பிரபஞ்சம் (universe) என்றவுடன் உங்களின் மனதில் தோன்றுவது என்ன என்பதை சில நிமிடம் சிந்தித்து பாருங்கள். சரி நீங்கள் என்ன நினைத்திருக்கிறிர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இதை படிக்க ஆரம்பியுங்கள் நிங்கள் நினைத்ததும் இங்கு நான் கொடுத்ததும் ஒன்று என்றால் உங்களுக்கு ஒரு சபாஷ்.
பிரபஞ்சம் என்ற வார்த்தைக்கு அறிவியலில் அதிக அர்த்தங்கள் உள்ளன. இங்கு நான் அதற்கு இவ்வாறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பிரபஞ்சம் என்பது பல கலாக்ஸ்சி (galaxy) களை கொண்டது.இதன் அமைப்பு (flat)தட்டை என நம்பப்படுகின்றது.மேலும் சற்று வளைந்தது அல்லது கோல வடிவம் உடையது என்றும் நம்பப்படுகின்றது.
இதுவரை சில galaxy கள் கண்டு பெயரிடிடப்படிருகின்றன.galaxy என்பது gravity force,stars quasars,,stellar ornaments,gas,dust, energy, dark energy ,planets .....etc பொதுவாக இவைகளை கொண்டது. ஆனால் ஒரே ஒரு galaxy மட்டும் ஒரு சிறப்பு அம்சத்தை பெற்று உள்ளது அது milky way galaxy ஏனென்றால் அது நம்முடையது. இது வரை எந்த ஒரு galaxy லும் உயிர் இருப்பதாக கண்டுபிடிக்கவில்லை. இந்த galaxy ல் மட்டும் தான் பூனைக்குட்டி,நாய்க்குட்டி,மனிதன், என் வருங்கால காதலி போன்ற உய்ரினங்கள் இருக்கின்றன.
சிலர் கடவுள் என்ற ஒன்று இருப்பதாகவும் சொல்கிறார்கள் அவர் தான் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது ஏனென்றால் நாய்க்குட்டி பூனைக்குட்டி போன்றவற்றை நான் நேரில் பர்த்து ஏன் தொட்டு கூட பார்த்திருக்கின்றேன் ஆனால் கடவுள் என்ற ஒன்றை மட்டும் பார்க்க வில்லை. சரி இதை விட்டு விடுவோம் இதை பற்றி நான் பேச ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டேன் மற்றொரு பக்கத்தில் இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த galaxy கலில பல வகை உள்ளன. இவை பொதுவாக spiral arm galaxy கள் அதிகம்..அப்படி ஒரு spiral galaxy தான் நம்முடையதும்.அந்த galaxy ல் ஒரு சிறிய சூரியக்குடும்பத்தில் தான் நாம் இந்த ஆட்டம் போடுகிறோம்.நம் பூமியை பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் இமய மலையில் ஒரு கடுகு இருந்தால் எப்படியோ அதுதான் நம் பூமியும். அதில் தான் இத்தனை ஆட்டங்கள் ஓட்டங்கள்.
பிரபஞ்சத்தின் தொடக்கம் என்ன?
என்னைப் பொறுத்தவரையில் கடவுள் கண்டிப்பாக இதனை படைத்து இருக்க முடியாது. கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளவர்களின் மனம் புண் படமால் இறுக்க வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம் இந்த பிரபஞ்சம் உருவாகும் போது கடவுளும் சேர்ந்து உருவாகியிருக்கலாம் அவ்வளவே என்னால் நம்ப முடியும்.
பிரபஞ்சம் உருவான விதமாக பெரும்பான்மையினரால் நம்பப்படுவது இதுதான். அது big bang theory.இது நடந்த்ததாக கூறப்படுவது 13.70 billion ஆண்டுகளுக்கு முன்னர். அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய வெடிப்பு ஏறப்பட்டது.அந்த வெடிப்பில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் உருவானது என கணித்து உள்ளனர்.அந்த வெடிப்பில் அளவுக்கு அதிகமான வெப்பம் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக inflation நடந்துள்ளது.அதே வேளையில் அங்கு மாற்றங்கள் நிகழ்த் தொடங்கின.(இந்த நிலையில் இருந்தே time அதாவது space time தொடங்கி இருக்கின்றது) மாற்றங்கள் என்றால் particle,(electron,proton,neutron) anti particle,gas ,rays போன்றவைகள் தோன்றியிருக்கின்றன. இவை அனைத்தும் வெடிப்பு நடந்த 3 நிமிட நேரத்தில் நடந்தத்வைகள்.
அதற்க்கு பின் அதன் வெப்பம் மெதுவாக குறைந்து குளிர தொடங்கியது.அதற்க்கு பின் அனுத்துகள்கள் தங்கள் வேலைகளை காட்ட தொடங்கின. அவைகளுக்குள் இறுக்கும் ஈர்ப்பு விசை காரணமாக பல மாற்றங்கள் நிகலத்தொடங்கின.(particles மற்றும் anti particles இரண்டும் மோதி பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டன)
அதன் பின் சிதறிய பாகங்கள் galaxy களாக, வெடிப்பில் வந்த தூசுகள் ஒன்றோடொன்று உரசி அதில் உள்ள அணுக்கள் வினை புரிந்து (collision) நட்சத்திரங்கள் உருவாகின.galaxy கள் அமையத்தொடங்கியது பிரபஞ்சம் தோன்றி சுமார் 1 billion ஆண்டுகளுக்கு பின்தான். ஏனென்றால் நம் milky way galaxy யின் வயது 13.6 billion வருடங்கள் ஆகும். galaxy யின் வயது அதில் உள்ள நட்சத்திரங்களை கொண்டு கணக்கிடப்படும்.
அப்படி உருவான milky way galaxi யில் வெறும் 4.6 billion ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதே நம் சூரியக்குடும்பம். அதில் சுமார் 4.5 billion ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததுதான் நம் பூமி. அந்த பூமியில் உயிரினங்கள் உருவகத் தொடங்கியது 1 billion ஆண்டுகளுக்கு முன்னர்தான்.(இந்த பூமி கதையை மற்றொரு பக்கதி விரிவாக பர்ர்போம்)
மேலும் உங்கள் கேள்வி பிரபஞ்சம் வெடிப்பிலே உருவானது என்றால் அந்த வெடிப்புக்கு காரணம் என்ன என நீங்கள் கேட்டால் அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.(அது தான் கடவுள் என்று சொள்ளதிர்கள்) அதை singularity என்கிறார்கள். அதை விளக்கும் விதி இன்னும் கண்டு பிடிக்க படவில்லை அவ்வளவே. stephen hawking தனது புத்தகத்தில் அந்த விதியும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார்.
இப்போது உள்ள விதிகள் அனைத்தும் big bang ற்கு அடுத்து நடந்த அனைத்தையும் விளக்க முற்படுகின்றன.
இருந்தும் இன்னும் பிரபஞ்சத்தில் நம்மால் கண்டு அறிந்து கொள்ளாமல இருக்கின்றன பல. அவற்றை dark matter என்ற பெயரிட்டு இறுக்கின்றனர். அது உணடாக்கும் விசைக்கு dark energy எனப்படும்.
இந்த dark energy தான் அனைத்தையும் மூடி இழுத்து வைத்துள்ளன என நம்பப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் singularity யை விளக்கும்,போது இந்த dark enegy யும் விளக்கப்படும் என நினைக்கிறேன்.காத்து இருப்போம். (இவை தான் பிரபஞ்சத்தில் 73% இருக்கின்றன)
சரி இது வரை பிரபஞ்சம் தொடக்கம் அது சம்பந்தமானவைகளை பார்த்தோம். இப்போது பிரபஞ்சம் எவ்வாறு முடியும் என பார்ப்போம்.
பிரபஞ்ச தொடக்கத்தை big bang என்பது போல பிரபஞ்சத்தின் முடிவை big crunch என்று சொல்லுகிறார்கள். ஆனால் இது big bang போல் அனைவராலும் ஏற்று கொள்ளபட்வில்லை. இது வந்த்ததற்கு முக்கிய காரணம் உண்டு அது நம் பிரபஞ்சம் விரிவடைகின்றது. அப்படி விரிவடைந்த்தால் அந்த விரிவுக்கு ஒரு முடிவு ஒன்று உண்டு அது தான் big crunch. (இதை stephen hawking தனது breif histry of time என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார் சிரமம் பாராமல் அதை வங்கி படிக்க வேண்டுகிறேன்)
கவலை வேண்டாம் அது நடப்பதற்கு இன்னும் மிலியன் வருடங்கள் இறுக்கின்றன. இந்த கட்டுரையை படித்து கொண்டிருப்பவர்களுக்கு பிரபஞ்சத்தின் அழிவை பற்றி கவலை வேண்டாம் அதற்கு நான் உத்திரவதாம். உங்கள் வாழ்க்கை சுபமாய் கழியும் ஆனால் யார் கடவுள் நம்பிக்கையில் திளைத்து மனிதர்களுக்கு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவிகள் உண்டு என நம்புவர்கள் பிரபஞ்சம் அழியும் போது ஒரு மனிதனாகவோ , ஒரு பறவையாகவோ பிறந்து இருந்தால் அப்போது என்னை திட்ட வேண்டாம்.
நான் இங்கு விளக்கியது cosmology இன் அடிப்படையான கருத்துக்கள் மட்டுமே. என்னால் விரிவாக விலக்க முடியும். அனால் அதை படிக்கும் நண்பர்களுக்கு சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகவே இனி வரும் பக்கங்களில் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக விளக்குகிறேன்.
என்னடா இவன் வெறும் அறிவியல் அறிவியல் என்றே புலம்பிக்கொண்டே இருக்கின்றானே இவனுக்கு வேறொன்றும் எழுத தெரியாதா? என நிங்கள் நினைத்தால் அது தவறு.
ஒருகாலத்தில் என்னுள் காதலுக்கு உண்டான hormon வேலை செய்ததால் காதல் கவிதைகள் பலவற்றை எழுதினேன். ஆனால் என்ன அதை கொடுப்பதற்கு ஒரு காதலியும் அமையவில்லை என்பதே உண்மை. நான் காதல் கவிதைகள் எழுதி அதை என நண்பர்களுக்கு கொடுத்து படிக்கச்சொல்லி அவர்கள் என்னைக் கண்டாலே தலை தெறிக்க ஓட வைத்து..........சில நண்பர்கள் அவர்களின் காதலிக்கு கொடுத்து நல்ல பெயர் வாங்கியும் உள்ளனர். இதை விட கொடுமை என கவிதைக்கு வேண்டாம் என எண்ணித்தான் அதை எழுதுவதை குறைத்துக்கொண்டேன்.
அதை விட நான் படித்த அறிவியல் சம்பந்த்தமானவற்றை சிலர்க்கு தெரிவிப்பதில் எனக்கு சந்தோஷம். இந்த சந்தோஷம் முழுமையடைவது உங்களது கருதுக்களில்தான்.எனவே உங்களது கருத்துக்களை கொடுங்கள்.
இதை பற்றி விரிவாக படிக்க
brief histry of time
black holes universe
brocas mind
போன்ற புத்தகங்களை படியுங்கள்.