மயங்கி இருந்தாள்....ஆய்வுகூடத்தில் கிடத்தியிருந்தேன்...சுத்தமாக விருப்பமில்லைதான்.. அதிகம் விரும்பும் அவளை மயக்கமாக்கி இந்த நிலையில் வைத்து இருப்பதற்க்கு...எல்லாம் அவளின் மீது இருக்கும் அதிக காதலின் தாக்கம்..சரியாக சொன்னால் அவளை நான் சுற்ற ஆரம்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகின்றது...இந்த நிலையில்தான் இரண்டு நாளைக்கு முன்....அவளோடு கிடைத்த தனிமையில்..
"ஏதாவது சொல்லலாமே?"
"என்ன சொல்லணும்?" என்றாள்
"இதைத்தான் நான் கேட்கும்போதேல்லாம் சொல்றே. நான் எதுக்கு உன் பின்னாடி சுத்துகிறேன்னு உனக்கு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா? பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே இப்படியே மௌனமாக இருந்தா என்ன அர்த்தம்?"
"இவ்வளவு நாள் பின்னாடி சுத்தி பார்த்ததில் என் செய்கையில் உனக்கு ஒன்றும் புரியலையா என்ன?"
"இல்லை...அதானே கேட்கிறேன் சொல்லேன்?"
"இப்போ ஏதும் சொல்வதாக இல்லை...நீயே புரிஞ்சிக்கோ" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தாள்.
அப்படி ஒன்றும் செய்கையினால் புரியும்படி சொன்னதாக நினைவில்லை,அப்படியே இருந்தாலும் நான் அதை சரியாக புரிந்து கொண்டு இருக்கவில்லை அதுதான் பிரச்சினை..கேட்டாலும் மறுக்கிறாள்...அவளது செய்கைகள் என் காதலை மறுப்பதாக இருந்ததில்லை..தினமும் பலமுறை பார்த்துகொள்வோம், சிரித்தால் ஏன் இவன் சிரிக்கிறான் என்பது சில நொடிகள் பார்த்துவிட்டு செல்வாள், கிடைத்த தனிமையில் பேசினால் அமைதியாக பதில் சொல்வாள் அதில் ஒன்றும் புரியும்படி அர்த்தம் இருக்காது..மேலே சொன்னது போல்..
மனது முழுவதும் அவளின் நினைவு இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு பதில் சொல்லாத நிராகரிப்பும் அவளின் மீது இருக்கும் காதலை அதிகமாக்கியதுதான் உண்மை...சில நாட்கள்வரை கேட்க தயங்கிய நான் இப்போதெல்லாம் நேரடியாகவே கேட்டுவைக்கிறேன் இருந்தும் ஆமாம் அல்லது மறுத்தோ சொல்ல மட்டேன்கிறாள்...அதிக வலிகள் தரும் விசயம் இதுதான்...
ஒரு முடிவுக்கு வந்தேன்...பொறுமையில்லை...இவள் என்னதான் நினைத்துகொண்டு இருக்கிறாள் என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ளவேண்டும்...அவளின் அனுமதியோடு நடப்பது சாத்தியமில்லை...இதுக்கு நான் படித்த அறிவியல் கைகொடுக்கும் நான் செய்யபோவது அவளது மூளையில் இருந்து அவளுக்கு தெரியாமலே நினைவுப்பகுதியில் இருக்கும் தகவலை திருட போகிறேன்...அதாவது சில நாள்களுக்குள் அவள் என்ன நினைத்து இருந்தாள், எதை சேகரித்து வைத்து இருக்கிறாள் என்பதை அறிவதின் மூலம் என்னை பற்றி அவள் என்ன நினைத்து இருக்கிறாள் என்பதையும் அறியமுடியும்..அதோடு கடந்த இரண்டு தினங்களில் அவளை காதலுக்காக நிறைய வற்புறுத்தி இருக்கிறேன்...
பெரியதாக அவளை கஷ்டபடுத்தபோவதில்லை, மனித மூளையில் நிகழ்வுகளை அல்லது பல உணரும் விசயங்களை சேமிக்கும் பகுதிகள இரண்டு பகுதிகளாக இருக்கும்,ஒன்று elaborate encoding, மற்றொன்று shallow encoding , இதில் elaborate encoding நீண்ட கால நினைவுகளை சேமிக்கும் முறை. இதில் பதிந்து விட்டால் கூடிய சீக்கிரம் மறக்காது..எல்லாம் ஆழமாக பதியபட்டவைகள்..பல வித்தைகள் செய்து காதலியிடம் வாங்கிய முதல் முத்தம், அல்லது காதலை சொல்லபோய் அவள் செருப்பு காட்டிய இந்த மாதிரி முக்கியமான நிகழ்வுகள், shallow encoding என்பது தற்காலிக நினவுகளை சேமிக்கும் முறை...இதில் அன்றாடம் நிகழும் சில சிறிய நினைவுகள் மட்டுமே கையாளும் ஒன்று..கணினியில் இருக்கும் RAM போன்று சொல்லலாம்...காலையில் பார்த்த முடி நீளமான பெண்ணை பற்றி அன்றைய மாலையில் மட்டும் நண்பனிடம் சிலாகிப்பது,அம்மாவிடம் வாங்கும் திட்டுகளை மறந்து மறுநாளும் அதே தவறை செயவது, பேருந்தில் வாங்கிய பயணசீட்டின் விவரம் இதுபோன்ற அன்றாட வேலைகளுக்கு உதவுவது..இவை ஆழமாக பதிந்து இருக்காது..
நான் செய்ய போவது முதலில் இந்த shallow encoding பதிய பட்ட தகவல்களை வெளிய எடுத்து அதில் ராசாயன மாற்றங்களாக சேமித்து வைக்கபட்டு இருப்பவைகளை புரிந்துகொள்வதுதான்...இதன் மூலம் அவள் என்னைப்பற்றி என்ன நினைத்து இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்..அப்படி இல்லையென்றால் elaborate encoding ள் தேட வேண்டும்...shallow encoding ல் தற்காலிமாக பதியும் எண்ணங்கள் ஆனது neuron செல்களுக்கு இடையே இருக்கும் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த கலவைகளால் கொஞ்சம் நேரம் மட்டும் நிறுத்திவைக்கப்படும் ஒன்று..பதியப்படும் தகவல்களுக்கு ஏற்ப அது களைந்து நம்மை மறக்க செய்யும்..அதே போலத்தான் elaborate encoding இதில் கூடுதலாக சில ப்ரோடீன்கள் உள்ளே செல்லும் தகவல்களை அதிக நேரம் நிறுத்தி வைக்கும்..இவளை பொறுத்தவரையில் shallow encoding உள்ளவற்றை படித்தாலே போதுமானது..தொடர்ந்தேன்..
அவளுக்கு நான் கொடுத்து இருந்தது சாதாரண மயக்கம் தரும் சோடியம் பென்தால் மருந்துதான்..வேகமாக முடிக்க வேண்டும்..தலைக்கவசம் போல் இருந்த அந்த கருவியை அவளது தலையில் பொருத்தினேன்..மூளையில் ஏற்ப்படும் அல்லது ஏற்ப்பட்ட மின்சார அதிர்வுகளை கண்டறிய நான் கண்டு பிடித்தது..மூளையில் ஏற்ப்படும் ரசயான மாற்றத்தையும் படித்து சொல்லும்...அப்படி பெற்ற தகவலை கணினியில் சேகரித்து பின் அதை சாதரணமாக புரிந்துகொள்ளும் மொழிக்கு மாற்றினேன்..சரியாக வந்தது.அவை வரிசையாக..
லில்லி பூனை என்னை கன்னத்தில் பரண்டாமல் இருந்திருந்தால் அப்பா அதை தூக்கிகொஞ்ச தடைபோட்டு இருக்கமாட்டார்...
ச்சே என்ன அருமையாக கவிதை எழுத தெரிந்தாலும் அதை வீட்டில் வைக்க முடியாமல் கிழித்துதான் போட வேண்டியது இருக்கு..
கணேஷ் என்னை எப்படி காதலிக்கிறான் அவனிடம் நானும் உணமையை சொல்லியிருக்கலாம்..எவ்வளவு நாளைக்குததான் இப்படியே இருப்பது....அவன் மனசு மாறிவிட்டால்?
நான் நல்ல பெண்தானே இருந்தும் வீட்டில் எதுக்கு இவ்வளவு கண்டிப்பு...இது இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..
வீட்டில் உள்ள நிலமைக்காகத்தான் என் காதலை இவ்வளவு நாள் சொல்லவில்லை என்பதை கணேஷிடம் சொல்லும்போது அதை அவன் நம்புவானா?..அய்யோ வருகிறானே..என்னை நெருங்கி வந்துட்டான்..கையில் ஊசி வைத்து இருக்கிறான்...என் கையில்....குத்தி விட்....
அதற்குபிறகு நடந்ததை கதையின் முதல் பத்தியில் இருந்து படிக்கவும்
((இதில் மூளை தகவலை சேமித்து வைக்கும் முறை சரியானது.அதை நான் எடுப்பது கற்ப்பனை...))

24 comments:
// elaborate encoding
shallow encoding //
ம்ம .....இந்த ரெண்டு வார்தையை வைத்து அழகாக கதை சொல்லி இருக்கு ரீங்கா மக்கா .......நல்ல இருக்கு
இம்சைஅரசன் பாபு.. said.///
ரெம்ப நன்றிங்க..
நான் கதை ரெம்ப பெருசா இருக்கேன்னு நினச்சேன்..ஆனா நீங்க கதையே ரெண்டு வார்த்தையா இருக்குன்னு சொல்லிட்டிங்க))))
கதை நகர்த்திய விதம் .... கையாண்ட அறிவியல்.... அனைத்துக் மிக அழகு.
பாராட்டுக்கள்.
சி.கருணாகரசு said...///
நன்றிங்க
கதை சொல்லி...
கதை சொல்லி...
சூப்பர் மக்கா....
MANO நாஞ்சில் மனோ said...//
கருத்துக்கு நன்றிங்க
Super Story Sir
Mythees said...///
நன்றி சார்...))
கதை நல்லாயிருக்கு, memory encoding அடிப்படையா வச்சு கதை சொல்லியிருக்கீங்க!
ஆனா கதை முடிவில்லாம/முழுமையில்லதது போல் உள்ளது. ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்!
எஸ்.கே said...//
அப்படியா..அடுத்த கதை ஒரு பெரிய ட்விஸ்ட் வச்சி எழுதிடிறேன்..
கருத்துக்கு நன்றி..))
//அவளுக்கு நான் கொடுத்து இருந்தது சாதாரண மயக்கம் தரும் சோடியம் பென்தால் மருந்துதான்//
இதை படிக்கும்போது லாஜிக் மிஸ் ஆகுதே..எப்படி அந்த பொண்ணை பிடிச்சானு யோசிச்சேன்...ஆனால் கடைசியில் கலக்கிட்ட கணேஷ்...எனக்கு பிடிச்சது...ம்ம்...மனோதத்துவ மருத்துவர் பண்ற வேலை எல்லாம் கணேஷ் பண்றான்...கணேஷ் க்கு பல முகங்கள்..அடிச்சு நொறுக்கு..:))
அடுத்த பதிவு உன் 100 வது பதிவு...அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கணேஷ்...நல்லா பண்ணுடா ...
ஆனந்தி.. said./
ரெம்ப நன்றிக்கா...
எனக்கு ஒரு முகம்தான் அக்கா அதுக்கே ஒரு பொண்ணும் சிக்கலை..இதுல பல முகம் வச்சு இருந்தா ஒவ்றொரு முகத்துக்கும் தேட வேண்டியது இருக்கும்..)))
உங்களின் வாழ்த்துக்கும் நன்றி.
// அடுத்த பதிவு உன் 100 வது பதிவு...அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கணேஷ்...நல்லா பண்ணுடா ... //
பெருசா எதிர்பார்க்குறோம் கணேஷ்...
முயற்சிக்கிறேன் நண்பரே..))
@எஸ்.கே
//ஆனா கதை முடிவில்லாம/முழுமையில்லதது போல் உள்ளது. ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்!//
ஹா...ஹா..ஹா.. எஸ்.கே கதை எங்க டீலிங்படி சரியா தான் முடிஞ்சி இருக்கு. போன பதிவுல அந்த பொண்ணு லவ் பண்றா எப்படி உனக்கு தெரியும் கேட்டேன். அதுக்கு பதில் தான் இது... :)
Blogger TERROR-PANDIYAN(VAS) said...
எங்க டீலிங்படி ///
எங்கே டீலிங்..அதான் கல்லாட்டம் ஆடிட்டிங்கலே..)))
அடுத்த டீலுக்கு முன்னாடி உங்க "வியக்க" வைக்கும் எழுத்து "நடையில்" ஒரு பதிவை போட்டுட்டு வாங்க..)))
மூளையின் நினைவுப்பதிவுகளை வெச்சு அலசி ஆராய்ஞ்சு ஒரு கதையை கொடுத்துட்டீங்க.
அட்டகாசம்.
//லில்லி பூனை என்னை கன்னத்தில் பரண்டாமல் இருந்திருந்தால் அப்பா அதை தூக்கிகொஞ்ச தடைபோட்டு இருக்கமாட்டார்...//
அதிலயும் நகைச்சுவையை கலக்குறதுதான் உங்க டச்... வாழ்த்துக்கள்.
இதே போல் ஒரு கதை சுஜாதா எழுதியிருக்கிறார்.
கவிநா... said... //
அச்சச்சோ பூனை பரண்டினா சிரிப்பா வரும்...இதுவரை பரண்டல் வாங்கியது இல்லை என நினைக்கிறேன்)))
வாழ்த்துக்கு நன்றி..
என். உலகநாதன்//
இதை விட மிக அருமையாக எழுதி இருந்திருப்பார்..
புத்தகத்தின் பெயரை சொல்லியிருந்தால் சந்தோசபட்டிறிப்பேன்.
நன்றி
kathai arumai. vaalththukkal
ரெம்ப நன்றிங்க கருத்துக்கு...
Nice ji
Nice Ji
Post a Comment