கடவுளை காண ஒரே வழி
(நம்பகமான அறிவியல் முறையில்)
இந்தப் பெயர்ப்பலகையைப் போட்டு பல நாட்களாக ஆகியும் இதுவரை ஒருத்தரும் புத்தியைத் தேடி வரவில்லை..... நம்பிக்கையோடு இருந்தார் தனது இந்த புதியமுறை கண்டிப்பாக ஒரு நாள் வெளியில் புகழப்படும் என்பதில்.
புத்தி வயதானவர், தனது வாழ்நாளை விண்ணியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்து எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காததால் தனியாக ஒரு முயற்சியை மேற்கொண்டு அது அவருக்கு திருப்தியைத்தர கட்டடத்தில் இந்த பெயர்ப்பலகையோடு உட்கார்ந்து இருப்பவர்
இதுவரை சிலர் வந்து எப்படி என்று மட்டும் கேட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்கள். அவர் முழுவதும் சொல்லி முடிக்கும் போது கேட்பவர் அங்கு இருந்ததில்லை. இதனால் ஒருபோதும் அவர் வருத்தப்படமாட்டார்.
பல “...ந்தாக்கள்” கதவை, ஜன்னலை திறக்கக் சொல்லி கூப்பிட்டால் போய் ஏமாறுவார்கள், ஆனால் அறிவியலை நம்பமாட்டார்கள்.... எப்படி இருந்தாலும் எனது இந்த முறைதான் இறுதியானது. எத்தனை “....ந்தாக்கள்” எதை திறந்தாலும் கடவுளை காண முடியாது. அது நான் சொல்லும்வழியிலேயே சாத்தியம் என்பது அவரது அசையாத நம்பிக்கை..
அந்த இருவர் உள்ளே நுழைந்து யாரும் இருக்கிறார்களா? என்று தேடிக்கொண்டு இருக்கும்போது சதுரமாக கொஞ்சம் முனை ஊசியாக இருந்த அந்த பெட்டி போன்றதில் இருந்து புத்தி வெளியில் எட்டிப்பார்த்தார.... அந்த இருவரில் ஒருவன்.
“வெளியில் பெயர்ப்பலகை பார்த்தோம். இங்கு.....”
“ஆமாம் உங்களுக்கு விருப்பமா?”
“ம்ம் அதான் வந்து இருக்கிறோம்”
“இருங்கள் இந்த கலத்தில் கொஞ்சம் வேலை... வந்துவிடுகிறேன்” என்று சொல்லி புத்தி தனது வேலையை தொடர அந்த இருவரும் அந்த கலத்தை பார்த்தபடி அமர்ந்தனர்.
“சொல்லுங்க உங்கள் இருவரில் யாருக்கு விருப்பம்?”
“ஏன் இருவரும் போக முடியாதா?”
“ஏன் இல்லை போகலாம் நல்லது”
“இருவருக்குமே விருப்பம்தான்”
“சரி எனது முறை பற்றி ஏதாவது கேள்விபட்டு இருக்கிறிர்களா?”
“இல்லை”
“அறிவியல் அறிவு ஏதும் இருக்கா?”
“ம்ம் கொஞ்சம்”
“சரி எனது முறையை விளக்கமாக சொல்கிறேன் அப்புறம் உங்களின் முடிவை சொல்லுங்கள்”
“சரி, இதுக்கு ஏதும் பணம் கொடுக்கணுமா?” இருவரில் ஒருவன் கேட்டான்.
“உங்கள் விருப்பம்” என்றார் புத்தி.
“சரி சொல்லுங்க உங்களின் முறையை”
“கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா?” கேட்டார் புத்தி
“கண்டிப்பா அதான் வந்தோம்”
“ம்ம் நல்லது. பிரபஞ்சம் வெடிப்பில் 13.7 billion வருடங்கள் முன்னாடி உருவாகி காலத்தோடு விரிவடைந்து இந்த நிலையில் இப்ப இருக்கு. அப்படி பிரபஞ்சம் விரிவடைந்தால் ஒரு புள்ளியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது தொடங்கியிருக்க வேண்டும் அல்லது தொடக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி தொடக்கப்பட்டு இருந்தால் தொடங்கியவர்தான் கடவுள். பிரபஞ்சம் விரிவடையும் போது நேரம் அதோடு சேர்ந்து நகரும் இங்கு நான் செய்ய போவது முன்னோக்கி நகரும் காலத்தை பின்னோக்கி நகரச்செய்ய போறேன். காலம் பின்னோக்கி போனால் அந்த நேரத்தில் நடந்ததை உங்களால் உணர முடியும். அப்படியே 13.7 பில்லியன் வருடங்கள் பின்னாடி போனால் இந்த பிரபஞ்சத்தை உருவாகும் அல்லது உருவாக்கிய விதத்தை பார்க்க முடியும்”
“அப்ப நீங்க சொல்றது கால இயந்திரம் மாதிரியா என்ன?”
“இல்லை கால இயந்திரம் எல்லாம் கொஞ்சம் கற்பனையான விஷயம். இதற்காக நான் ஒரு கலம் அமைத்து இருக்கேன்..” என்று அங்கு இருந்த அந்த சதுரவடிவ ஒன்றை காட்டினார்..
“இது இங்கு இருந்து கொஞ்ச தூரம் வரை சாதாரண எரிபொருளில் பயணிக்கும் அடுத்து வெளியில் உள்ள hydrogen அல்லது helium போன்ற வாயுக்களை கிரகித்து தனது வேலையை செய்யும்...”
“இதில் 13.7 billion வருடங்களை பயணிப்பதற்குள் எங்களுக்கு ஏதும் ஆகாதா?”
“இல்லை இந்த கலத்தின் சிறப்பே ஒளியின் வேகத்தை விட 35% வேகமாக செல்லும் என்பதுதான்”
“சரி போகிற போக்கில் விண்வெளியில் இருக்கிற நட்சத்திரம், கருந்துளைகள், மீது மோதி ஏதாவது ஆனால்?”
“வாய்ப்பே இல்லை இதில் அதுக்கான சென்சார்கள் பொறுத்தி இருக்கிறேன். குறிப்பிட்ட தொலைவில் ஏதாவது இருந்தாலே இது, தான் போகும் திசையை மாற்றிவிடும். அதோடு ஏதாவது நட்சத்திரத்தின் அருகில் சென்றால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுக்குரிய சென்சார்கள் இதன் திசையை அதைவிட்டு மாற்றும்..”
“இதுக்கு முன்னாடி சோதித்து பார்த்து இருக்கிறீர்களா? ஏதாவது ஆச்சுன்னா எங்களுக்கு?”
“நீங்கள் இங்கு இருந்து எதை சாதிக்க போகிறீர்கள்?” என்றார் கொஞ்சம் கோபமாக...... இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாயினர்.
“என்ன போக விருப்பமா?”
“ம்ம் போகிறோம்”
“சரி நான் சரியாக 13.7 billion வருடங்கள் மட்டும் பின்னோக்கி போகுமாறு வைக்க போவதில்லை. ஒருவேளை இந்த நேரத்தில் பிரபஞ்சம் உருவாக தொடங்கியிருந்திருக்கலாம் அதனால் இதை விட சில வருடங்கள் பின்னாடியே வைக்கிறேன் உங்களுக்கு சரியாக இருக்கும். அப்படியே பின்னாடியே போயிட்டாலும் பிரபஞ்சதை உருவாக்கும் முன்னாடி கடவுள் என்ன செஞ்சிகிட்டு இருந்தார்னு பார்த்துட்டு வாங்க சரியா”
“சரி எப்போ போகப்போகிறோம்?”
“இன்னும் எனக்கு கலத்தில் மேம்பாட்டு வேலைகள் இருக்கு இரண்டு நாள் கழிச்சு வாங்க. ஒரு நாள் கலத்தை இயக்குவதுக்குபயிற்சி முடிந்த பிறகு அடுத்த நாள் உங்களின் பயணம் தொடரும்..”
இரண்டு நாள் பயிற்சியில் கலத்தை பற்றிய எல்லா விசமும் விளக்க பட்டது. ஏதாவது ஆபத்து என்றால் எப்படி திரும்புவது போன்றவை தெளிவாக்கபட்டது..
கிளம்பினார்கள். சத்தம் ஒன்றும் பெரியதாக இல்லை. சுற்றி ஒரே புகை மண்டலமாக மாறி கொஞ்ச நேரத்தில் மறைந்தது.... கிளம்பி மேலேபோய் கண்ணுக்கு மறையும் வரை அதையே பார்த்து கொண்டு இருந்த புத்தி ஒரு பெருமூச்சோடு உள்ளே போனார்.
கலத்தில் ...
“உனக்கு நம்பிக்கை இருக்கா கடவுளை பார்ப்போம்னு?” என்றான் ஒருவன்
“கண்டிப்பா கடவுள் இருந்தால் இந்த முறையில் சாத்தியம்தான்”
“கடவுளை பார்த்தால் என்ன செய்ய?”
“அதை பார்த்தபிறகு யோசிப்போம் இப்போது கலத்தை இயக்குவதில் கவனம் வை”
கலம் வேகமாக பயணித்தது.... அது பயணிக்கும் வேகம் தூரத்திற்கு ஏற்றவாறு காலம் மாறுவது திரையில் தெரிந்தது...
10.3 billion
8.7 billion
5.3 billion
3.1 billion
target reached
இருவருக்குள் மௌனம்..வெளியில் வெளிச்சம் இல்லை..இன்னும் big bang நடந்து இருக்கவில்லை என்பதால் நட்சத்திரம் ஏதும் இல்லை..ஒரே இருட்டு.... அங்கு இருந்த hydrogen helium வாயுக்களை கலம் சுவாசித்து கொண்டு இருந்தது...
இருவரும் தேடினார்கள் கடவுள் எங்கே இருக்க கூடும என்று....அவர்களுக்கு தெரியும் இன்னும் நமது பிரபஞ்சம் உருவாகவில்லை..இருப்பது வெறும் வெற்றிடம் மட்டும்தான் என்று...
கலத்தில் இருந்த விளக்கின் வெளிச்சம் படும் தூரம் வரை தேடினார்கள்...கொஞ்ச தூரம் தள்ளி போய் தேடினார்கள்...
(கதையின் முடிவு சரியாக புரியாதவர்களுக்கு..புத்தியின் முகவரி கிடக்கும்...ஒரு முறை விஜயம் செய்ய...)))
(கதையின் முடிவு சரியாக புரியாதவர்களுக்கு..புத்தியின் முகவரி கிடக்கும்...ஒரு முறை விஜயம் செய்ய...)))
10 comments:
நல்ல கற்பனை!
கடவுளை எப்படி தேடினாலும் கண்டுபுடிக்க முடியலையே!:-)
கடவுளைப்பற்றிய உங்கள் எண்ணத்தை, கவனமாகச் சொல்லியிருகீங்க கணேஷ்...
வெகு சிறப்பான கற்பனை...
//“இதுக்கு முன்னாடி சோதித்து பார்த்து இருக்கிறீர்களா? ஏதாவது ஆச்சுன்னா எங்களுக்கு?”
“நீங்கள் இங்கு இருந்து எதை சாதிக்க போகிறீர்கள்?” என்றார் கொஞ்சம் கோபமாக...... இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாயினர்.//
நல்ல நகைச்சுவை... ஆமாம், இதென்ன சோதனை ஓட்டமா?
//அவர்களுக்கு தெரியும் இன்னும் நமது பிரபஞ்சம் உருவாகவில்லை..//
இன்னும் உருவாகியிருக்கவில்லை. அப்போது உருவாகும் என்ற நம்பிக்கை கதையில் இருக்கிறது இல்லையா? :)
//இருப்பது வெறும் வெற்றிடம் மட்டும்தான் என்று...//
வெற்றிடம் என்று எதுவுமே இல்லை கணேஷ். அங்கேயும் காற்று அலைந்து கொண்டிருக்கும், கடவுளைப்போல. கடவுளும் நீங்கள் சொல்லும் அறிவியல் போல் தான். இது என் கருத்து.
கதை அருமை.... வாழ்த்துகள் கணேஷ்....
கதையை படிச்சிட்டேன்...எனக்கு அந்த புத்தி அப்டிங்கிற பேரே புதுசா இருந்தது...ஆனால் இந்த கதைக்கு related ஆ வும் இருந்தது...நீ புத்திசாலி கணேஷ்....நல்லா சுவாரஸ்யமா இருந்தது...நான் ரெடி அந்த கலத்தில் ஏற..முகவரி கேட்டால்..உன் ப்லாக் அட்ரஸ் கொடுப்ப..ஹீ..ஹீ..அதானே....:)
எஸ்.கே//
அப்படியா...)))
நன்றி நண்பரே..
கவிநா//
கருத்தை பகிர்ந்து கொண்டதுக்கு..நன்றி.
ஆனந்தி//
ம்ம சரிக்கா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே..))))
இல்லை..இப்போது அந்த கலம் திரும்பவில்லை வந்த பிறகு சரியான முகவரி கொடுக்கிறேன் ...)))
கணேஷ்,
முடிவிற்கு முன் வரை விறுவிறுப்பாக சென்றது .
முன் பகுதி தந்த டெம்ப்ட்க்கு ஏற்ற படி முடிவு அமையவில்லை என நினைக்கிறேன்.
எனக்கு புரியவில்லை என்பதை இப்படியும் சொல்லலாம் :)
அல்லது big bang நிகழும் முன் தருணத்தில் அவர்கள் உலவி கொண்டிருக்கிறார்களா?
அப்படி என்றால் கடவுள் இல்லை என்கிறீர்களா?
கதைப்படியோ அல்லது உங்களுக்கோ - கடவுளின் இருப்பை பற்றிய கருத்து என்ன?
கதையின் முடிவில் சொல்லியிருக்கிறேன் என் முடிவை..
கடவுள் இருந்தால் தெரிந்து இருப்பார்..இன்னும் கடவுள் இருந்து இருந்தால் அந்த big bang முன்னையான வெற்றிடம் காற்று இதை சொல்லியிருக்க மாட்டேன்..இவை எல்லாம் இயற்கையாக பிரபஞ்சம் உருவனதுக்கு நான் சொன்ன மறைமுக காரணாம்
அதே நேரத்தில் ஏன் எண்ணத்திற்கு யாரையும் கட்டாயபடுத்த விரும்பவில்லை என்பதே கதயின் முடிவை அப்படி அமைத்தேன்.
நன்றி
ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க. (கதையின் முடிவைச் சொல்லல)
உண்மைதான்..
நன்றிங்க..))
Post a Comment