"நான்
சொல்ற விசயத்தில் முயற்சி செய்தால் இப்போது நடந்துகொண்டு இருக்கும் மனித
இனத்தின் மாற்றத்தை சரி செய்யலாம்னு தோணுது" என்றாள் புனி எதிரில் அமர்ந்து
இருந்த வைத்தியை பார்த்து
"இப்ப ஏற்ப்பட்டு இருக்கிற மாற்றம் எந்த விதமான ஒன்றுன்னு தெரியுமா உனக்கு? கேட்டார் வைத்தி
"இல்லை ஆனா அதோட விளைவு தப்பா இருக்குனு மட்டும் புரியுது"
"ம்ம் உண்மைதான்.. இது மனிதன் தனது செய்கையால் கொஞ்சம் அப்புறம் இயற்கை விளையாடும் பரிணாம வளர்ச்சியினாலும் மெல்ல மெல்ல நடந்துகொண்டு இருக்கு இதனை தடுப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை" என்றார் வைத்தி
இந்த உரையாடல் இன்னும் தொடரும் முன்...என்னதான் சென்ற காலத்தில் சுஜாதா எனும் எழுத்தாளர் தனது சக நண்பரான பாலகுமாரனுக்கு சிறுகதை எழுத கொடுத்த அறிவுரைகளில் ஒன்றான முதல் வரியிலயே கதையை ஆரம்பிக்கும் யுத்தியை இந்த கதையில் மட்டுமில்லாமல் பல கதைகளில் எழுதி இருந்தாலும் இப்போது இருக்கும் உங்களால் அதை எல்லாம் உணர்ந்து படிக்க முடியாததால் இதையும் கதையோடு சொல்லிவிட்டு அவர் சொன்ன மாதிரியே அடுத்த பத்தியில் கதைக்களத்தை விவரிக்கிறேன்.....
மேலே சொன்ன உரையாடல் நடந்த இடம் ஒரு ஆய்வுக்கூடம். இந்த 2086 ல் தனி நபர் ஆய்வுக்கு ஒரு இடத்தை அமைப்பது ஒன்றும் கடினமான விசயாமாக இல்லை. அது வைத்தி எனும் ஒரு உயிரியல் மருத்துவருக்கு சொந்தமானது. உயிரியல் துறையில் பல முக்கியாமான வெற்றிகளை நிகழ்த்தி பெயர் பெற்றவர். அவரிடத்தில் வேலை செய்பவர்களில் ஒருவள் புனி.
இப்போது இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று மனித இனத்தில் ஏற்ப்பட்ட மாற்றம். சிலர் இதை சத்தியம் அடித்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் இயந்திரமான ஒரு நிலைக்கு மாறுகிற தருணம் என்று சொன்னாலும் ஒரு நிரந்தரமான தீர்வு இல்லாமலே அந்த மாற்றம் மாற்றத்தை நடத்திக்கொண்டு இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு வழியில் தீர்வை தேடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வைத்தியும் தனது பங்குக்கு மனித செல்களில் ஏற்ப்பட்ட மாற்றங்களால்தான் இப்படி ஏற்ப்பட்டுல்லதா? என்பதை ஆராய்ந்து கொண்டு இருந்தார்.
ஆனால் புனியின் தேடல் வேறு விதமாகவே இருந்தது. அவளுக்கு பரிணாம மாற்றம் என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை அதுவும் இவ்வளவு சீக்கிரம் அது நடக்காது என்பதில் உறுதியாக இருந்தாள். கண்டிப்பாக மாறிவந்த மனித பழக்கவழக்கம் ஒருகாரணமாக இருக்கலாம் என்பது புனியின் ஒரு சந்தேகம்.
மீண்டும் புனி மற்றும் வைத்தியின் உரையாடலுக்கு வருவோம்...
"என்னோட இந்த முறையை ஒரு சோதனையாக செய்து பார்த்தலே தொடக்கத்தில் ஏற்ப்படும் மாற்றத்தை வைத்து சரியாக சொல்லிடலாம்" என்றாள் புனி.
"சரி சொல்லு சரியாக இருக்கும் பட்சத்தில் செய்து பார்க்கலாம்"
"கனவுகளை பத்தி என்ன நினைக்கிறிங்க?"
"சுவராசியமான ஒன்னு ஆனால் நம்மிடம் பலவருடங்கள் முன்பே அது இல்லம போய்டுச்சே?"
"அதனால்தான் இந்த மாற்றம் வந்து இருக்கும்னு தோணுது " என்றாள்
"என்ன சொல்ல வர்ற புரியல?"
"முன்காலத்தில் நாம செஞ்சது என்ன இரவில் கனவுகள் வந்தால் வெறுமனே காலையில் எழுந்து தலையை சொரிந்துவிட்டு பல் விளக்க போவதுதான். காரணம் அப்போதைக்கு கனவுகள் பற்றிய சாதாரண எண்ணம். ஆனா அப்போதே Freud, Jung போன்றவர்கள் கனவுகளை பற்றி ஆராய்ச்சி செஞ்சி சொன்னதை யாரும் பெருசா எடுத்துக்கள........."
"ம்ம் அது எனக்கும் தெரியும் அவங்க சொன்னதுக்கும் நீ சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?"என்றார் வைத்தி
"அவங்க சொன்ன தியரி வச்சி மட்டுமில்லாம அடுத்த செஞ்ச ஆய்வுகளை வச்சி பார்த்தா கனவு மனித உணர்வுகள் விசயத்தில் முக்கிய பங்கை வகிசசிருக்கு முக்கியமா சிந்தனை திறன், ஆழமான எண்ணங்கள் இந்த மாதிரி விசயத்தில்."
"அப்படின்னா இப்ப நம்மகிட்ட கனவுகாணும் திறன் இல்லாம இருக்கிறதுதான் நமது இந்த இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு காரணம்னு சொல்றியா?"
"ஆமாம் அந்த திறனை நாமாகத்தான் அழிச்சிடோம் கனவு உருவாகும் இடமான மூளையின் parietal lobe ஏற்ப்பட்ட சிரிய மாற்றம்தான் நம்மை இங்கே கொண்டு வந்து விட்டு இருக்கு"
"மூளையில் மாற்றம்னு வச்சாலும் அது பாரிணாம வளர்ச்சிலதானே சேரும்?"
"இல்ல அந்த மாற்றம் வந்ததுக்கு காரணம் அப்போது வாழ்ந்த நமது வாழ்கை முறைதான். பணம் பார்க்கும் பாதி இயந்திரமாக வாழ்ந்த நம்ம கற்பனை,கனவு என எல்லாத்தையும் கட்டுபடுத்திகிட்டதால இப்ப கிட்டத்தட்ட முழு இயந்திரமாக மாறி இருக்கிறோம்"
"அப்படின்னா இப்ப நம்ம கனவு காண ஆரம்பிச்சா நமது இந்த மனித உணர்ச்சிகள் அற்ற இயந்திர வாழ்க்கை மாறிவிடுமனு சொல்றியா? அப்படியே இருந்தாலும் நம்மகிட்ட இருந்து விட்டுப்போன ஒரு பழக்கத்தை எப்படி திரும்பி கொண்டுவருவது?"
"அதை திரும்பி கொண்டுவரத்தான் உங்களின் உதவி வேணும் என்னால இதுவரைக்கு மட்டும்தான் யோசிக்க முடிஞ்சது"
"இப்ப இருக்கிற இந்த மாற்றத்துக்கு பலரும் பலவிதமா ஆராய்ந்து கொண்டு இருக்கும்போது நீ சொல்றது ரெம்ப வித்தியாசமா இருக்கு ஆனா செயற்கை கனவுகள் எந்த விதத்தில் சாத்தியம்னு எனக்கு தோணலை"
"இல்ல இப்ப இருக்கிற மைக்ரோ தொழில்நுட்பத்தில் கண்டிப்பா சாத்தியம்னு தோணுது. இப்போது நீங்கள் செய்யும் செல்கள் சார்ந்த பரிணாம வளர்ச்சி ஆய்வோடு இதையும் சேர்த்து பண்ணினா வாய்ப்பு இருக்கு"
எந்த வித பதிலும் சொல்லாமல் வைத்தி அங்கிருந்து நகர்ந்தார். அனால் அவரின் மனதில் செயற்கை கனவுகளை வரவைப்பது அவ்வளவு எளிதல்ல என்ற எண்ணம் இன்னும் இருந்தது.ஆனால் இதை அப்படியே விடுவதில் இஷ்ட்டமில்லை காரணம் புனி கேள்வி கேட்பாள் பதில் சொல்ல கண்டிப்பாக சில காரணம் வேண்டும் அதுக்காவது கொஞ்சம் ஆராய்ந்து இந்த காரணத்தினால் முடியாது என்பதை அவளுக்கு விளக்க வேண்டும்.
அவன் நாற்காலியில் உட்கார்ந்து இருக்க தலையில் நான்கு இடங்களில் வயர்கள் சொருகப்பட்டு இருந்தன. செயற்கை கனவை வரவைக்கும் கருவியின் முதல் சோதனை. முதலில் வைத்தி முடியாது என்று நினைத்து இருந்தாலும் ஆய்வின் தொடகத்திலியே சில உண்மைகள் தெரிந்தன அது புனி சொன்னது போல parietal lobe ல் ஏற்ப்பட்ட சில மாற்றம் . அதை வைத்தி தீவிரமாக ஆராய்ந்த பொது கனவுகள் வர parietal lobe சரியான நிலைமையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்தார். அது பாதித்து இருந்தால் கனவுகள் வராது என்பதையும் உறுதி செய்ததோடு இப்போது இருக்கும் மனிதர்களுக்கு அது அடைந்து இருக்கும் பாதிப்பின் அளவையும் அறிந்தார்.
அதனை அடிப்படையாக வைத்து உருவாகியதுதான் இந்த கருவி. ஸ்டெம் செல் முறையில் parietal lobe ஐ வெளியே வளர்த்து அதை மூளையோடு இணைத்து கனவு காண வைப்பது. அந்த செயற்கை மூளை பகுதி ஒரு கணினியில் இணைத்து இருக்க அதில் இருந்து செல்லும் தகவல்கள் அதில் பதிவான பிறகே அவனுக்கு செல்லும். அதாவது அவன் என்ன கனவு கண்டான் என்பதை சொல்ல மறக்கலாம் என்பதால் அதை பதிவு செய்யும்பொருட்டு இது செய்யப்பட்டு இருந்தது..
முதலில் அவனை ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பிவிட்டு கணினி திரையில் மூளையில் இருந்து ஏதும் தகவல் வருகிறதா என்பதுக்கு காத்து இருந்தார்கள். சிறிது நேரத்தில் குறட்டை சத்தம் வந்தது. காத்து இருந்தார்கள்.
சிக்னல்கள் கடந்து சென்றன ஆச்சார்யத்துடன் அதனை மொழிபெயர்க்க தொடங்கி இருந்தார்கள். பலகாலம் கழித்து ஒரு மனிதன் கனவு காண்கிறான் அதுவும் செயற்கையான முறையில்..அவன் கண்ட கனவுகள் ....
1) முத்தமிடுகிறாள் ..அடுத்து இவன் கைகள் எங்கோ செல்கின்றன..எதோ செய்கிறான் ...(வைத்தியும் புனியும் முகம் சுளித்து கொள்கிறார்கள்)
2) அது இவனது கனவு விமானம் ஒளியின் வேகத்தை மிஞ்சும் ஒன்று அதில் இவன் பெயர் இருக்கிறது..முதல் பயணம் முடித்துவிட்டு வருகிறான்..புகழ்கிறார்கள் .....
இதுவே போதும் என நினைத்து அவனை எழுப்புகிறார்கள். அவனிடம் நீ கனவு கண்டாய் என்பதை சொல்லும்போது நம்ப மறுக்கிறான்.
கண்ட கனவுகளை காட்டி விளக்கம் கேட்கும்போது....ஆமாம அவள் எனக்கு வெறும் முத்தம் கொடுத்து விட்டு சென்று இருந்தாளே அடுத்து நடந்தது எல்லாம் என்ன? உண்மைக்கே நடந்ததா? இருந்தாலும் இதை நினைத்து பார்கவே சுகமாகத்தான் இருக்கிறது,இது எனக்கு புதிய அனுபவம் என்றான்
அந்த விமானம் சாத்தியம்தான் அதை கனவில் சேர்க்காதீர்கள் என்றான் கொஞ்சம் கோபமாக.
முயற்சி பலன் கொடுத்ததை அடுத்து ஒரு சிறிய உருளைக்குல் ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மூளையை வைத்து தலையில் ஏதும் வயர்கள் சொருகாமல் சில இடத்தில் பொத்தான் வடிவில் குத்திக்கொள்ளும்படி மாற்றி இருந்தார்கள்.
இப்போது கனவுகான அந்த உருளையும்,சில பொத்தான்களும் போதுமானது. சோதனை முயற்சிக்கு சிலரை தொடர்ந்து செயற்கையாக கனவுகள் காண செய்ததில் அவ்ர்களிடத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் தெரிந்தன. சோதனை காலம் நீட்டப்பட்டு மாற்றங்களை கவனிக்கும் அதே நேரத்தில் வைத்தி அரசின் உதவியோடு இந்த செயற்க்கை மூளையை மனிதனுக்குள்ளேயே வளர்க்கும் முயற்சியில் இருந்தார்.
சோதனை முடிவில் அன்றாடம் வாழும் மனிதர்களை விட ஆய்வுகூடத்தில் பல மாதங்கள் இருந்தவர்கள் முன்பு வாழ்ந்த மனிதர்களை போல சில நடவடிக்கைக மாறி இருந்தார்கள்.
இந்த வெற்றிக்கு காரணம் புனிதான் என்று சொல்ல அவளை போற்றுகிறார்கள். பலருக்கும் கனவு கண்ணியாகிறாள் அவள்...
கதவு திறக்கும் சத்தம் கேட்க ..
"எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அந்த கனவு காணும் கருவியை எப்போ பார்த்தாலும் மாட்டிகிட்டே இருக்காதேன்னு" என்று திட்டியபடியே புனியின் அம்மா உள்ளே வர அவள் அந்த கருவியை பத்திரமாக கழட்டி வைத்தாள்.

5 comments:
கனவுலேயே டீவி சேனல்களும் நடத்தலாம்........, படம் ரிலீஸ் பண்ணலாம்...
ம்ம் அப்புறம் .... ))
சூப்பர் மாடல்களுடன் கொஞ்சக்குலாவலாம்......... (கனவுலதான்......)
செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டு வரலாம்.......
சூப்பர் மாடல்களுடன் கொஞ்சக்குலாவலாம்......... (கனவுலதான்......)///
இதுக்கு பிறகு நான் அப்புறம்னு கேட்ட நீங்க என்ன சொல்விங்கானு நன் கனவு கண்டுக்கிறேன்..இங்கே வேணாம் .. ))
Post a Comment