சிறு..சிறு..

     
    எப்படி இருப்பேன், என்ன செய்வேன், எனது இருப்பு எப்படி இருக்கும், காதலிப்பேனா, இல்லை ஏமாருவேனா? கடவுளை காண என்ன செய்வேன்? இல்லை கடவுளை காட்டுவதாக சொல்பவரிடம் ஏமாந்து போவேனா?மனைவி எப்படி அமைவாள்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?எத்தனை குழைந்தைகள்? வயோதிக நிலையில் என்ன நடக்கும்....என்று எதுமே தெரியாத நிலையில் வெறும் 23 chromosome களை மட்டும் கொண்ட sperm cell தான் இணைய போகும் பெண்ணின் egg cell ஐ நோக்கி பயணித்து தனது கூர்மையான தலையால் குத்தி உள்ளே சென்று அழகாக ஒரு கருவை அமைத்து பயணத்தை தொடங்கியது மரணத்தை நோக்கி.....

*******
 

     “சொன்னபடி கேள்..உனது விளையாட்டுத்தானால் இப்போது என்ன நடக்கும் தெரியுமா? போ பொய் நான் சொன்னதை கடையில் இருந்து வாங்கி வா.”

 “சரிம்மா நான் போகிறேன் என்று கிளம்பி போகும்போது அதில் உள்ளவற்றை வாசித்தான்..

oxygen       - 5 kg
estrogen      -  500 gm
testosterone    -  500 gm
Progestagens  – 500 gm
Thyroid      - 250 gm
Oxytocin    - 750 gm

இப்படியே தொடர கடைவந்து இருந்தது.


 

*******

“இந்த பூமி பிடிக்கவே இல்லை’

“ஏன்?”

“தெரியலை நாம எங்கயாச்சும் போகலாம் தனியா நமக்குன்னு ஒரு இடம்” என்றாள்

“சரி எங்கே போகலாம் நீயே சொல்லேன்”

“அப்படியே சுற்றலாம் எந்த இடம் பிடிச்சிருக்கோ அங்கு போகலாம் சரியா?” என்று சொல்ல அவர்கள் பூமியை விட்டு மேலே எழும்பி விண்வெளியில் சுற்றி தேடி கொண்டிருக்கும்போது எதிரில் இரு வேற்று கிரக வாசிகள் கிடைக்க..

“உங்களின் பயணம் எங்கே?” கேட்டார்கள் வேற்றுகிரக வாசிகள்

 “தெரியலை நாங்கள் இருக்கும் கிரகம் எங்களுக்கு ஏனோ பிடிக்க வில்லை அதான் வேறு இடம் தேடுகிறோம்...சரி நீங்க?”

“எங்களுக்கும்தான்..”

**

“எனக்கு உன் காதல் மேல் சந்தேகம் இருக்கு?”

“ஏன் திடிர்னு இப்படி சொல்றே?”

“ஆமாவா இல்லையா?”

“இல்லை... எனக்கு உன்னை ரெம்ப பிடிக்கும்..எனக்கு தெரிந்தவரை பூமியில் உனைப்போல திறமை கொண்டவர்கள் யரும் இல்லை..நீ செய்யும் எல்லாமே எனக்கு பிடிக்கும்....”

“பின்னே நீ ஏன் மனிதர்களை போல என்னை நினைத்து உருகி உருகி கவிதையெல்லாம் எழுத மாட்டிக்கே?” என்றது அந்த பெண் ரோபோ
**

16 comments:

எஸ்.கே said...

அந்த முதல் பத்தி ரொம்ப நல்லா இருந்தது!

எல்லாம் பாக்கெட்டில்! எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கும்!

ரோபோவுக்கும் உணர்வுகள் உண்டு!:-)

கணேஷ் said...

நன்றி ..

உங்களிடம் எந்த ரோபோ சொன்னது இப்படி??)))

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அடப்பாவிகளா...

சுபத்ரா said...

எப்படி இப்படியெல்லாம்?

ஆனந்தி.. said...

ஹ ஹ...கலக்கல் கணேஷ்...வெகுவாய் ரசித்தேன்...ஆரம்ப பாராவே அசத்தல்...ஒரு வேளை எதிர்காலத்தில் நாமளும் உணவுகளுக்கு பதில் நீ சொன்னதை தான் வாங்கி சாப்டுவோமோ...வருங்காலத்தில் summer holidays க்கு வேறு கிரகம் கூட போகலாம்..ஆனால் அங்கேயும் நம்ம மக்களால் polution ப்ராப்ளம் வரலாம்...காதல் னு வந்துட்டால் ரோபோ ல்ல இருந்து நம்ம நாய்க்குட்டி ஜீனோ வரை கவிதை எழுதுறதில் இருந்து தப்பிக்கவே முடியாது...ஹ ஹ...அசத்திட்ட உன் வித்யாசமான சிந்தனையில்...

கணேஷ் said...

அக்கா நான் ஏற்க்கனவே சொல்லியிருக்கேன்ல பொற்கொடி கதையில்...சில முக்கியமான் வேலைகளை செய்யும் ஹோர்மோன்கள் பாதிக்கப்பட்டு அதை நாம் வெளியில் இருந்து கொடுக்கும் நிலை வரலாம்...அதைத்தான் சொன்னேன்...

காதல் வந்த கவிதை எழுதனும்னு எனக்கு தெரியாது அக்கா அது என் கற்ப்பனை ...அனுபவம் இல்லை .)))

அக்கா ஜோடா ப்ளீஸ்..))

((எனக்கு இந்த வரிக்கு copy right வேணும் கொடுங்க)

ஆனந்தி.. said...

அக்கா சொத்து தம்பிக்கு தான்...ஜோடா வை வச்சுக்கோ...ஹ ஹ...

இம்சைஅரசன் பாபு.. said...

பஸ்ட் பாரா சூப்பர் கணேஷ் ..அதுவும் கடைசி மரணத்தை நோக்கி ..அப்படி முடிச்சிருக்குறது ரொம்ப டாப் ...

கணேஷ் said...

நன்றி பாபு சார்..))

குறையொன்றுமில்லை. said...

எப்படி இப்படில்லாம் யோசிக்கமுடிகிரது.
கலக்குரீங்க. நல்லா இருக்கு.

செல்வா said...

உண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்குங்க .. நானும் இனிமேலாச்சும் சுஜாதா கதைகள் படிக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு ..

Philosophy Prabhakaran said...

உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html

கணேஷ் said...

மிக்க நன்றி நண்பரே பார்த்தேன்.

கவிநா... said...

கலக்கல்.... சூப்பருங்க கணேஷ்...

எல்லாரும் சொல்லிட்டாங்க. இருந்தாலும் சொல்றேன். முதல் பத்தி வெகு அருமை....

சிறு சிறு கற்பனை... சீக்கிரம் நடந்தாலும் நடக்கலாம்... :))))

கணேஷ் said...

நன்றிங்க கவி..

Anonymous said...

அறிவியல் கலந்த பதிவு கலக்கல்.