நான் don brown ன் புத்தகங்கள் படித்து இருக்கிறேன். அவரது அனைத்து புத்தகங்களுமே கண்டிப்பாக ஒரு விதமான cryptography topic யை கொண்டு இருக்கும்.
மேலும் ஒரு சிறந்த பொதுஅறிவு கலந்த பொழுதுபோக்கு புத்தகம் என்றால் அது இவருடையது என்றுசொல்லலாம்.
எனக்கு CERN யை அறிமுகபடுத்தியது இல்லாமல் ANTIPARTICLES பற்றி சற்று விரிவாக புரிந்து கொள்ள உதவியது இதுதான்.
(CERN – Consile Europeen pour la Recherhe Nucleare இது சுவிட்சர்லாந்து ல் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகும்)
அடுத்து THE DA VINCI CODE எல்லோரும் படித்து இருப்பிர்கள். இதைப்பற்றி நான் சொல்லத்தேவை இல்லை.என நினைக்கிறேன்.
மேலும் சில DECEPTION POINT, DIGITAL FORTRESS, THE LAST SYMBOL போன்றவைகள் இவரின் நல்ல நாவல்கள். (இவளவுதான் அவரும் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்......)
சரி நான் இப்போது கதைக்கு வருகிறேன்
நான் இவரின் the da vinci code படித்து முடித்தவுடன் அதில் இருந்து ஒன்றை எடுத்து என் சிறிய கற்பனையில் ஒன்றை முயன்றேன் அதை இங்கு தந்திருக்கிறேன்.
அந்த புத்தகத்தில் இருந்து எடுத்தது ஒரு என் கோர்வை இது இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு கணித அறிவியலார் உபோயோகித்தது.
அவரது பெயர் leondro Fibonacci. இவர் இடைக்காலத்தில் ஒரு தலை சிறந்த ஒரு கணித அறிவியளராக அறியப்பட்டார்.
சரி அந்த என் கோர்வை இதுதான் மிக எளிதான ஒன்றுதான்.
0,1,1,2,3,5,8,13,22,35,57,......... இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.
இதில் முதலில் உள்ள எண்னுடன் அடுத்து வரும் எண்னை கூட்டி அதற்க்கு அடுத்து வரும் எண்ணாக இடவேண்டும். அவ்வளவே.
சரி இதைவைத்து என் கற்பனை.....
குறிப்பு : இதில் வரும் கதாநாயாகியும் the da vinci code படித்தது இருக்கிறாள். ( கதையை படியுங்கள் எப்படி என்று புரியும்)
அந்த பேருந்துநிறுத்ததில் எப்போதும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும். அதற்கான காரனங்களை நாம் அலசி ஆராய்வதைவிட நம் கதைக்கும் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதற்கு நேராகவே சென்றுவிடுவோம்,
அந்த பேருந்து நிறுத்தத்தில் எப்போதும் போல் ஆட்கள் ஆரவாரமில்லாமல் மொத்தம் நான்கு பேரே நின்று இருந்தார்கள்.அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண், சற்று வயது முதிர்ந்த்தவர்.
அந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்கள் சற்று நடுத்தர வயதை சேர்ந்த்தவர்கள். மற்றோருவளுக்கு அதிகமாக இருந்தால் 23 வயது இருக்கலாம்.இவள் தான் நம் கதையின் கதாநாயகி.
இந்த நேரத்தில் அந்த பக்கத்தில் இருந்து வந்த ஒரு பேருந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றதில் அதில் இருந்து இரண்டு மூன்று பேர் உதிர்ந்தார்கள். .
அந்த இளம் வயது பெண்னைத்தவிர அனைவரும் அந்த பேருந்தில் சென்றுவிட்டனர். அந்த பெண் மட்டும் தனியாக அதே இடத்தில் நின்று இருந்தாள்.
அந்த பேருந்தில் வந்தவர்களில் ஒருவன்தான் அசோக் நம் கதையின் கதாநாயகன்,
அவன் பேருந்தில் இறங்கி அவன் வழியில் செல்லும்போது அந்த பெண்ணை பார்த்தான் அவளும் சொல்லி வைத்தாற போல் பார்த்தாள். இருவரும் சிரித்து கொண்டார்கள்.பின் அசோக் அவன் வழியில் சென்றுவிட்டான். ஆனாலும் அவள் அங்கேயே நின்று இருந்தாள்
இப்போது அசோக் பற்றி சில வரிகள் அசோக் மற்றும் அவன் நண்பன் ரமேஷ் ஒன்றாக தங்கி அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.
இன்று ரமேஷ்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அசோக் மட்டுமே வேலைக்கு சென்றான்,
வீட்டை அடைந்த்ததும் பேருந்து நிறுத்தத்தில் நடந்ததை சொன்னான். “அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான். ரமேஷிடம்.
அதற்கு ரமேஷ் எந்த பதிலும் சொல்லாமல் கட்டிலில் படுத்து இருந்தான்,
ஒரு முறை கூறியதில் எந்த ஒரு பதிலும் இல்லை என்பதை உணர்ந்த அவன் தன வேலையில் கவனமானான்.
பின் சற்று நேரம் கழித்து அசோக் முன் சொன்னதையே மீண்டும் ரமேஷிடம் சொன்னான்
அதற்க்கு ரமேஷ் “அதை என்னிடம் எத்தனை தடவை சொல்வாய். அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டாயே பின் என்ன அதுவும் இல்லாமல் நான் தான் தினமும் நீங்கள் பார்த்து சிரிப்பதை பார்க்கின்றேன ! ” என்றான்
இதனைக்கேட்ட அசோக் “ உனக்கு போறாமைடா எங்கே எனக்கு ஒரு அழகான பெண் காதலியாக கிடைத்துவிடுவளோ என்று அதனால் தான் நி இப்படி சொல்கிறாய்” என்றான்.
அதற்க்கு ரமேஷ் ஒன்றும் சொல்லவில்லை
இரவில் படுக்க போகும் முன் அசோக் சும்மா இருக்காமல் ரமேஷிடம் பேச்சை தொடர்ந்தான்.
அசோக் “அவளிடம் எப்படி எப்போது காதலை சொல்வது என்பது பற்றி எனக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி வழங்கேன்” என்றான். ரமேஷிடம்
அதற்க்கு ரமேஷ் “என்னை கொஞ்சம் நேரம் நிமதியாக புத்தகம் படிக்க விடுறியா........... உனக்கு ஏதாவது தேவையென்றால் வெளியில் சென்று நன்றாக யோசித்துவிட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டுவா..... என்னை தொந்த்தரவு பண்ணாதே........” என்று சொல்லி அவன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் ஆழ்ந்தான்.
இதைக்கேட்ட அசோக் ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொண்டு யோசிக்கதொடங்கி இருந்தான் அவளிடம் எப்படி தான் காதலை சொல்வது என்று.
மறு நாள் மாலை இருவரும் வேலைவிட்டு வரும்போது அதே இடத்தில அந்த பெண் நின்று இருந்தால்.
வழக்கம் போல் அசோக் அவளை பார்க்க அவளும் அசோக்கை பார்க்க இருவரும் சிரித்து கொண்டனர்.
இதை அருகில் இருந்து ரமேஷ் பார்த்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் இருந்தான்.
சிறிது தூரம் நடந்த பின் அசோக் “பார்த்தியா அவள் இன்றும் என்னை பார்த்து சிரித்தாள்” என்றான்.
அதற்க்கு ரமேஷ் வெறும் ம்ம.... கொட்டிவிட்டு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
மேலும் அசோக் தொடர்ந்தான் “அவள் என்னை பார்த்து சிரிக்கும் போது என் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன”......... என்றான்.
ரமேஷ் தன் ஓரக்கண்ணால் ஒரு முறைப்பு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் நடந்தான்.
இதற்க்கு மேல் ஏதாவது பேசினால் ரமேஷ்க்கு கோபம வந்து விடும் என்று அசோக்கிற்கு தெரியும் எனவே அவன் மேல் எதும் பேசாமல் நடந்தான்.
அன்று இரவு அசோக் அந்த பெண் சம்பந்த்தமாக வேறு எதுவும் பேசவில்லை.
மறு நாள் அதே நேரம் அதே இடம்..... அசோக் வந்து கொண்டிருந்தான். அருகில் ரமேஷ் இருந்தான்.
அன்றும் அந்த பெண் அங்கு இருந்தாள் அன்று அவள் சிரித்ததோடு மட்டும் இல்லாமல் அவள் இருந்த இடத்தில இருந்து இறங்கி அசோக்கை நோக்கி வந்தாள்.
அவள் அசோக்கை நெருங்க நெருங்க அவனக்கு ஒருவிதமான படபடப்பு அதிகமானது. அவன் சற்று திரும்பி அருகில் ரமேஷ் இருக்கின்றான இல்லையா... என்று பார்த்தான். ரமேஷ் அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்தும் அதை கண்டு கொள்ளாதவன் போல் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவன் அருகில் வந்த்தவள் தான் கையில் இருந்த ஒரு துண்டு காகிதத்தை அசோக்கின் கையில் திணித்துவிட்டு அவள் வந்த வழியில் சென்று அவள் முன்னர் இருந்த இடத்தில போய் நின்றாள்.
அசோக்க ச்ற்று நேரம் கழித்துதான் தன் இயல்பு நிலைக்கு வந்தான்.அது வரை திக,,,,,.... திக........ என அடிதுகொண்டிருந்த அவனது இதயம் இப்பொது சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.
அந்த துண்டு காகிதத்தில் சில எண்களும் அதற்க்கு கில் இந்த எண்ணிற்கு போன் செய்யுமாறு எழுதி இருந்தது.
அதில் இருந்த என் கோர்வையை அசோக் படித்தான். 92-149-57. இது அவனுக்கு புதியதாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தொலைபேசி என்னை அவன் இதுவரை பார்த்ததில்லை.
விடு வந்து சிறிது நேரத்தில் ரமேஷ் என்ன செய்கிறான்........ என்று பார்த்துவிட்டு சற்று தனியாக சென்று அந்த எண்ணிற்கு அழைத்து பார்த்தான்.
ஒரு பயனும் இல்லை. ஒரு பெண்ணின் குரல் அந்த
எண்னை சரி பார்க்குமாறு அறிவுரை கூறினாள்............
இரண்டு முறை விடாமுயற்சி செய்து பார்த்து தோல்வி அடைந்து சற்று கவலை அடைந்து விட்டிறக்குள் வந்தான்.
ரமேஷ் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தான். அசோக் இதுவரை நடந்த்ததை அவனிடம் கூறினான்.
அதற்கு ரமேஷ் “அந்த எண் தவறாக இருந்தால் நான் என்ன செய்ய......... நாளைக்கு சென்று அவளிடம் சரியான எண்னை கேள்” என்று சொன்னான்.
“ஒரு முறை நி இந்த போன் எண்னை பாரேன் இது பார்க்க ஒரு போன எண் போல் இல்லை சற்று வித்தியசமாக இருக்கிறது”. என்று அந்த துண்டுகாகிததை ரமேஷிடம் நிட்டினான். அசோக்
அதை வேண்டா....... வெறுப்பாக........ வாங்கி பார்த்தான். முதலில் அதை பார்த்த ரமேஷ் சற்று குழம்பினாலும் அந்த எண்களை எங்கோ பார்த்த நினைவு அவனுக்கு இருந்தது.
ரமேஷ் ஆச்சர்யத்துடன் “இந்த எண்னை அந்த பெண் உன்னிடம் கொடுத்தாளா என்ன?” என்று கேட்டான்.
அதற்க்கு அசோக் “ஆம” என்றான் மேலும் “ஏன் இதே என்னை ஏதாவது ஒரு பெண் ஏற்கனவே உன்னிடத்தில் கொடுத்து இருக்கிறாளா என்ன?’ என்று கேட்டு வைத்தான்
அதற்கு ரமேஷ் “இது போன் நம்பறா இல்லையா என்று எனக்குத் தெறியாது.ஆனால் இந்த எண் கொர்வையைப்பற்றி தெரியும்.” என்றான்
இந்த என் கோர்வை leondro Fibonacci என்ற இத்தாலி நட்டு கணித மேதையுடையது. இதன் அமைப்பானது ஒரு எண்ணிற்கு அடுத்துள்ள எண்னை கூட்டி அதற்க்கு அடுத்த எண்ணாக அமைக்கவேண்டும்.
இதைப்பார் என்று ஒரு காகிதத்தில் எழுத ஆரம்பித்தான். 0-1-2-3—5-8-13-22-35-57-92-149-241----- இப்படியே போய்க்கொண்டே இருக்கும்.இதில் பார் முதலில் உள்ள 0 மற்றும் 1 கூட்டினால் 1 கிடைக்கும் அடுத்து 2 யும் 1 யும் கூட்டினால் 3 கிடைக்கும். அந்த 3 யும் 2 யும் கூட்டினால் அடுத்து வரும் என் 5 கிடைக்கும் இவ்வாறு அமைக்க வேண்டும் என்றான்.
அவள் கொடுத்திருக்கும் இந்த எண்னும் இந்த கோர்வையை சார்ந்ததுதான். என்று சொல்லி அந்த எண்களை தனியாக எழுத ஆரம்பித்தான்.
92-149-57 இதை சற்று மாற்றியமைத்தால் அது இப்படி வரும் பார் என்று எழுத ஆரம்பித்தான் 92-57-149. இதுவும் அந்த என் கோர்வை முறையில் தான் இடப்படிருக்கிறது என்றான்.
அசோக் சற்றும் தாமதிக்காமல் வெளியில் விலகி சென்று அந்த எண்ணிற்கு அழைத்தான்.
அவன் எதிர்பார்க்காத மணி ஒலித்தது உடனே அவன் தயாரானான் முதல் வார்த்தை என்ன பேசுவது.......... எப்படி அறிமுகம் செய்து கொளவது என்று ..............அதற்குள் அடுத்த முனையில் இணைப்பு எடுக்கப்பட்டது.
அவள் தான் முதலில் பேசினாள். எப்படியோ கண்டுபிடித்துவிட்டாயே என்றாள் கொஞ்சும் குரலில்.
அதில் கிறங்கி போன அசோக் எனக்கு தெரியும் நி என் அறிவுத் திறனை கண்டு பிடிக்கத்தானே இந்த மாதிரி செய்தாய் என்றான்.
அதற்க்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இப்போதெல்லாம் வெளியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கின்றது அதுதான் காரணம்
இந்தத மாதிரியான முயற்சியில் இறங்குவதற்கு காரணம் வேறொன்றுமில்லை என்றாள் வேகமாக.
அசோக் சற்று குழம்பினான் அது அவனது பேச்சிலும் தெரிந்த்தது. “எனன சொல்லுகிறாய் போலீஸ் கெடுபிடிக்கும் இந்த எண்ணிற்கும் என்ன சாம்பந்த்தம்.........” என்றான்.
அதறக்கு அவள் “அதை எல்லாம் விவரமாக விளக்க இது நேரமில்லை. எங்கே எப்போது வர வேண்டும் என்று சிக்கிரம் சொன்னால் நனறாக இருக்கும்” . என்றாள்.
அசோக் இதயத்தில் லேசாக ஒரு கிறாள் விழுந்தது. அப்படி என்றால் நி என்னை பார்த்து சிரித்தது எல்லாம் ... என்று அவன் நிறுத்துவதற்கு முன்னாள்.. அதை எல்லாம் வைத்து நீயேதான் தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் அவள் மறுமுனையில் இருந்து.
நான் நினைத்தேன் நி என்னை காதலிக்கிறாய் என்று என்றான் அசோக்
அதற்க்கு அவள் அப்படி பார்த்தால் நான் எத்தனை பேரை காதலிப்பது சரி வேகமாக தகவலகளை சொன்னால் எனக்கு கொஞ்சம் நனறாக இருக்கும் என்றாள்
அசோக் தண் உடைந்தத குரலில் அப்படி என்றாள் நி அந்த மாதிரி பெண்ணா என்றான்
அதற்கு அவள் “பின் என்னை நி எந்த மாதிரி பெண் என்று நினைத்தாய்” என்றாள்
அசோக்தான் தொலைபேசியை முதலில் துண்டித்தான். அவன் முகம் தொங்கிபோய் இருந்தது.
அவன் கவலையுடன் வருவதைக்கண்ட ரமேஷ் “என்னடா ஆச்சு.........” என்றன்.
நடந்த்ததை அப்படியே சொன்னான். ரமேஷிக்கு முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கினான்.
அந்த நேரத்தில் அந்த அளவு அசோக் பாதிக்கப்பட்டிடிருந்த்தான் அவளால்.
தற்று அமதியான் குரலில் சரி அதான் முன்பே தெரிந்து விட்டதே அதை விட்டு விடு என்றான் ரமேஷ்.
இல்லைடா அவளை நான் நல்ல பெண் என்று நினைத்து கடந்த 3 மாதங்களாக உண்மையாகவே காதலித்தேன். ஆனால் அவளைப்பர்ர்த்தாயா...... அவள் எந்த மாதிரி பெண் என்று. என்றான் அசோக்க்க் உடைந்தத குரலில்.
ரமேஷ் அதற்க்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
மறு நாள் மாலை வேளைக்கு சென்று திரும்பும் போது அதே பெண் அந்த இடத்தில நின்று கொண்டு இருந்தாள்.
அவள் அசோக் மற்றும் ரமேஷ் செல்வதை பார்த்தாள் இப்பொழுது அசோக் அந்த பெண்னை திரும்பி பார்க்க வில்லை. அவன் நேராக பார்த்து நடந்தான்.
இதனைக கவனித்த ரமேஷ் சற்று தூரம் சென்று அவள் அசோக்கை இன்றும் பார்க்கிறாளா..... இல்லையா..... என்று திரும்பி பார்த்தான்.
அவள் பார்த்து கொண்டே தான் இருந்தாள்
ரமேஷ் அவளை பார்த்ததால் அவனை பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தாள்.
ரமேஷ் சற்றேன்று தலையை திருப்பிக் கொண்டான் அவன் பதிலுக்கு சிரிக்கவில்லை........