கொஞ்ச
நேர மௌனத்தை அவளது அந்த கேள்வி களைத்தது...
“கணேஷ், நமது காதல் உண்மையானதா என்ன?”
“ஏன் திடிர்னு உனக்கு இந்த சந்தேகம்?”
என்றேன் சிரித்தபடி
“இல்லை சும்மாதான்கேட்டேன் கேட்கனும்போல
இருந்துச்சி” என்றாள்
“சரி நீ சொல்லு உண்மையானதா இல்லையான்னு?”
“அதைவிடு காதல்னா என்னன்னு நினைக்கிறே நீ
முதல்ல?“ கேட்டாள்
“என்ன நினைக்கிறது எல்லாம் உணர்ச்சிகள்
சம்பந்தபட்டதுதான்” என்று பொதுவாக சொல்லி முடித்தேன்.
முறைத்து பார்த்தவள் "நான் கேட்ட கேள்விக்கு
நீ சொன்னது என்ன பதிலா?”
“பின்னே?”
“ஒழுங்கா சொல்லு”
“சரி காதல்ங்கிறது நான்கு பக்கமும் weld செஞ்ச திறக்க முடியாத ஒரு இரும்பு பெட்டி மாதிரி. அதுக்குள்ளே என்ன
இருக்குதுன்னு யாருக்குமே தெரியாது. ஆனா அதை நம்மதான் கற்பனை செஞ்சி அதுல இது
இருக்குமோ அது இருக்குமோன்னு நினச்சி வாழ்ந்துகிட்டு இருக்கோம். சிலர் அதை
அறிவுகொண்டு உடைக்காமலேயே உள்ளே அப்படி பெருசா ஒன்னுமில்லைன்னு விட்ருவாங்க. சிலர்
அதுக்குள்ள ஏதோ இருக்குன்னு உணர்ச்சிகளை வளத்துக்கிட்டு அதை உடைக்க முயலுவாங்க.
அப்புறம்தான் தெரியும் அதுல ஒன்னுமே இல்லைன்னு ஏன இதை உடைக்க இவ்வளவு
கஷ்ட்டப்பட்டோம்னு யோசிப்பாங்க”
“அடப்பாவி என்ன இப்படி சொல்ற அப்ப நம்ம
காதலும் இதுல அடங்குமா?”
“பின்னே எல்லாம்தான்”
“உன்னைபோய் காதலிக்கிறேன் பார் என்னை
சொல்லணும்”
“சரி சொல்லு நீ என்ன நினைக்கிறே?”
“நான் என்ன நினைக்க ...மனுசங்க மனசுங்கிறது
நீ சொன்ன மாதிரி திறக்க முடியாத அல்லது என்ன
இருக்குன்னு அறிய முடியாத ஒரு பெட்டி மாதிரி ஆனா அது தனக்கு பிடிச்ச ஒரு மனசோடு
சேரும்போது தன்னாலேயே திறந்துக்கும். அந்த இன்னொரு மனசுதான் தனக்கு உலகத்துல
சொந்தம்கிற மாதிரி அதுகிட்ட வெளிப்படையா இருக்கும். அதுகூட அன்பு,சண்டை,காமம என தனக்கு
பிடிச்ச எல்லா விசயத்தையும்
பகிர்ந்துக்கும் அதுவும் வாழக்கை முழுதும். இதுக்கு பேருதான் காதல் என்னை பொறுத்த
வரைக்கும்
“அய் இது நல்லா இருக்கே” என்றேன்
“உனக்கு எங்க புரிய போகுது
இதெல்லாம்.. நீ சொன்ன பாரு விளக்கம் காதலுக்கு”
“நான் என்ன தப்பு பண்ணேன்.. நீ
சொன்னதைத்தான் செஞ்சேன். காதல்னா மனசு வெளிப்படையா இருக்கணும்னு சொன்னே .. அதான் நீ
கேட்டதும் காதலை பத்தி நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டேன் இப்ப நீ கோபபடுறே.
அப்ப நீ சொன்னது தப்புதானே?” என்றேன்
“நீ திருந்தவே மட்டே.... “என்று அடிக்க
வந்தாள்
******************
“அவங்களை முழுதும் படிக்க எவ்வளவு நேரம் ஆகும்?”
“குறைஞ்சது ஐந்து நிமிடம்.... ரெம்ப
எளிதாகத்தான் இருக்கிறது”
“ம் சரி அதை வச்சி அவங்க மூளையில நமக்கு தேவையான மாற்றம் கொண்டுவர?”
“அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்னென்ன
மாற்றம் கொண்டுவரணும்னு சொல்லிடுங்க”
“வேறென்ன நமக்கு கிழே வேலை செய்ய ஒரு அடிமை
வர்க்கம் வேணும் அவ்வளவுதான். நாம் சொல்வதை தவிர வேற எதையும் யோசிச்சு செய்ய
கூடாது.அப்படியே யோசிச்சாலும் அது நம்ம சொல்லி கொடுத்ததாக இருக்கணும். இதை மட்டும்
இப்போது செய் போதும்”
“சரி செஞ்சி முடிச்சிட்டு சொல்றேன்.
ஆனா இதுக்காக இவ்வளவு ஆபத்தான காரியங்களை ஏன் நாம செய்யணும். நம்மகிட்ட இருக்கிற
தொழில்நுட்பத்தை வச்சி செயற்கையா உருவாக்கலாமே?”
“அது அவ்வளவு எளிது இல்லை ஆபத்து அதிகம்
கொஞ்சம் பிச்ங்கினாலும் நாம் அழிந்தோம். ஆனால் இவர்கள் நம்மை விட கீழானவர்கள் என்ன
முயற்சி செய்தாலும் நம்மை வெல்ல முடியாது சொன்னதை செய்”
என்று சொல்லி விட்டு அது நகர்ந்தது.
அங்கு இரண்டு மனித உடல்கள் மயக்க நிலையில்
கிடத்தப்பட்டு இருக்க அதன் அருகில் சில உருவங்கள் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்தன. மனிதர்களின் ஜீனோமை துளைத்து என்னென்ன இயக்கங்கள் எந்த
கட்டளையின் பெயரில் எப்படி நடக்கின்ற என்ற எல்லா தகவல்களும் கிடைக்க பெற்றன.
அடுத்த வேலை அதுக்கேற்ப மூளையில் கட்டளை கொடுக்கும் விசயத்தை மாற்றுவதுதான்.
எல்லோரும் காத்து இருந்தார்கள். முதலில்
அந்த ஒரு மனித உடல் மட்டும் மெல்ல அசைந்து எழுந்து உட்கார்ந்தது..
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்
எனக்கான கட்டளை என்ன?” என்று கேட்க
“அதோ அங்கு படுத்திருக்கும் அந்த உருவத்தை
எழுப்பு” என்ற கட்டளை கொடுக்க அதுபோய் எழுப்ப தொடங்கி இருந்தது.
அங்கு கூடியிருந்தவர்களுக்கு சந்தோசம். .."ஆனால்
ஒரு பிரச்சினை இப்போதைக்கு இரண்டு மனிதர்கள்தான் நம்மால் கொண்டுவர முடிந்தது ஆனால்
நமக்கு நிறையா தேவை. நாம் பூமிக்கு நேரடியாக சென்று மனிதர்களை கொண்டுவருவது என்பது
முடியாத காரியம் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் வேறு எதாவது யோசியுங்கள்”
என்றது ஒன்று
“அதுக்கு என்கிட்டே ஒரு யோசனை இருக்கு”....
என்ற குரல் அந்த கூட்டதில் இருந்துவர அது முன்னாடி வந்தது.
“சொல்லு என்ன அது?”
“நான் போன முறை பூமிக்கு மனிதர்களை பிடிக்க போய் இருந்த போது அவர்களிடத்தில் ஒரு வினோத பழக்கம் இருப்பதை பார்த்தேன். கடவுள்
என்ற நமபிகையில் இதுவரை கண்டிராத ஒன்றை அதிகமா நம்புகிறார்கள்.அதோடு இல்லாமல்
என்றாவது ஒருநாள அவர் அவதரிப்பார் நம்மை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வார் இந்த மாதிரி
நிறையா விசயங்ககளை நம்புகிறார்கள். நான் சொல்ல வருவது நாம் ஏன் அவர்களின் கடவுளாக
மாறி சொர்க்கமான நமது கிரகத்துக்கு கூட்டி வந்துவிடகூடாது. உறுதியாக சொல்லுவேன்
இந்த விசயத்தில் அவர்கள் அதிகம் யோசிக்க மாட்டார்கள் வந்துவிடுவார்கள்”
என்று முடித்த போது அவர்களிடத்தில் ஆச்சர்யம். அதுக்கு தயார் செய்தார்கள்
பூமி அதி சீக்கிரம் ஒரு கடவுளின் வருகைக்காக
காத்திருந்தது.
*******************
அந்த விண்கலத்தில் என்னோடு இருந்த புனி
கத்தியேவிட்டாள் காரணம் எங்கள் கண் முன் விரிந்த அந்த புதிய கிரகத்தில்
மேல்பரப்பில் தெரிந்த தண்ணீர் பரப்புதான். நாங்கள் மேற்கொண்ட பயணமே பூமியை போல
உயிர்வாழ தேவையான சூழ்நிலையில் இருக்கும் கிரகங்களை கண்டறிந்து பூமிக்கு சொல்வதே.
மெதுவாக விண்கலத்தை தரையிறக்கிவிட்டு உள்ளே இருந்து கொண்டே வெளிப்புற சீதோசன
நிலையை ஆராய்ந்து பார்த்ததில் சரியான வெப்ப நிலை உட்பட போதுமான பிராணவாயு காற்றில்
இருந்தது. கொஞ்சம் ஈர்ப்புவிசை அதிகமாக இருந்தது. நடக்க சிரம படலாம் போல தோன்றியது.
இருந்தும் முக சுவாசம் அணிந்தே வெளியில் வந்தோம்
. மீண்டும் ஒருமுறை வெளியில் சோதித்த பிறகே
அந்த கிரகத்தின் காற்றை சுவாசித்தோம். மாற்றம் இல்லை. நடக்க முயன்ற போது காலை
எடுத்து வைக்க அதிக சக்தி தேவையானதை உணர்ந்தோம்.
“கணேஷ் உடனே பூமிக்கு சொல்லிடலாம்”
“இல்லை வேண்டாம் இப்ப சொல்லாதே”
“எதுக்கு? அவர்கள் ஏன் ஒரே இடத்தில் நிற்கிறது
என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டால்?”
“எதாவது வேறு பொய் சொல்லி சமாளிக்கலாம்”
என்றேன் தூரத்தில் நிறைந்து இருந்த தண்ணீரை பார்த்தபடியே
“ஏன் இப்படி சொல்றே நீ ?”
“உனக்கும் எனக்கும் தனிமை ரெம்ப
பிடிக்கும்தானே?”
“ஆமா அதுக்கு?”
“உணவு காலியாகும்வரை இங்கே இருப்போமே
எனக்கு இந்த தனிமையில் உன்னோடு இருக்கணும்னு போல தோணுது புனி”
என்றேன்
அவள் ஏதும் பதில் சொல்லாமல் நான் பார்த்த
திசையே பாத்தாள்...
“ஏன் உனக்கு இருக்க பிடிக்கலியா என்ன?
அப்படின்னா போய் பூமிக்கு தகவல்கொடு” என்றேன்
அவள் விண்கலம் நோக்கி செல்லாமல் என்னருகில்
வந்து கையை பிடித்துக்கொண்டு "எனக்கும்" என்றால் வெட்கத்தோடு
“இந்த புதிய கிரகத்தில் முதல் சட்டம் ஒன்றை
பிறப்பிக்கிறேன்” என்றேன்
“என்ன அது?”
என்றால் ஆர்வமாக
“இருவருக்கும் வெட்கம் என்பதே இருக்க
கூடாது சரியா எங்கே வெட்கத்தை விட்டு கேட்கிறேன் "ஒன்று" கொடு பார்ப்போம்”
நான் எதுக்கு இந்த சட்டத்தை சொன்னேன்
என்பதை உணர்ந்தவள் வெட்கத்தை தவிர்க்க முடியாமல் ஒன்று கொடுத்தாள்
இது செல்லாது இந்த கிரகத்தின் சட்டபடி
வெட்கம் இல்லமா இருக்கணும் என்று சொல்ல அவளால் வெட்கத்தை விட நெடுநேரம் ஆகியது..
தோளில் சாய்ந்த படி கொஞ்ச தூரம் நடந்து
இருந்த போது அந்த சத்தம் கேட்டது அது நாங்கள் நிறுத்தி வைத்து இருந்த
விண்கலத்தின் திசையில் இருந்து வர நாங்கள் திரும்பும்போது அது மேலே
எழும்பியிருந்த்து.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது அது Auto mode ல் இருந்தது. அதாவது எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டு இயக்க முடியாமல் போய் நின்றுவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் பாதுக்காப்பு
கருதி அது தானாகவே பூமியை சென்றடைந்து விடும். அது எம்பி பறந்ததை பார்த்த புனி அதை
நோக்கி ஓட முயன்று முடியாமல் கிழே விழுந்தாள்.
9 comments:
கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தானே அந்த கடவுள் பொருந்தும், இந்துக்கள் கண்ணை திறந்து கடவுள் பார்த்தாலே கெட்ட சகுனம் என்று ஓடுபவர்கள் ஆயிற்றே [ கண்ணப்பர் கதை]... என்னமோ போங்க..
ஹா ஹா நான் பொதுவா எழுதினேன் ))
எனக்கு கண்ணப்பர் கதை தெரியாதுங்க ))
நன்றி
முதல் ஆரம்பம் பார்த்து கதைன்னுபடிச்சேன் பாதியில் இன்னும் என்ன்மோ சொல்ரீங்கன்னு புரிய முயற்சிசெய்தேன் கடைசியில் கதையை நல்லா முடிச்சிங்க.ஓ, முந்திய பாகம் எல்லாம் படிச்சா சரியாபுரியுமோ? அப்பொ அதைல்லாம் படிச்சுட்டு வரேன்.
அப்படி இல்லம்மா..இதுல மொத்தம் 3 கதை வேற வேற மாதிரி இருக்கும். அதாவது ரெம்ப பெருசா இல்லாம சின்ன சின்னதா..மூனு வேற கதைங்க..
நீங்க திரும்பி இதையே படிச்சு பாருங்க புரியும் இந்த ********* மாதிரி போட்டா இடத்துல கதை முடிஞ்சது அர்த்தம்
நன்றிம்மா
//மனுசங்க மனசுங்கிறது நீ சொன்ன மாதிரி திறக்க முடியாத அல்லது என்ன இருக்குன்னு அறிய முடியாத ஒரு பெட்டி மாதிரி ஆனா அது தனக்கு பிடிச்ச ஒரு மனசோடு சேரும்போது தன்னாலேயே திறந்துக்கும். அந்த இன்னொரு மனசுதான் தனக்கு உலகத்துல சொந்தம்கிற மாதிரி அதுகிட்ட வெளிப்படையா இருக்கும். அதுகூட அன்பு,சண்டை,காமம என தனக்கு பிடிச்ச எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கும் அதுவும் வாழக்கை முழுதும். இதுக்கு பேருதான் காதல்//
நல்ல விளக்கம்.. :)
கடைசிக்கதைதான் எனக்குப் புடிச்சது.......
சிறுசிறு- 5 படித்தேன். மிகவும் அருமை. இதை பதிவர் தென்றில் மாத இதழில் பயன்படுத்திக்கொள்ளலாமா? (பதிவர் தென்றல் பதிவர்களுக்காக மாதந்தோறும் வெளிவருகிறது. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடப்படுகிறது.)thagavalmalar.blogspot.com வாருங்கள் விளக்கம் பெறலாம்.
தாரளாமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் ))
நன்றி
கலக்கிடீங்க,,,
Post a Comment