தேடல்..

     "வையாமல் என்னைக்காவது  நீயா  தேச்சு இருக்கியா? பாரு முடியை கத்தாழை நார் மாதிரி"  திட்டியபடியே என் தலையில் பாட்டி எண்ணை தேய்த்து கொண்டு இருந்த போது

     "கணேஷ் இல்லையா?"  சத்தம் மறு வாசலில் இருந்து வந்தது.  பாட்டி முதலில் எட்டி பார்க்க பின்னாடியே நானும் பார்த்தேன் தூக்கிவாரிபோட்டது..என்னவள்  தோழியுடன் நின்று இருந்தாள்...பாட்டி  என்னவென்று விசாரித்தார்..அவர்கள என்னை பார்க்கணும் என்று சொல்ல ஒரு பார்வையோடு பாட்டி விலகி உள்ளே சென்றார்கள்

"கணேஷ் உனக்கு ஒரு வேலை?" என்றாள் என்னவள்

    "இப்ப எதுக்கு இங்க வந்தே சும்மாவே சந்தேகம் இருக்கு நம்ம மேலே" என்றேன் மெதுவாக

    "நீ கொஞ்சம் சும்மா இரு நீயே காட்டி கொடுத்துருவே..நான் ஒரு வேலையாகத்தான் வந்தேன்..உன்னை கூப்பிட்டு வரச்சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் அதான் வந்தோம் வா போவோம்" என்று சொல்ல அருகில் இருந்தவள் சிரித்தாள்


"யாரு எதுக்கு?"

     "ஆத்துல தண்ணீ அக்கரைக்கும் இக்கரைக்கும் போச்சில்ல அப்ப நம்ம ஊருபக்கம் இருக்கிற கரையை அரிச்சதுல அங்க ஒரு கதவு மாதிரி இருக்கு...எல்லோரும் சொல்றாங்க அந்த கதவு அங்க இருந்து நேரா நம்ம பெருமாள் கோயிலுக்கு வார குகையாம்,கோயிலுக்கு பூஜை செய்ய தண்ணீ ஆற்றிலிருந்து இந்த வழியாகத்தான் எடுத்துட்டு போவாங்கலாம் அது இப்ப நல்லா வெளிய தெரியது.." என்றாள்

"சரி போ நான் அப்புறம் வந்து பார்த்துக்குறேன்"என்றேன்

    "உன்னை யாரு பார்க்க கூப்பிட்டா அந்த கதவு  பாறையாள மூடியிருக்கு அதுக்கு மேல ஏதோ பாட்டு, எழுத்து எல்லாம் இருக்கு நீதான் என்கிட்டே சொல்லியிருக்கியே உனக்கு இந்த மாதிரி கண்டுபிடிக்கிறதுன்னா ரெம்ப பிடிக்கும்னு..அதான்  அங்க உள்ளவங்ககிட்டே சொன்னேன் நீ வந்து இருக்கேன்னு அதான் கூப்பிட்டு வரச்சொன்னாங்க"

    "அடிப்பாவி இதுல என்னை எதுக்கு மாட்டிவிட்டே கண்டுபிடிக்கலன்னா மானம் போகுமே?"

"அப்ப என்கிட்டே சொன்னது எல்லாம் பொய்யா?"

    "இல்லை உணமைதான்...இந்த மாதிரி விசயத்துல மட்டும் என்னை சேர்த்துவிடு .இன்னைக்கு காலையில் பூனைகுட்டிக்கு அத்தனை முத்தம் கொடுத்து கொஞ்சினியே அதோடு சேர்க்க சொன்னப்பமாட்டும் எவ்வளவு கோபம வந்துச்சி உனக்கு. ...."

   "நீ வந்தா வா இல்லேன்னா போ எனக்கென்ன" என்று கோபமாக சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்

    "சரி நில் வருகிறேன்"..பின்னாடி ஓடி அவளோடு சேர்ந்தேன்..ஏதும் பேசாமல் நடந்தோம்..கோபத்தில் இருந்தாள்..தூரத்தில் கூட்டம் தெரிந்தது..கரையை விட்டு கிழே தண்ணீ போய் கொண்டு இருக்க அந்த கதவின் முன்னால் எல்லோரும் நின்று இருந்தார்கள்..அருகில் இருந்த கொஞ்சம் மண்மேடு,முட்புதர்கள அகற்றப்ட்டு சுத்தமாக இருந்தது...

        அவள் சொனனதையே அவர்களும் சொன்னார்கள்..பாறையை பார்த்தேன்...அதின் மேல் சில எழுத்துக்கள் ஒரு பத்தியில் இருக்க, சற்று நடுவில் அ உ எ என்ற எழுத்துகளும் அதன் கிழே இந்த இரண்டு பாடல்களும் இருந்தன..

அ உ எ

முக்கூடி முழுமையாகி ஒன்று தவறுமது
மூன்றாமடி தனில் ஆறாமிடத்தில்

முழுமைகூட முதலோடு ஆறுகூடலோ அல்லது
முழுதும் கடைக்குச் சமம் 


    எல்லாத்தையும் வாசித்து முடித்தபோது கொஞ்சம் தலைசுற்றியது...உள்ளுரில் காதலியை வைத்துக்கொண்டால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..நமது திறமையை எப்படியாவது வெளிபடுத்தி கொண்டே இருக்க வேண்டும்...

     அந்த பத்தியில், "கிழே உள்ள மூன்று சட்டங்ககளை அதில் உள்ள எழுத்துக்களின் சரியான வரிசையில் அமைத்தால் பாறைகள் விலகி வழி கிடக்கும்.. தவறாக மாற்றினால்" என்பதோடு நிருத்தப்ட்டு இருந்தது...

    அருகில் இருந்த பெரியவர் "முடியுமா பார் தம்பி இல்லையென்றால் பக்கவாட்டில் மண்ணை விளக்கி உள்ளே போகலாம்" என்றார்

    "நான் முயற்சிக்கிறேன் திறந்துவிடலாம்" என்றேன்..கூட்டத்தில் ஒருத்தியாய் நின்று இருந்தாள் கண்ணில் கோபம இருந்தது....

     அதிகம் யோசிக்க வழியில்லை வெறும் மூன்று எழுத்துக்கள் இரண்டு பாடல்கள், பார்த்தேன் எல்லாம் உயிர் எழுத்துக்கள், அந்த எழுத்துக்களில் ஒன்றும் இல்லை... அதை சரியான வரிசையில்  அமைக்க அந்த பாடல் சரியாக  புரிய வேண்டும் இரண்டு முறை நிதானமாக வாசித்த பார்த்தேன்......கண்டிப்பாக இது எண் சம்பந்த்தபட்டவையாக இருக்க வேண்டும், "முக்கூடி" என்றால் வேறு அர்த்தம் சரியில்லை அந்த பறையில் மொத்தம் நான்கு மூலைகள் இருந்தன..அதில் மூனறை மட்டும் இணைத்து எழுத்தை கண்டுபிடிப்பது முடியாது, அடுத்துவந்த பாடல்களும் எண்களை வைத்தே இருப்பதை உறுதிபடுத்துவையாக இருந்தன...ஒன்று கூடி,ஆறாமிடம். ஆறுகூடல், போன்றவைகள்


   தமிழில் தனியாக எண்கள் இருப்பது நினவுக்கு வந்தது,  பழந்தமிழர்கள் அந்த எண்களை உபோயோகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம், அந்த எழுதுக்களுக்குரிய எண்களை யோசித்தேன்...
அ = 8 உ  = 2, எ  = 7,  

    இப்போது முதல் பாடலை இத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் "முக்கூடி" அந்த மூன்று எண்களையும் கூட்டினால்  18, ஒன்று குறையும்  அப்படிஎன்றால் 17, மூன்றமடி தனல் ஆறாமிடத்தில் மூன்றமடியில் ஆறாம் இடத்தில வருவது 6*3 = 18, இதில் ஒன்று குறைந்தால் ..... இரண்டும் ஒன்றுதான், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் தமிழில் எண்களைத்தான் குறிக்கிறது...முதல் பாடலில் கிடைத்தது 17 என்ற எண்..... கொஞ்சம் மூச்சு விட்டேன்...

     அடுத்த பாடல் முழுமைகூட என்றால் கிடைத்த 17 இது கூடினால் 7+1 = 8, அடுத்து முதலோடு ஆறுகூடலோ இதற்கு அர்த்தம் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டேன் அதாவது முதலில் உள்ளதோடு ஆறை கூட்டினால் 8 கிடைக்கும் என்கிறது, அப்படி என்றால் முதல் எண் அலல்து எழுத்து இரண்டை குறிக்க வேண்டும்..பார்த்தால் உ = 2 , முதல் எழுத்து என்று முடிவாகியது.. மீதம் இருப்பது இரண்டு எழுத்துக்கள்..அடுத்தவரி முழுதும் கடைக்குச் சமம். முழுதும் என்றால் கூட்டி கிடைத்த 8  அந்த எழுத்தில் எட்டை குறிக்கும் சொல் அ = 8, ஆக இந்த கடைசியில் வரும், மீதம் இருக்கும் நடுவில் வரும் தீர்ந்து இருந்தது சரியான வரிசைமுறை  உ எ அ

      ஒருமுறை நான் யோசித்து  பார்த்ததை சரிபார்த்துவிட்டு பொருந்தி  இருக்க அந்த பறையின் மீது இருந்த சட்டங்ககளை கண்டுபிடித்த எழுத்தின் வரிசைக்கு நகற்றினேன்..கூட்டம் எல்லாம் ஆர்வமாக முன்னோக்கி வந்தார்கள் ..மூன்றாவது சட்டத்தை சரியாக அமைக்கவும் அந்த பெரிய பாறையின் மத்தியில் இருந்த ஒரு பாறை பகுதி விலகி உள்ளே விழுந்தது..தொடக்கத்தில் ஒரு பெரிய பள்ளம அதான் மீது இந்த பாறை விழுந்து அதை கடக்கும் விதத்தில் ஒரு பாதை அமைப்பதாக  இருந்தது..ஆற்றில் தண்ணீ போனதால் அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது..

    ஏதோ பெரிய நிம்மதி...நல்லவேளை பிழைத்தோம் என்றிருக்க..எப்படி திறந்தாய் என்கிறவர்க்ளுக்கு விளக்கம் சொல்லிகொண்டே என்னவளை கூட்டத்தில் தேடினேன் கிடைக்கவே இல்லை..போயிருந்தாள்.

32 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க....

MANO நாஞ்சில் மனோ said...

வடையும் எனக்கா................

Philosophy Prabhakaran said...

எல்லாத்தையும் வாசித்து முடித்தபோது கொஞ்சம் தலைசுற்றியது...

Philosophy Prabhakaran said...

பயப்படாதீங்க... பதிவுல இருக்குற லைனை எடுத்துதான் காப்பி பேஸ்ட் செய்தேன்...

ஆனந்தி.. said...

//"இல்லை உணமைதான்...இந்த மாதிரி விசயத்துல மட்டும் என்னை சேர்த்துவிடு .இன்னைக்கு காலையில் பூனைகுட்டிக்கு அத்தனை முத்தம் கொடுத்து கொஞ்சினியே அதோடு சேர்க்க சொன்னப்பமாட்டும் எவ்வளவு கோபம வந்துச்சி உனக்கு. ...."//

:)))))))))))))))))

ஆனந்தி.. said...

//உள்ளுரில் காதலியை வைத்துக்கொண்டால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று..நமது திறமையை எப்படியாவது வெளிபடுத்தி கொண்டே இருக்க வேண்டும்...//

Is it?? ???:))))))

ஆனந்தி.. said...

//என்னவளை கூட்டத்தில் தேடினேன் கிடைக்கவே இல்லை..போயிருந்தாள்.//

இருந்து அவளும் மூளை குழம்பவா என்ன...போகட்டும் போகட்டும் ..நல்லா இருக்கட்டும் அந்த புள்ளையாவது..:))

ஆனந்தி.. said...

//அ உ எ

முக்கூடி முழுமையாகி ஒன்று தவறுமது
மூன்றாமடி தனில ஆறாமிடத்தில்

முழுமைகூட முதலோடு ஆறுகூடாலோ அல்லது
முழுதும் கடைக்குச் சமம் //

நல்லா யோசிக்கிற கணேஷ்..

கணேஷ் said...

ஆனந்தி.. said... //

நல்லா யோசிக்கிற கணேஷ்..//

அப்பா நல்லவேளை அக்கா இப்பவாச்சும் இது உங்க கண்ணுல பட்டுச்சே)))

நன்றிக்கா..

கணேஷ் said...

ஆனந்தி.. said...

Is it?? ???:))))))//

உங்களுக்கு தெரியாத என்ன?)))

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ............ஹி ..........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ..........

கணேஷ் said...

இம்சைஅரசன் பாபு.. said... //

யாருங்க ? எப்படி யோசிசாங்க?)))

குறையொன்றுமில்லை. said...

உங்க பதிவால நம்பர்களுக்கு(சில) தமிழில் என்னன்னு தெரிஞ்சுக்க முடிந்தது.

கணேஷ் said...

Lakshmi said... //
எல்லாம் எளிதுதான்..இன்னும் சில..
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰

இது வரிசையாக ஒன்று முதல் பத்து வரை..

(கூகிள் தமிழ் உதவியில் கொடுத்தேன்)

கவிநா... said...

அப்பாடா.... தலையே சுத்துது....

எப்படியோ மூளையைக் கசக்கிக் கதவைத் திறந்துட்டீங்க.... அதே மாதிரி உங்களவள் கோபத்தையும் குறைத்து சமாதானப்படுத்திடுங்க....

கதை அருமைங்க கணேஷ்....

கணேஷ் said...

கவிநா... said...
அப்பாடா.... தலையே சுத்துது....
//

கதை எழுதியதே அதுக்குத்தானே))))

நன்றிங்க

NaSo said...

:))))))

கணேஷ் said...

என்ன MA சார் கதையை படிச்சா சிரிப்பு வருதா சார்)))

Unknown said...

:)nice

Ramesh said...

Super Ganesh

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//என்னவளை //

போன கதையில சைட் அடிச்ச.. இப்போ என்னவள் சொல்ற.. இதுக்கு நடுவுல் பிகர் எப்போ செட்டாச்சி? அந்த கதை எங்க?? :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said... ///

என்னங்க அதுக்காக என் சொந்த டைரியை ஸ்கேன் பண்ணியா போட முடியும்..அது எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சிரிச்சு))))

கணேஷ் said...

பிரியமுடன் ரமேஷ் said...//

நன்றிங்க..

கணேஷ் said...

siva said...
:)nice
//
நன்றிங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//என்னங்க அதுக்காக என் சொந்த டைரியை ஸ்கேன் பண்ணியா போட முடியும்..அது எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சிரிச்சு))))//

ஒ.கே புது டீல் நீ அந்த கதைய சொல்லு நான் அடுத்த பதிவு போடறேன்... :))

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said... //

ம்ம் சரி இனி அதுக்கு வேற எத்தனை black coff. குடிக்கனுமோ தெரியலை)))

எஸ்.கே said...

நல்ல யோசிச்சிருக்கீங்க. அந்த கணக்குப் புதிர் ரொம்ப யோசிச்சு உருவாக்கியிருக்கணும்!

ஆனா கடைசில் உங்க திறமையை யாரு பார்க்கணுமோ அவங்க பார்க்கலியே!:-)

கணேஷ் said...

எஸ்.கே said...//

அதுக்கு பிறகு அந்த பூனைக்குட்டியோடு இருக்கும்போது சொல்லிட்டேன்)))))௦
நன்றிங்க

அனு said...

கலக்கல்ஸ்!!

கணேஷ் said...

அனு said...//

நன்றிங்க))

உமர் | Umar said...

அருமையான புதிர் கணேஷ்!

கணேஷ் said...

கும்மி said...//

நன்றிங்க..கருத்துக்கு