத்தில் கூட்டம் தெரிந்தது..கரையை விட்டு கிழே தண்ணீ போய் கொண்டு இருக்க அந்த கதவின் முன்னால் எல்லோரும் நின்று இருந்தார்கள்..அருகில் இருந்த கொஞ்சம் மண்மேடு,முட்புதர்கள அகற்றப்ட்டு சுத்தமாக இருந்தது...

        அவள் சொனனதையே அவர்களும் சொன்னார்கள்..பாறையை பார்த்தேன்...அதின் மேல் சில எழுத்துக்கள் ஒரு பத்தியில் இருக்க, சற்று நடுவில் அ உ எ என்ற எழுத்துகளும் அதன் கிழே இந்த இரண்டு பாடல்களும் இருந்தன..

அ உ எ

முக்கூடி முழுமையாகி ஒன்று தவறுமது
மூன்றாமடி தனில் ஆறாமிடத்தில்

முழுமைகூட முதலோடு ஆறுகூடலோ அல்லது
முழுதும் கடைக்குச் சமம் 


    எல்லாத்தையும் வாசித்து முடித்தபோது கொஞ்சம் தலைசுற்றியது...உள்ளுரில் காதலியை வைத்துக்கொண்டால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..நமது திறமையை எப்படியாவது வெளிபடுத்தி கொண்டே இருக்க வேண்டும்...

     அந்த பத்தியில், "கிழே உள்ள மூன்று சட்டங்ககளை அதில் உள்ள எழுத்துக்களின் சரியான வரிசையில் அமைத்தால் பாறைகள் விலகி வழி கிடக்கும்.. தவறாக மாற்றினால்" என்பதோடு நிருத்தப்ட்டு இருந்தது...

    அருகில் இருந்த பெரியவர் "முடியுமா பார் தம்பி இல்லையென்றால் பக்கவாட்டில் மண்ணை விளக்கி உள்ளே போகலாம்" என்றார்

    "நான் முயற்சிக்கிறேன் திறந்துவிடலாம்" என்றேன்..கூட்டத்தில் ஒருத்தியாய் நின்று இருந்தாள் கண்ணில் கோபம இருந்தது....

     அதிகம் யோசிக்க வழியில்லை வெறும் மூன்று எழுத்துக்கள் இரண்டு பாடல்கள், பார்த்தேன் எல்லாம் உயிர் எழுத்துக்கள், அந்த எழுத்துக்களில் ஒன்றும் இல்லை... அதை சரியான வரிசையில்  அமைக்க அந்த பாடல் சரியாக  புரிய வேண்டும் இரண்டு முறை நிதானமாக வாசித்த பார்த்தேன்......கண்டிப்பாக இது எண் சம்பந்த்தபட்டவையாக இருக்க வேண்டும், "முக்கூடி" என்றால் வேறு அர்த்தம் சரியில்லை அந்த பறையில் மொத்தம் நான்கு மூலைகள் இருந்தன..அதில் மூனறை மட்டும் இணைத்து எழுத்தை கண்டுபிடிப்பது முடியாது, அடுத்துவந்த பாடல்களும் எண்களை வைத்தே இருப்பதை உறுதிபடுத்துவையாக இருந்தன...ஒன்று கூடி,ஆறாமிடம். ஆறுகூடல், போன்றவைகள்


   தமிழில் தனியாக எண்கள் இருப்பது நினவுக்கு வந்தது,  பழந்தமிழர்கள் அந்த எண்களை உபோயோகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம், அந்த எழுதுக்களுக்குரிய எண்களை யோசித்தேன்...
அ = 8 உ  = 2, எ  = 7,  

    இப்போது முதல் பாடலை இத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் "முக்கூடி" அந்த மூன்று எண்களையும் கூட்டினால்  18, ஒன்று குறையும்  அப்படிஎன்றால் 17, மூன்றமடி தனல் ஆறாமிடத்தில் மூன்றமடியில் ஆறாம் இடத்தில வருவது 6*3 = 18, இதில் ஒன்று குறைந்தால் ..... இரண்டும் ஒன்றுதான், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் தமிழில் எண்களைத்தான் குறிக்கிறது...முதல் பாடலில் கிடைத்தது 17 என்ற எண்..... கொஞ்சம் மூச்சு விட்டேன்...

     அடுத்த பாடல் முழுமைகூட என்றால் கிடைத்த 17 இது கூடினால் 7+1 = 8, அடுத்து முதலோடு ஆறுகூடலோ இதற்கு அர்த்தம் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டேன் அதாவது முதலில் உள்ளதோடு ஆறை கூட்டினால் 8 கிடைக்கும் என்கிறது, அப்படி என்றால் முதல் எண் அலல்து எழுத்து இரண்டை குறிக்க வேண்டும்..பார்த்தால் உ = 2 , முதல் எழுத்து என்று முடிவாகியது.. மீதம் இருப்பது இரண்டு எழுத்துக்கள்..அடுத்தவரி முழுதும் கடைக்குச் சமம். முழுதும் என்றால் கூட்டி கிடைத்த 8  அந்த எழுத்தில் எட்டை குறிக்கும் சொல் அ = 8, ஆக இந்த கடைசியில் வரும், மீதம் இருக்கும் நடுவில் வரும் தீர்ந்து இருந்தது சரியான வரிசைமுறை  உ எ அ

      ஒருமுறை நான் யோசித்து  பார்த்ததை சரிபார்த்துவிட்டு பொருந்தி  இருக்க அந்த பறையின் மீது இருந்த சட்டங்ககளை கண்டுபிடித்த எழுத்தின் வரிசைக்கு நகற்றினேன்..கூட்டம் எல்லாம் ஆர்வமாக முன்னோக்கி வந்தார்கள் ..மூன்றாவது சட்டத்தை சரியாக அமைக்கவும் அந்த பெரிய பாறையின் மத்தியில் இருந்த ஒரு பாறை பகுதி விலகி உள்ளே விழுந்தது..தொடக்கத்தில் ஒரு பெரிய பள்ளம அதான் மீது இந்த பாறை விழுந்து அதை கடக்கும் விதத்தில் ஒரு பாதை அமைப்பதாக  இருந்தது..ஆற்றில் தண்ணீ போனதால் அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது..

    ஏதோ பெரிய நிம்மதி...நல்லவேளை பிழைத்தோம் என்றிருக்க..எப்படி திறந்தாய் என்கிறவர்க்ளுக்கு விளக்கம் சொல்லிகொண்டே என்னவளை கூட்டத்தில் தேடினேன் கிடைக்கவே இல்லை..போயிருந்தாள்.

காதலிப்பது எப்படி??


   நீண்டநாள் தயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து வாங்கியே விடுவது என முடிவு செய்து கடைக்குபோனேன்..இன்னும் முழுதும் தயக்கம் போகவில்லை...இருந்தாலும் கடந்த நான்கு வருடங்கள் முயற்சிசெயதும் முடியவில்லை என்கிறபோது இதுவாவது உதவாதா? என்ற எண்ணம்தான்..

   எப்படி காதலிப்பது என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்வது முதலில் ஒருமாதிரியாக இருந்தாலும் வேறு வழியில்லை..முதலிலேயே அந்த குறிப்பிட்ட புத்தகத்தின் ஆசிரியர் விலை போன்ற தகவல்கள் சேகரித்துக்கொண்டு போனதால் தேட அவசியமில்லாமல் வாங்கி கொண்டு திரும்பினேன்..

   அட்டைப்படம் பார்க்கும்போதே காதல் உணர்ச்சியில் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தது..திறந்தேன் முதல் சில பக்கங்களில் ஆசிரியர்,புத்தக குறிப்புகளை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் அந்த புத்தகம் மூன்று பகுதிகளை கொண்டுள்ளதாகவும், முதல் பகுதியை படித்து செயல்படுத்தாமல் கண்டிப்பாக அடுத்த பகுதியை படிக்கககூடாது என்று எழுதியிருந்தது..

   அதேபோல் அந்த புத்தகத்தில் மூன்று பகுதிகள் பிரிக்கபட்டு முதலிலேயே படிக்க முடியாதவாறு தனித்தனியாக ஒவ்வொன்றிக்கும் ஒரு உறை போடப்பட்டு இருந்தது..நமக்கு எப்போது எந்த பகுதியை படிக்க வேண்டுமோ அப்போதுமட்டும் அதை உடைத்தால் போதுமானது..


   ஆர்வத்தில் வேகமாக முதல் பகுதியின் உறையை கிழித்து படிக்க ஆரம்பித்தேன்..இரண்டு நாள்களில் முடிந்து இருந்தது..முடிவில் இந்த பகுதியில் படித்ததை செய்யாமல் அடுத்த பகுதியை படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை வேறு..

   முதல் பகுதியின் சாராம்சம்... பிடித்த பெண்ணின் மனதில் எப்படியாவது அவளுக்கு பிடிக்கின்ற வகையில் நீங்காத இடம் பிடித்து காதலை மறைமுகமாக தெரிவிக்கவேண்டும். இது எனக்கு தெரிந்ததுதான் இருந்தாலும் கடந்த வருடங்களில் முடியாமல் போனது என்னமோ உணமைதான்..இதை எப்படி எளிதாக செய்வது என்பதற்கும் உதவிகள் கொடுக்கப்பட்டு இருந்தன...

   அடுத்து வந்த நாள்களில் நான் ஏற்க்கனவே சுற்றின பெண்ணின் பின்னாடி சுற்றி..அவளின விழிகளில் கயிறை கட்டி இழுக்காத குறையாக இழுத்து  பார்வையை என் பக்கம் திருப்பி எப்படியோ ஒருவழியாக பேச ஆரம்பித்து..காதலை சொல்லியும் விட்டேன்..காதல் ஆரம்பித்ததில் இருந்து அவளோடு ஊர்சுற்ற,பேச இவற்றுக்கிடையில் அந்த புத்தகம் மறந்தே போனது..

   அந்த புத்தகத்தில் சொன்னபடி காதலித்ததோ என்னனமோ எந்த வித ஊடல் இல்லாமல் போனது..காதலில் நாட்கள அதிகமாக அவளின் அழகும் கூடிக்கொண்டே போனது போல ஒரு எண்ணம..அவள் செய்வது எல்லாமே அழகாய் பிடித்து இருந்தது...

   ஒரு தனிமையில் அந்த புத்தகம் என் கண்ணில் பட..ஆர்வமாக அடுத்த பகுதியில் என்ன இருக்கும் படிக்க எண்ணினேன்...இரண்டாவது பகுதியை கிழித்து பார்த்தால் அதிலுள்ள பக்கங்ககள் எல்லாம் வெறுமையாக இருந்தன..அதன் இறுதி பக்கத்தில் அடுத்த பகுதியை பார்க்கவும் என்ற வார்த்தை மட்டும்..

   வேகமாக அடுத்த பகுதியின் உறையை கிழித்து படித்தேன்.. அதில் இருந்ததை அபப்டியே கொடுக்கிறேன்..
   முதல் பகுதியை நீங்கள் படித்ததில் கண்டிப்பாக உங்களுக்கு அருமையான காதலியும், சுகமான காதல அனுபவும் கிடைத்து இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் காதலியுடன் செலவழித்த அருமையான அந்த நேரங்களினால் இரண்டாவ்து பகுதியில் நான் ஏதாவது எழுதியிருந்தாலும் படித்து இருக்க மாட்டீர்கள்.......

   அந்த வெறுமையான பக்கத்திற்கு இன்னொரு காரணம்..நீங்கள் இதுவரை கழித்த சுகமான நினவுகளை காதல் சொட்டும் வார்த்தைகளால் பக்கங்களை நிரப்புங்கள்..அது நான் எழுதி படிப்பதைவிட நீங்களே மறுமுறை அதை படிக்கும்போது சுகமாக இருக்கும்.

   அப்படி முதல் பகுதியை படித்து முயற்சித்து காதலி கிட்டாமல்..அடுத்த பகுதிகளையும், இதையும் நீங்கள் படித்து கொண்டு இருந்தால்...பிரச்சினை இல்லை...இரண்டு மற்றும் மூன்றாம் பகுதிகளில் கிழித்த உறைகளை  பொருத்திவிட்டு முதல் பகுதியை மீண்டும் படிக்க ஆரம்பியுங்கள்..

சில விசயங்கள் - 2



  இதில் கொஞ்சம் கற்ப்பனைசாக்லேட் கலக்காத சுயபுராணம், ஊர் பயணஅனுபவங்கள...எல்லாம் சுகமானவைகள.   நிறையா இருந்தாலும் நீங்கள் இவனுக்கு வேற வேலையில்லை என்று  ஓடாதவாறு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்...

    
சிறு வயதில் கதை கேட்கும் பழக்கம் அதிகம் உண்டு..காரணம் நண்பர்களோடு விளையாட்டில் சேராமல் "தொம்"மென்று தனியாக உட்கார்ந்து இருப்பேன்..அப்படியே விளையாடும் இடத்திற்கு போனாலும் சேர்க்க மாட்டார்கள்..அருகில் உட்கார்ந்து பார்ப்பேன்..நான்கு,ஆறு, ரன்கள எடுக்கும் போது அவர்கள் கத்துவதை ஏன் இப்படி கத்துகிறார்கள்? என்று ஆச்சர்யமாக பார்த்துவிட்டு அப்படியே எழுந்துவந்தால் வீடு போக பிடிக்காது, போனால் படிக்க சொல்வார்கள். அதற்காக பொழுதுபோக பாட்டிகளிடம் கதைகேட்பது தொடங்கியது, எனைபோல சிலரும் இதில் அடக்கம்.

   பாட்டிகளின் கதைகளில் பெரும்பாலும் ராஜா ராணி இவர்களோடு தீமை செய்யும் ஒருவன் அவனுக்கு இறுதியில் கிடைக்கும் நீதி இதுதான் இருக்கும்..அந்த வயதில் இது எனக்கு பெரிய விசயம்..நிறையா கேட்டிருக்கிறேன்...இந்த முறை பயணத்தின் போது எனக்கு கதை சொன்ன பட்டிகளில் நிறையாபேர் உயிரோடு இல்லை..வருத்தப்பட்டேன்..மீதி இருந்தவர்களும் தங்களது பேரன் பேத்திகளோடு தொலைகாட்சியிடம் கதை கேட்டுகொண்டு இருந்தார்கள்.. .

  அவர்களை சந்தித்து நான் எனக்கு மட்டுமே புரிகின்ற மாதிரி  கதைகள் எழுவதை சொல்லலாம் என நினைத்தேன்....சிறுவயதில்தான் கதை கேட்டு உயிரை வாங்கினான்..இப்போது கதை சொல்லி படுத்தபோறானே.. என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்...
************.

   ஆற்றில் நீர் போய்கொண்டு இருந்தது...குளிப்பதற்கு மூன்று மணியளவில் போனேன்..வெயிலில் குளித்தால் கொஞ்சம் குளிர் கம்மியாக இருக்குமே என்ற எண்ணம..தெளிவான நீரை பார்த்தபடியே அப்படியே உட்கார்ந்து..யோசிக்க ஆரம்பத்ததில் ஆற்றின் நீரை போலவே எண்ணங்களும் நிறையா ஓடியது....என்னவெல்லாம் யோசித்தேன் என்பதை உணராமலேயே தனிமையாக இரண்டுமணி நேரம் கழித்து இருந்தேன்..அந்த நேரம் சுகமானவைகள்..

   சாயங்காலம் ஆனதும்  மீன் பிடிக்க சிறுவர்கள் கையில் சாரத்துடன்(லுங்கி) வந்து இருந்தார்கள்..இரண்டுபேர் ஒவ்வோரு முனையை பிடித்து நீரில் முக்கி மீன் வந்தவுடன் தூக்கி  மீனை பிடிக்கும் முயற்சியில் இருந்தார்கள்..மற்றொருவன் வேகமாக வந்து ஒரு ஊறறை தோண்டினான..பிடித்த மீன்களை போட்டு வைக்க..

   பார்த்து கொண்டு இருந்த நான்..அவர்களிடம் சென்று இப்படி பிடிப்பதைவிட நான் சொல்லுற மாதிரி பிடிங்க என்று சொல்லி அந்த லுங்கியின் ஒரு முனையை முடிச்சிட்டு அதை அப்படியே மீன் உள்ள பகுதியை பார்த்து இழுத்து சென்று மீன் நிறையா உள்ளே சென்றவுடன் தூக்குமாறு சொல்ல ..அவர்கள் அதை செய்ய தொடங்கினார்கள்.. எனக்குள் கொஞ்சம் பயம்..அது தேறவில்லை என்றால் கட்டாயம் வைவார்கள்..நல்ல நேரம் நிறையா மீன் வந்தது.. அந்த சந்தோஷத்தில் மீதம் இருந்த ஒருவன் அவன் தோண்டியிருந்த ஊற்றில் இருந்து துள்ளி விழும் மீன்களை மீண்டும் உள்ளே எடுத்துபோடும் வேலையை என்னிடம் கொடுத்து விட்டு ஆற்றுக்குள் குதித்தான்...அபப்டியே நேரம் போக இரவு வந்து குளிர்ந்த காற்று அடிக்க ஆரம்பித்தது... நடுக்கத்தோடு குளித்துவிட்டு வீடு திரும்பினேன்.

***********

   பதிவரான பாபு (இம்சை அரசன் ) அவர்களை  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..வலைப்பூககளில் வாயில் அரிவாளோடு சுற்றினாலும் அருமையான மனிதர்..நிறையா பேசினோம்.பதிவர்கள் பற்றிய சில வியங்கள் புதியதாக தெரிந்து கொண்டேன்..

************

   வேலையாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வழியாக போக நேர்ந்தது..நினைவில் வந்தவர் சுஜாதா தான் ஏதோ அருமையான வித்தியாசயமான ஒருவித உணர்வு நான் சுஜாதா வாழ்ந்த ஊரை பார்க்கிறேன் அல்லது இருக்கிறேன் என்று நினைக்கும்போது.

   மனிதர் நிறையா பாதித்து இருக்கிறார் என்னை.  அந்த உணாச்சி புதுமையானவை வார்த்தைகள் இல்லை...நிறைய மாற்றியிருக்கிறார் நானும் மாறியிருக்கிறேன்..கற்று கொடுத்து இருக்கிறார் .....எப்போதுமே நினைக்கும்போது  மனதில் பெறும் வலியை  கொடுப்பது சுஜாதா இப்போது இல்லை என்பதே..அப்போதும் அதே வலி. இப்போது சுஜாதா இருந்தால் எப்படி இருக்கும் என்பதை  பற்றிய யோசித்துக்கொண்டே ஊர் வந்தேன்..