சுஜாதா


   சுத்தமாக எழுதும் ஆர்வமோ,அறிவோ தொடக்கத்தில் இல்லைதான்..கொஞ்சம் தகவல்களை சேகரிததுவைக்க வலைப்பூ ஆரம்பித்து அடுத்து கட்டுரைகள் எழுத முயற்சி செய்து, இப்போது அறிவியல் கதைகளில் வந்து முடிந்து இருக்கிறது..அதே நேரத்தில் எழுத ஆரம்பித்தபோதும் அறிவியல் மட்டும்தான் எழுத நினைத்தேன் என்றில்லை...தொடக்கத்தில் கொஞ்சம் தெரிந்ததை எழுதினேன்..அடுத்து நான் படித்த புத்தகங்களும் அறிவியலாக இருக்க என் எழுத்தும் அப்படியே தொடர்ந்தது..


   அறிவியல் தவிர encryption story யில் அதிக ஆர்வம உண்டு..தொடக்கத்தில் அதிகம் எழுதி யாரும் படிக்கவில்லை என்பதற்காக கைவிட்டேன்..அடுத்து கொஞ்சம் சிறுகதைகள்..இவ்வளவுதான் இந்த நூறு பதிவுகளில்.....

ஏற்க்கனவே சொல்லியதுதான்..கொஞ்சம் உருப்படியாக அறிவியல் விசயங்கள் எழுவதுக்கு காரணம் சுஜாதா தான்......இவர் மீது நிறையா ஆர்வம ஆசை உண்டு..நான் அதிகம் படித்தது சென்னையில் வேலை பார்க்கும்போது ஒரு கிளை நூலகத்தில்..வருடம் 40 ரூபாய் கட்டணம். ..நினைவு இருக்கிறது படித்த புத்தகம் எல்லாமே சுஜாதாவுடையது..

   
    சில நாள்களில் அங்குள்ள பணிப்பெண் பழகிவிட அவர்களிடத்தில் சுஜாதா புத்தகம் வந்தால் தனியாக எடுத்து வைக்க சொல்லி படித்து இருக்கிறேன்..சொல்லபோனால் சுஜாதாவை தவிர வேறொன்றும் படிக்கவில்லை.. அங்கு இருந்த இரண்டு வருடத்தில் அதிகமாக சுஜாதா கொஞ்சம் தியானம்,மனக்கலை வரலாறு சம்பந்தமானவற்றை படித்தேன்..

     
    இந்த நிலைவரை சுஜாதாவின் துள்ளல் எழுத்தும், அவர் சொல்லும் அறிவியல் விசயங்களும் என்னுள் நிரம்பியிருந்தன..அடுத்து faridabad வேலை கிடைத்து வந்த பிறகு சுஜாதாவை முற்றிலும் பிரிந்தேன்..தமிழ் புத்தகம் வாங்க டெல்லி போக வேண்டும்..பாசை தெரியாது..      

   இந்தநிலையில் என் கவனம் எளிதில் கிடைத்த ஆங்கில புத்தகங்களின் மீது சென்றது..அதுவும் சுஜாதா தனது எழுத்துவாக்கில் சொன்னவை..அவரது கட்டுரைகளில் அவர் படித்த புத்தகங்களை சிலாகித்து சொல்லியிருப்பார்..அல்லது ஏதாவது ஒரு விசயத்தை கொஞ்சமாக சொல்லிவிட்டு முழுவதுமாக தெரிந்துகொள்ள இந்த புத்தகத்தை படிக்குமாறு சொல்லுவார்..

      
    அவர் எதையெல்லாம் படித்தேன் என்றாரோ நானும் வாங்கினேன், சொல்வதென்றால் ஒருவர் கேள்வி கேட்டு இருப்பார் நீங்கள் ayan rand ன் we the living படித்து இருக்கிறிர்களா? என்று அதற்கு சுஜாதா சிறு வயதில் படித்து இருக்கிறேன் எளிய எழுத்து நடையுடன் கூடிய புத்தகம் என்ற மாதிரி சொல்லியிருப்பார்..அடுத்த நாள் மாலையில் என் அறையில் அந்த புத்தகம் இருந்தது......கொஞ்ச நாள்களில் நானே சில நல்ல புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..
*****
    ஜாதகத்தில் ஒருவருக்கு பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பு இருப்பதாக இருந்தால் மட்டும் போதாது...எழுத வேண்டும் என்றால் மிக அதிகமாக வாசிக்க வேண்டும்..புத்தக தேர்வும் மிக முக்கியம்..என்னை பொறுத்தவரை படித்து முடித்து புத்தகத்தை வைக்கும் போது அதில் இருந்து ஏதாவது கற்று இருக்கவேண்டும்..நான் எந்த நாவல் படித்தாலும் சரி அதில் வரும் சில புதிய விசயங்களை குறிப்பு எடுத்து இணையத்தில் தேடிபார்ப்பது வழக்கம்..

     
   ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை படிப்பது போய் இப்போதெல்லாம் மூன்று நான்கு
வரை படிக்கிறேன்..ஒன்று சலிப்பு தட்டினால் மற்றொன்று...தொடக்கத்தில் சில தெரியாத விசயங்களால் நிறையா மன உளைச்சல் இருக்கும்...... விசயங்களை ஓரளவு புத்தகங்களை படித்து தெரிந்து கொண்ட பிறகு அது நீங்கியது..இப்போது இணையத்தேடுதலால் இந்த பிரச்சினை சுத்தமாக இல்லை..

     
    புத்தக தேர்வும் மிக முக்கியம்..ஏதோ படிக்கிறேன் என்று சில நாவல்களை படிப்பதில் விருப்பம் இல்லை..கொஞ்சமாவது யோசிக்க வைக்க வேண்டும்.சுஜாதா சொன்னது போல தினமும் ஒருமணி நேரமமாவது படிக்க வேண்டும் என்பது போக நேரம் போவது தெரியாமல் கூட படித்ததுண்டு...ஆனால் சுஜாதா இரவு இரண்டு மணிவரை படித்துக்கொண்டு இருப்பார் என்று அவர் மனைவி ஒரு இடத்தில் சொன்னதாக நினைவு

      
    நானும் புத்தகம் படிக்கிறேன் என்று தலைக்கு கிழே உயரமான தலையணை வைத்து படிப்பதற்கு படிக்காமலேயே இருந்து விடலாம்..இப்படி படிப்பது சுகமாக இருக்கும்தான்...சுயனுபவம்..அப்படி படித்ததில் எனக்கு cervical பிரச்சினை வந்து பெறும் அவதிபட்டேன்..மருத்துவரிடம் சென்றால் இது தொடக்கம்தான் என்று சொல்லி மாத்திரை கொடுத்தார்..தேறவில்லை..அங்கு இருந்த ஒரு பாட்டியிடம் இதற்கு என்று தனியாக யோகா பயின்று பின்பற்றி பின் குணமானேன்..இப்போது தலையனையே உபோகிப்பது இல்லை..
******

     தான் எழுதுவதை எல்லோரும் ரசித்து படிக்க வேண்டும் என்ற எண்ணம அனைவருக்கும் இருப்பதுதான்...இதற்கு ஒரேவழி உருப்படியாக எழுத வேண்டும்.அதைவிடுத்து நானும் எழுதுகிறேன் என் எழுத்தை யாரும் படிப்பதில்லை என்றால் அது அவர்களின் கஷ்டம..சில புதிய எழுத்தாளர்கள் சுஜாதா வீட்டு மளிகைக்கடை சீட்டை வெளியிட்டால் கூட படிப்பார்கள் எங்கள் எழுத்தை படிக்க மாட்டார்கள் என்று படித்ததாக நினைவு.....உண்மைதான்.. சுஜாதா தனது மளிகைசீட்டை வெளியிட்டாலும் என்னை போன்றவர்கள் படிப்பார்கள்.

     
   இங்கு நான் எழுதியிருக்கும் நூறு பதிவில் இன்னும் யாரும் படிக்காத நான் மட்டுமே படித்த பதிவுகள் நிறையா இருக்ன்றன.எப்போதும் போல ரசித்து எழுதியவைதான் அவைகளும்.....நான் எழுதியவைகள் பெரும்பாலும் ஏதாவது சிறு அறிவியல் விசயம் கலந்து இருக்கும்..இல்லையென்றால் கொஞ்சம் நகைச்சுவை கலந்த விசயம்.

 
   வெறும் அறிவியலை மட்டுமே கட்டுரைகளாக எழுதிவிட்டு உர்ரென்று உட்கார்ந்து இருந்தால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து அறிவியலோடு கொஞ்சம் நகைச்சுவையும் கலந்தேன்..சொல்லவரும் ஒரு அறிவியல் விசயம்,அதற்கு தேவையான கதைக்கரு மற்றும் கற்ப்பனை கதாபாத்திரம் இதுதான் நான் உபோயோகிப்பது.

இதற்காக நான் உருவாக்கி தொடர்வதுதான் வைத்தி என்ற மருத்துவர், புனி என்ற மாணவி. ஒரு இடத்தில் ஜீனோ போன்ற நிசி எனும் நாயை உபோயோகித்து இருப்பேன்.மற்ற இடங்களில் என்னைவைத்தே எழுதுவது வழக்கம்..இதில் வரும் கணேஷின் கேரக்டர் உண்மை..சொல்லும் விசயம் கற்ப்பனை.

     
    விசயங்களை சொல்லும்போது தேவையானவற்றை சுருக்கமாக புரியும்படி சொல்வது வழக்கம். ஒரு பத்தியில் சொல்லும் விசயத்தை ஜவ்வாக இழுத்து நானும் எழுதுகிறேன் பார் என்று ஜவ்வு முட்டாய் விற்பது பிடிக்காது.சுஜாதாவை மட்டும் படித்ததால முதல் வரியில் கதையை ஆரம்பித்து சொல்லவரும் விசயத்திற்கு முக்கியம் கொடுப்பது பிடிக்கும்.ஏதாவது எழுத வேண்டுமே என்பதற்காக ஏற்க்கனவே சொன்ன விசயத்தை மீண்டும் சொல்லி அரைத்த மாவை அரைக்க விரும்பியதில்லை அந்த நேரத்தில் ஏதாவது உருப்படியாக புத்தகம் படிப்பேன்.

   
    நான் சொல்லும் விசயங்களை எல்லோரும் புரிந்து கொண்டு ம்ம் நன்றாக புரிந்தது என்று நிம்மதியடைவார்கள் என்றில்லை..சிலருக்கு அறிவியல் பிடிக்காமல் அதை வெறும் வார்த்தைகளாக படித்து நகர்ந்துவிட்டு கதையின் முடிவு என்ன என்பதுக்குகூட படிக்கலாம்.. ஆனால் என் துரதிஷ்டம் யாரும் எதை விரும்பினார்கள் என்பதை பின்னுட்டத்தில் சொல்வதேயில்லை..எனது சில தடுமாற்றங்களுக்கு படிப்பவர்களின் கருத்து இல்லாததும் ஒரு காரணம்.

 
    இந்த நிலையில் நூறு பதிவுகளை முடித்து இருக்கிறேன்..சாராம்சமாக பார்க்கும்போது கொஞ்சம் உருப்படியாகத்தான் எழுதி இருக்கிறேன்..வாசிக்கும் ஆர்வம இன்னும் குறையவில்லை என்பதால் நிறைய எழுதுவேன்..கண்டிப்பாக அறிவியல்தான்..... ஏதாவது வித்தியாசமாக சிலவற்றை எழுத எண்ணம இருக்கின்றது.

இதுவரை என் பதிவுகளை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்..முடிந்தவரை எப்படி எழுதினால் நல்லா இருக்கும் என்பதை சொன்னால் கொஞ்சம் திருத்த முடியும்...அதே நேரத்தில் எனது பதிவுகளை பலரும் படிக்க உதவிய இன்டலி, உலவு,தமிழ் மணம் போன்ற தளங்களுக்கு நன்றிகள்.

    
   பதிவின் தலைப்பு பற்றி..... சாதரணமாக சுஜாதா என்று பெயர் போட்டு எழுதுவதுக்கும் அவரின் ரசிகனாக நூறாவது பதிவில் அவர் பெயரை போடலாம் என்ற எண்ணம்தான்..வருகின்ற காலங்களில் எழுத போகும் 200,300 வது பதிவுக்கும் இதே தலைப்புதான் விசயமும், அனுபவும் வேறாக இருக்கலாம் அவ்வளவே.

34 comments:

Unknown said...

//ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை படிப்பது போய் இப்போதெல்லாம் மூன்று நான்கு வரை படிக்கிறேன்//
சுஜாதாவும் அப்படித்தான் படிப்பார் இல்லையா?
வாழ்த்துக்கள் பாஸ்!

Unknown said...

திரட்டிகளில் இணைக்கல?

சுதர்ஷன் said...

சுஜாதா அவர்களுக்கும் உடனேயே அடையாளம் கிடைத்திராது ...புத்தகம் படிப்பது ,தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பது நல்லது .. வாழ்த்துக்கள் தோழரே

கணேஷ் said...

ஜீ... said...//

ஆமாம் அவர் அதிகமான புத்தகங்களை ஒரே நேரத்தில் படிப்பார்...

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
ப்ளாக் செயல்படுவதில் பிரச்சினை..இப்போது இணைத்துவிட்டேன்..

கணேஷ் said...

S.Sudharshan said...//

உண்மைதான்..

எழுதுகிறோமோ இல்லையோ கண்டிப்பாக வாசிக்க வேண்டும்..சுஜாதா அடிக்கடி சொல்லும் அறிவுரையும் இதுதான்..

வாழ்த்துக்கு நன்றி

வருணன் said...

நண்பா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஒரு படைப்பாளியாக ஆவல் உள்ளவன் முதலில் ஒரு தேர்ந்த வாசகன் ஆக வேண்டும். புத்தகத் தேர்வு அதி முக்கியம். அவனது இப்போதைய வாசிப்பே பிற்காலத்தில் அவனது எழுத்தின் கூர்மையை, கருத்தாக்கத்தின் ஆழத்தை நிர்ணயிக்கும்.

பணிக்கிடையே, நானும் சில காலமே நானென்னை தீவிர வாசிப்புத் தளத்திற்கு நகர்த்தியிருக்கிறேன்...

ஆனால் ஒரு விஷயம் எனக்கு சற்றே நெருடலாய் படுகிறது. எப்போதுமே ஒரே படைப்பாளியின்(Sujatha, in your case) படைப்புகளை வாசிக்காதீர்கள். அதுவும் வாசிப்பு என்பதனை உங்கள் எழுதும் திறனை கூர்தீட்டிடவே என்பதான ரீதியில் அணுகும் வகையில். சில காலங்களில் உங்களை அறியாமல் உங்கள் எழுத்தில் சுஜாதா அமர்ந்து சிரிப்பார். ஒரு எழுத்தாளனுக்கு அவனது சுய சாயலும், தனித்த மொழியுமே அடையாளம் இல்லையா? அதுவன்றி வேறொரு படைப்பாளியின் சாயலில் உங்கள் எழுத்து தொனிப்பது அபாயகரமானதே...

பல படைப்பாளிகளை வாசிக்கும் போது மட்டுமே வாசிப்பில் பன்முகத் தன்மையை எட்ட முடியும். மெல்ல அந்த பன்முகத் தன்மையை உங்கள் எழுத்தில் வார்த்திடும் போது கருத்திலும், மொழியாளுமையிலும் அது சிறந்ததொரு நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமே.

என்னைப் போலவே எழுத்தார்வம் இருப்பது தங்களின் இப்பதிவின் மூலம் உணர முடிந்ததால் பகிர விழைந்தேன்...
பிரியப்பட்டால் தொடர்ந்து பகிரலாம்...

கணேஷ் said...

அருமையான கருத்து..முழுமையாக உடன்படுகிறேன்..

நான் இங்கு சுஜாதாவை அதிகம் சொன்னதுக்கு காரணம்..ஒரு செயலுக்கு தொடக்கம் எப்படியோ அப்படித்தான் முடிவும்..வாசிக்கும் ஆர்வம் இருந்து தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு புத்தகம் படித்து பின் சலிப்புதட்டி வாசிக்குபழக்கம் போகாமல் இருக்க தொடக்கத்தில் இந்த மாதிரியான நல்ல புத்தகங்களை படிக்கலாம் என்று வழிகாட்டியவர் சுஜாதா.

நான் தொடக்கத்தில் அதிகம் படித்தவர் சுஜாதா..அடுத்த காலங்களில் அவர் சொன்ன புத்தகங்கள், நானே தெரிந்து எடுத்த புத்தகங்கள என ஏராளம்..பதிவில் சொல்லியிருக்கிறேன்..

ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரது சாயலில் எழுதுவது தேவை இல்லைதான்..
மிக அருமையான கருத்து...மிக்க நன்றி..

ஆனந்தி.. said...

பதிவை படிக்கலை...அதுக்கு முன்னாலே செஞ்சுரி போட்டதுக்கு உனக்கு இந்த அக்காவின் பெரிய பூங்கொத்து...இந்த பிடிச்சுக்கோ..:))

ஆனந்தி.. said...

நான் முன்னாடியே guess பண்ணிட்டேன் கணேஷ்..உன் நூறாவது பதிவு கட்டாயம் சுஜாதா சம்பந்தப்பட்டது தான் இருக்கும்னு...அதே...அதே...:))

எஸ்.கே said...

முதலில் 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

ஒரு ரசிகனாக, வாசகனாக சுஜாதாவைப் பற்றி மட்டும் நீங்கள் இப்பதிவில் எழுதவில்லை. ஒரு படைப்பாளி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்!

//படித்து முடித்து புத்தகத்தை வைக்கும் போது அதில் இருந்து ஏதாவது கற்று இருக்கவேண்டும்

விசயங்களை சொல்லும்போது தேவையானவற்றை சுருக்கமாக புரியும்படி சொல்வது வழக்கம்.//

இந்த இரு கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

//எனது சில தடுமாற்றங்களுக்கு படிப்பவர்களின் கருத்து இல்லாததும் ஒரு காரணம்//
ஒரு படைப்பாளியாய், உங்கள் படைப்புகளின் நிறை குறைகளை அறிய முடியாத ஆதங்கம் புரிகின்றது. நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

நானும் தங்கள் பதிவுகள் பலவற்றை இன்னும் படிக்கவில்லை. படிக்க முயற்சிக்கிறேன். உங்களைப் போன்று அறிவியல் விசயங்களையும், அது சார்ந்த கருத்துக்களையும் தமிழில் எழுதுபவர்கள் மிக குறைவு.

உங்கள் படைப்புகள் இன்னும் மென்மேலும் சிறப்பு பெற்றும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

என்றும் உங்கள் நண்பனாய், வாசகனாய்..

ஆனந்தி.. said...

வருணன் கம்மென்ட் ரொம்ப அற்புதமான கம்மென்ட் இல்லையா கணேஷ்...அவர் சொல்ற விஷயங்கள் யோசிக்க பட வேண்டியவை...ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் inspiration ஆ நாம் எடுத்து கொள்ளும்போது நம்மை அறியாமல் நம் இயல்பு போயி அந்த கேரக்டர் ஆ வே தான் எக்ஸ்பிரஸ் பண்ணுவோம்...படிக்கும் ஆர்வம் உனக்கு நிறைய இருக்கும் பட்சத்தில்...நீ நிறைய எழுத்தாளர்கள் படைப்புகளை முயற்சி பண்ணு கணேஷ்..உனக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையில் தான் நிறைவு இருக்கும் எப்பவும்....

எஸ்.கே said...

என்னைப் போன்றவர்களால் புத்தகம் படிக்க ஆசையாக இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. இணையமே அதை ஓரளவு தீர்த்து வைக்கின்றது. ஆனால் ஆங்கில புத்தங்கள்தான் படிக்க முடிகின்றது. எப்படியோ தகவல்கள் தெரிந்துகொண்டால் சரி!:-)

ஆனந்தி.. said...

//இங்கு நான் எழுதியிருக்கும் நூறு பதிவில் இன்னும் யாரும் படிக்காத நான் மட்டுமே படித்த பதிவுகள் நிறையா இருக்ன்றன//

:))))))

ஆனந்தி.. said...

//ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை படிப்பது போய் இப்போதெல்லாம் மூன்று நான்கு
வரை படிக்கிறேன்.//

எப்போ நீ ஜீனோ ஆன?? :))) நிலா பக்கத்தில் இருக்குமோ அப்போ..ஹ ஹ...

ஆனந்தி.. said...

//ஆனால் என் துரதிஷ்டம் யாரும் எதை விரும்பினார்கள் என்பதை பின்னுட்டத்தில் சொல்வதேயில்லை//

கணேஷ்...அறிவியல் கதைகள் அவ்வளாவாய் யாரும் வலைப்பூவில் முயற்சி பண்ணுவதில்லை...ஸோ படிக்க வரும் வாசகர்களுக்கு ஒன்னு மலைப்பா இருக்கலாம்...இல்லை முதலில் படிக்கும் அனுபவமாய் இருக்கலாம்..இல்லை தப்பான தளத்துக்கு வந்துட்டோமா னு ஒரு குழப்பம் இருக்கலாம்...நல்லா கவனி...அறிவியல் கதைகள் எழுதும் போது நீ நல்லா observe பண்ணிட்டு தான் படைப்புகள் கொடுக்கிற...இன்பாக்ட்..எனக்கெல்லாம் அது பெரிய information ஆ தான் இருக்கு...அதில் எந்த குறை சொல்ல முடியும்...தெரியாத ஒரு விஷயங்கள் தெரிஞ்சுக்கும்போது குறைகள் தெரியாது கணேஷ்...மலைப்போட வேணும்னால் படிச்சுட்டு நகரலாம்...புரியாதவங்களுக்கு என்ன புரியலன்னு கேட்கவும் புரியாமல் தெரியாமல் நகரலாம்...சரியா...ஸோ இதை துரதிர்ஷ்டம் நினைக்காத...சைலென்ட் வாசகர்கள் உனக்கு நிறைய பேர் உண்டு...ஸோ இன்னும் நல்லா innovative ஆ யோசிச்சு படைப்புகளை பகிர்ந்து கொள்..all the best my dear brother..:)).

சமுத்ரா said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

சமுத்ரா said...

அறிவியலை நிறைய பேர் படிப்பதில்லை தான்.. still keep writing ..

கணேஷ் said...

@ஆனந்தி sis//

அக்கா ரெம்ப நன்றி..

இன்னும் பூங்கொத்து வந்து சேரவில்லை..))
உங்களின் ஏன் பதிவை படித்து தொடர்ந்து பதில் போடுவர்களில் நீங்களும் ஒருவர்.. உங்களின் கருத்துக்கள் பிடிக்கும்..இங்கே சொன்ன கருத்துகளையும் ஏற்கிறேன் அக்கா..

கண்டிப்பா நல்ல விதமாக எழுவேன்..தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சரியா..

நன்றி

கணேஷ் said...

@எஸ்.கே..//

ரெம்ப சந்தோசம் நண்பரே..

நான் இதுவரை எழுதிவந்த கருத்துகளை இங்கு சொல்லியிருந்தேன்..அது உங்களுக்கு பிடித்திருக்கிறது நன்றி

நிறையா வாசியுங்கள்..நல்ல பவிசயங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி..

உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கணேஷ் said...

@சமுத்ரா..

அனுபவம் பேசுகின்றது நினைக்கிறேன்..)))

வாழ்த்துக்கு நன்றி.

கவிநா... said...

சலிப்புத்தட்டாத உங்கள் அனுபவப்பதிவே நீங்கள் அதிகம் படிப்பதை உறுதிசெய்கிறது.

100 -வது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள் கணேஷ். 200 , 300 பதிவைத்தாண்டி மேலும் தொடர்வேன் உங்கள் நம்பிக்கை நிறைவேறும் என்று நானும் நம்புகிறேன், வாழ்த்துகிறேன்.

தியானம், மனக்கலை வரலாறு பற்றிப் படித்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும் நிறைய சிறுகதைகளை எழுதுங்கள்.

நிறையப்படித்து, நிறைய எழுதி சாதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கணேஷ்...

MANO நாஞ்சில் மனோ said...

சுஜாதா ஒரு திறந்த பல்கலைகழகம்.....
இதற்க்கு எந்த மாற்று கருத்தும் இல்லை....

இம்சைஅரசன் பாபு.. said...

100வது பதிவிற்கு வாழ்த்துகள் ,...சுஜாதா தலை சிறந்த எழுத்தாளர் .நீங்களும் அதே போல் வர வாழ்த்துக்கள்

கணேஷ் said...

@கவி...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவி..

கணேஷ் said...

@ மனோ..

உண்மைதான்..நன்றி..

கணேஷ் said...

@பாபு...//

ரெம்ப நன்றி சர்ர்..நிறையா எதிர்பார்க்கிரிங்க)))

சகா said...

ஹலோ கணேஷ் ,
யதேச்சையாக இன்று உங்கள் தளம் வந்தேன் . its good .
நல்ல writting style .. ofcourse சுஜாதா அவர்கள் என்னை மிகவும் பாதித்த ஒருவர் .
எனது வாசிப்பு தளத்தை விரிவுபடுத்தியது அவர்தான் . உங்கள் பெயர் கணேஷ் என்பது இன்னும் சிறப்பு :)

சகா said...

ஹலோ கணேஷ் ,
யதேச்சையாக இன்று உங்கள் தளம் வந்தேன் . its good .
நல்ல writting style .. ofcourse சுஜாதா அவர்கள் என்னை மிகவும் பாதித்த ஒருவர் .
எனது வாசிப்பு தளத்தை விரிவுபடுத்தியது அவர்தான் . உங்கள் பெயர் கணேஷ் என்பது இன்னும் சிறப்பு :)

கணேஷ் said...

@சகா...

பாராட்டுக்கு மிக்க நன்றி..

எனக்கும் கொஞ்சம் பெருமைதான் கணேஷ் என்ற பெயர் தற்செயலாக அமைந்து இருப்பது...))

செல்வா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்ங்க. அதிலும் முழுவதும் சுஜாதா பத்தி சொல்லிருக்கீங்க. நீங்க இந்தப் பின்னூட்டத்தப் பார்ப்பீங்களோ இல்லையோ தெரியாது ? நானும் நேரம் இருக்கும்போது உங்களோட பழைய பதிவுகள படிக்கிறேன் .. ஏன்னா அந்த சிறு சிறு அப்படிங்கிறதுதான் முதல்ல படிச்சேன் .. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ..

சரி ஒரு உதவி . எனக்கும் அறிவியல்னா ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு நேரம் இருந்த சுஜாதா சாரோட உங்களை ரொம்ப கவர்ந்த புத்தங்களா எனக்கு சொல்லுங்க .. நானும் படிக்கணும்னு நினைக்கிறேன் ..

கணேஷ் said...

மிக்க நன்றி நண்பரே..

புத்தக பெயர்களை தனிமடலில் அனுப்புகிறேன்

Mohammed Rafi TMH said...

உங்கள் எழுத்தில் நிறைய நிறுத்தல்கள் (dot. comma etc. )உள்ளது போன்ற உணர்வு தோன்றுகிறது. திக்கல் வாய்காரர் கதை சொல்வது போல் உணர முடிகிறது... ஆனால் எப்படி விளக்குவதென்பது புரியவில்லை..

Anonymous said...

i'm not fully read all ur stories. just rear sujatha' i'm also fan of he. his way of writing is a unique. you r blessed to got and read books which was mentioned by him. ur tamil writing makes me eager to read all ur blogs. congrats. i'll soon criticise all ur entries after i read. congrats for your wonderful creativeness. i'm very new to this blogger.

கணேஷ் said...

மிக்க நன்றி உங்களின் கருத்துக்கு..

கண்டிப்பாக படித்துவிட்டு குறைகள் இருந்தால் சொல்லுங்கள்..

நீங்களும் நிறையா எழுதுங்கள்..உங்களின் வலைப்பூ பயணம் சிறக்க வாழ்த்துக்கள் )))