பாதிபேர் அமைதியாக ஓய்வெடுக்க சிலர்
மட்டும் பணியில் இருந்தார்கள்.அப்போது நடந்த ஒருநிகழ்வு..
“கதை எழுதினால் யாரும் படிக்க
மாட்டிக்கிறார்களே”
இதை கொண்டுபோய் அங்கு சேர்த்துவிடு என்று
ஒன்று கட்டளையிட அதை பார்த்த மற்றொன்று இதையே இதுவரை ஆயிரம் முறை கொண்டு
போய்விட்டேன் இப்பையுமா?
அது உன்னோட வேலை செய்யணும்...
எடுத்துசென்றது .... அதன் துரதிஷ்டம் அதுக்கான பதிலையும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அதுக்கே கொடுக்கப்பட்டது
அது உன்னோட வேலை செய்யணும்...
எடுத்துசென்றது .... அதன் துரதிஷ்டம் அதுக்கான பதிலையும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு அதுக்கே கொடுக்கப்பட்டது
“அதுக்கு உருப்படியாக கதை எழுதவேண்டும்”
இதை கொண்டுவந்த அதனிடம் ஒருவித சலிப்பு
இருந்தது. இதையே கிட்டதட்ட அதிகமுறை செய்து இருக்க வேண்டும். உடனே அடுத்த தகவல்
தயாராக அதை கொண்டு போக வேறொன்றுக்கு கட்டளை கொடுக்க அது கொண்டு போனது
“நல்லாதானே எழுதுறேன் உருப்படியா எப்படி
எழுத?”
அந்த மற்றொன்று இந்த தகவலை எடுத்துக்கொண்டு
கிளம்ப ஏற்க்கனவே முதலில் வந்த ஒன்று இந்த நியூரான் வேலை பார்ப்பதுக்கு தற்கொலை செய்து
கொள்ளலாம் என்று நினைக்கும்போதே அதுக்கு ஒரு கட்டளை வந்தது
இந்த மனுஷன் ஏதோ உருப்படியா கதை எழுத
போறாராம் வேண்டிய தகவலை வேகமாக கொண்டு செல்லுங்கள்..
முதலில் யோசித்தது எந்த குரோமோசோம்
சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று ..
அதற்க்கான XX என்ற
தகவலை வேற நியூரான் எடுத்து செல்ல ஒரு கதை ஆரம்பமாகியது....
(இது நான் இந்த கதைகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனது மூளையில் நடந்து இருக்கலாம் என்ற ஒரு கற்பனை.)
***********
“யாரச்சும் இப்ப வரீங்களா? இல்லியா?
எவ்வளவு நேரம் உங்களுக்காக 44 பேர் காத்து
இருக்கிறோம்?”
“அதுக்குத்தான் விவாதம் செய்கிறோம்”
என்றார்கள் மீதம் இருக்கும் இருவர்கள்.
“நீ போயேன்?”
“ஏன் நீ போனால என்ன?”
“நான் போனால் உன்னால் உருவான இனத்தை தொல்லை
கொடுப்பேன்..பரவாயில்லையா?”
“எதாவது பண்ணு முதலில் போய்த்தொலை”
என்றது மற்றொன்று
இதை கேட்டவுடன் வேகமாக நகர்ந்து ஏற்க்கனவே
அந்த zygote ல் இருந்த 44 குரோமோசோம்களோடு போய்
சேர்ந்து கொண்டது XX
என்ற ஜோடி.
***********
“அம்மா உயிருள்ளது ,இல்லாதது னு எப்படி
பிரிக்கிறாங்க?”
“இதுல என்ன இருக்கு எந்த ஒன்னு ஒரு காலத்தில் பிறந்து தனது மரணத்தை நோக்கி வளர்ந்து பயணித்து தன்னை முடித்துகொள்கிறதோ
அதை உயிருள்ளவைகளில் சேர்க்கலாம், இந்த
மாதிரி இல்லாதது எல்லாமே உயிர் அற்றது.”
“அப்படின்னா நமக்கு முதல் முதலில் உயிரை
கொடுத்தது யாரு?”
“அதுதான் இப்ப இருக்கிற பெரிய குழப்பம்.
தெரிஞ்சவரைக்கும் எப்படியோ தற்செயலா பல செல்கள் சேர்ந்து நாம உருவாகியிருக்கிறோம்னு
சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் நம்மை ஒரு சில காரணங்களுக்காக யாராவது படைத்தது
இருக்க்கலாம்னும் சொல்றாங்க”
“அப்படி என்ன காரணம் நம்மை படைத்ததுக்கு?”
“நம்ம முன்னோர் ஜினோம் ல இருந்து நாம்
உருவாகும்போது கழிவாகும் சிலவற்றை வைத்து வேறு ஏதோ உயிர்களை உருவாக்கத்தான்
என்கிறார்கள்”
“அப்படின்னா அவங்களும் உயிர் உள்ளவங்கதானே,
நம்மை போலவ இருப்பாங்க?”
“இல்லை முற்றிலும் வேறு, அவங்களை நம்மோடு
ஒப்பிடவே முடியாது. அவங்க மனித இனம் இன்னும் அங்கே அவங்களோடு சேர்ந்த பலதும்
இருக்கும்”
“நம்மைப்போலவே அவங்களுக்கும் இறப்பு இருக்குமா?
அப்படின்னா அது எப்படி?”
“அது தெரியாது ஆனா அவங்க நம்ம பிறப்பு
இறப்பை பத்தி தப்பு தப்பா புரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியும்”
“எப்படி?”
“முதலில் நம்மை உயிரற்றவை வகையில் சேர்த்து
இருக்காங்க, அடுத்து நம்ம செல்களை தூசுகள் என்ற பெயரிலும், நாம் செய்யும் பாவங்களை
நிறை(mass) என்கிறார்கள். இன்னொரு விசயம் நம்ம இறப்பை கூட கணித்து இருக்காங்க
அது கொஞ்சம் சரி”
“அதுமட்டும் சரியா எப்படி செஞ்சாங்க?”
“தெரியல நம்ம பாவம் அதிகமாச்சுன்னா
கருப்பான ஒருபள்ளமா மாறி அட்டுழியம் செய்வதை அவர்கள் கருந்துளை என்றும் நல்லபடியாக
வாழ்ந்து குளிர்ந்த இடமாக நாம் மாறுவதை white dwarf னு சொல்றாங்க.
இன்னொன்னு என்னன்னா அவங்களுக்கே தெரியாது அவங்க இறப்புக்கு பிறகு என்ன ஆவங்கன்னு”
.
“அவங்களை படைத்தது யாரு?”
15 comments:
அடப்பாவி, கதை எழுத முன்னாடியே கதையா?
பாவம் y......!
ssu..))
நான் கதை எழுதுவதுக்கு முன்னாடிஉண்மைக்கே அதான் நடக்கும் ))
நட்சத்திரங்கள் கிராவிட்டான்ஸ்லதான் பேசிக்குமா?
நட்சத்திரங்கள் கிராவிட்டான்ஸ்லதான் பேசிக்குமா?//
எப்படி பேசினா என்ன விஷயம்தான் முக்கியம்))
கிரவிட்டான் இருக்கிறதா என்ன?
//////கணேஷ் said...
நட்சத்திரங்கள் கிராவிட்டான்ஸ்லதான் பேசிக்குமா?//
எப்படி பேசினா என்ன விஷயம்தான் முக்கியம்))
கிரவிட்டான் இருக்கிறதா என்ன?
///////
இருந்தாத்தான் லென்சிங் கான்செப்ட் ஈசியா இருக்கும்....
இருந்தாத்தான் லென்சிங் கான்செப்ட் ஈசியா இருக்கும்.//
இப்ப வெலங்கிரிச்சு))
//அம்மா நட்சத்திரம் சொல்ல கொஞ்சம் ஏமாற்றத்தோடு குழந்தை நட்சத்திரம் hydrogen ஐ இழுத்து பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தது.
//
எதையோ யோசிச்சேன், இதை எதிர்பார்க்கல!
science fiction எழுதும் பலர் இவ்வளவு அறிவுப்பூர்வமாய் எழுதி பார்த்ததில்லை.. உங்களுக்கு ஒரு சவால்.. வருங்காலத்தில் ஏழைகளே இல்லாமல் உலகம் இருந்தால், ஒரு வேலை அனைவரும் பணக்காரர்கள் ஆகி விட்டாலோ அல்லது ஏழைகள் எல்லோரும் இறந்து பணக்காரர்கள் மட்டும் மிச்சம் இருந்தாலோ இந்த உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து ஒரு கதை எழுத முடியுமா? உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. நீங்கள் தயாரா? jeevansure@gmail.com
ஒரு கதையே ஒரு கதை சொல்லுது ஆச்சர்ய குறி....!!!
I did not expect the end!
Nice Story!
suryajeeva//
கதையை எழுத முயற்சி செய்கிறேன்
நன்றி
MANO நாஞ்சில் மனோ//
அப்படியா ..ஆச்சர்ய குறி ))
நன்றிங்க
Nice Story!//
நன்றிங்க )
இப்பொழுதிருந்தே காத்திருக்கிறேன்..
Post a Comment