காதலிப்பது எப்படி??


   நீண்டநாள் தயக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து வாங்கியே விடுவது என முடிவு செய்து கடைக்குபோனேன்..இன்னும் முழுதும் தயக்கம் போகவில்லை...இருந்தாலும் கடந்த நான்கு வருடங்கள் முயற்சிசெயதும் முடியவில்லை என்கிறபோது இதுவாவது உதவாதா? என்ற எண்ணம்தான்..

   எப்படி காதலிப்பது என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்வது முதலில் ஒருமாதிரியாக இருந்தாலும் வேறு வழியில்லை..முதலிலேயே அந்த குறிப்பிட்ட புத்தகத்தின் ஆசிரியர் விலை போன்ற தகவல்கள் சேகரித்துக்கொண்டு போனதால் தேட அவசியமில்லாமல் வாங்கி கொண்டு திரும்பினேன்..

   அட்டைப்படம் பார்க்கும்போதே காதல் உணர்ச்சியில் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தது..திறந்தேன் முதல் சில பக்கங்களில் ஆசிரியர்,புத்தக குறிப்புகளை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் அந்த புத்தகம் மூன்று பகுதிகளை கொண்டுள்ளதாகவும், முதல் பகுதியை படித்து செயல்படுத்தாமல் கண்டிப்பாக அடுத்த பகுதியை படிக்கககூடாது என்று எழுதியிருந்தது..

   அதேபோல் அந்த புத்தகத்தில் மூன்று பகுதிகள் பிரிக்கபட்டு முதலிலேயே படிக்க முடியாதவாறு தனித்தனியாக ஒவ்வொன்றிக்கும் ஒரு உறை போடப்பட்டு இருந்தது..நமக்கு எப்போது எந்த பகுதியை படிக்க வேண்டுமோ அப்போதுமட்டும் அதை உடைத்தால் போதுமானது..


   ஆர்வத்தில் வேகமாக முதல் பகுதியின் உறையை கிழித்து படிக்க ஆரம்பித்தேன்..இரண்டு நாள்களில் முடிந்து இருந்தது..முடிவில் இந்த பகுதியில் படித்ததை செய்யாமல் அடுத்த பகுதியை படிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை வேறு..

   முதல் பகுதியின் சாராம்சம்... பிடித்த பெண்ணின் மனதில் எப்படியாவது அவளுக்கு பிடிக்கின்ற வகையில் நீங்காத இடம் பிடித்து காதலை மறைமுகமாக தெரிவிக்கவேண்டும். இது எனக்கு தெரிந்ததுதான் இருந்தாலும் கடந்த வருடங்களில் முடியாமல் போனது என்னமோ உணமைதான்..இதை எப்படி எளிதாக செய்வது என்பதற்கும் உதவிகள் கொடுக்கப்பட்டு இருந்தன...

   அடுத்து வந்த நாள்களில் நான் ஏற்க்கனவே சுற்றின பெண்ணின் பின்னாடி சுற்றி..அவளின விழிகளில் கயிறை கட்டி இழுக்காத குறையாக இழுத்து  பார்வையை என் பக்கம் திருப்பி எப்படியோ ஒருவழியாக பேச ஆரம்பித்து..காதலை சொல்லியும் விட்டேன்..காதல் ஆரம்பித்ததில் இருந்து அவளோடு ஊர்சுற்ற,பேச இவற்றுக்கிடையில் அந்த புத்தகம் மறந்தே போனது..

   அந்த புத்தகத்தில் சொன்னபடி காதலித்ததோ என்னனமோ எந்த வித ஊடல் இல்லாமல் போனது..காதலில் நாட்கள அதிகமாக அவளின் அழகும் கூடிக்கொண்டே போனது போல ஒரு எண்ணம..அவள் செய்வது எல்லாமே அழகாய் பிடித்து இருந்தது...

   ஒரு தனிமையில் அந்த புத்தகம் என் கண்ணில் பட..ஆர்வமாக அடுத்த பகுதியில் என்ன இருக்கும் படிக்க எண்ணினேன்...இரண்டாவது பகுதியை கிழித்து பார்த்தால் அதிலுள்ள பக்கங்ககள் எல்லாம் வெறுமையாக இருந்தன..அதன் இறுதி பக்கத்தில் அடுத்த பகுதியை பார்க்கவும் என்ற வார்த்தை மட்டும்..

   வேகமாக அடுத்த பகுதியின் உறையை கிழித்து படித்தேன்.. அதில் இருந்ததை அபப்டியே கொடுக்கிறேன்..
   முதல் பகுதியை நீங்கள் படித்ததில் கண்டிப்பாக உங்களுக்கு அருமையான காதலியும், சுகமான காதல அனுபவும் கிடைத்து இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் காதலியுடன் செலவழித்த அருமையான அந்த நேரங்களினால் இரண்டாவ்து பகுதியில் நான் ஏதாவது எழுதியிருந்தாலும் படித்து இருக்க மாட்டீர்கள்.......

   அந்த வெறுமையான பக்கத்திற்கு இன்னொரு காரணம்..நீங்கள் இதுவரை கழித்த சுகமான நினவுகளை காதல் சொட்டும் வார்த்தைகளால் பக்கங்களை நிரப்புங்கள்..அது நான் எழுதி படிப்பதைவிட நீங்களே மறுமுறை அதை படிக்கும்போது சுகமாக இருக்கும்.

   அப்படி முதல் பகுதியை படித்து முயற்சித்து காதலி கிட்டாமல்..அடுத்த பகுதிகளையும், இதையும் நீங்கள் படித்து கொண்டு இருந்தால்...பிரச்சினை இல்லை...இரண்டு மற்றும் மூன்றாம் பகுதிகளில் கிழித்த உறைகளை  பொருத்திவிட்டு முதல் பகுதியை மீண்டும் படிக்க ஆரம்பியுங்கள்..

29 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஹா ..............ஹா ...........வேற என்ன சொல்லன்னு தெரியலை மக்கா ........

கணேஷ் said...

அப்ப கதை புரியலையா என்ன))))))

கவிநா... said...

வாவ்... என்னமா யோசிச்சிருக்கீங்க.... அட்டகாசம் போங்க....
இதில என்ன ஒரு சிறப்புன்னா, அறிவியலே இல்லை.... :)))

அந்த பூ படமும் புத்தகமும் அப்பப்பப்பா உங்களுக்குள்ள இப்படியொரு ரசனையா? னு ஆச்சரியமா இருக்கு.

ஒரு வேளை நீங்க புனி-கிட்ட அட்வைஸ் கேட்டிருப்பீங்களோ , காதல் கதை எழுதறது எப்படின்னு.... (புனிதான் காதல் ஸ்பெசலிஸ்ட் ஆச்சே!!!)

மொத்தத்துல ரொம்ப ரொம்ப அழகான, வித்தியாசமான காதல் கதை... :))) அருமை....

MANO நாஞ்சில் மனோ said...

நான் காதலிக்க என் வீட்டம்மா சம்மதிக்க மாட்டேங்குறாங்களே.......

Arun Prasath said...

ஹி ஹி நல்லா இருக்கு பாஸ்

கணேஷ் said...

கவிநா... said..//

சொந்த கதையை வருத்தத்தோடு சொன்னா..நீங்க இப்படி சொல்றிங்க)))

புனி ஐடியா கொடுத்தா கண்டிப்பா அதுல அறிவியல் இருக்கும்

நன்றி

கணேஷ் said...

MANO நாஞ்சில் மனோ sa//

இது சம்பந்தமான புத்தகம் நான் இன்னும் தேடவோ படிக்கவோ இல்லை))))

கணேஷ் said...

Arun Prasath said...//

நன்றிங்க..

Ram said...

காதலிக்க புக்கா.??? அய்யய்யே எனக்கு வேணாம்.!!!

Anonymous said...

good post nice

கணேஷ் said...

தம்பி கூர்மதியன் said...///

பிரச்சினை இல்லை நீங்கள் புத்தகத்தின் இரண்டாம் பகுதியை மட்டும் படித்துகொள்ளுங்கள்)))))

Philosophy Prabhakaran said...

@ தம்பி கூர்மதியான்
// காதலிக்க புக்கா.??? அய்யய்யே எனக்கு வேணாம்.!!! //

தலைவருக்கு புத்தகம் எல்லாம் தேவைப்படாது... அவரே தனி புத்தகம் எழுதுற லெவலுக்கு போயிட்டாரு...

கணேஷ் said...

அப்பசரி ஒரு புத்தகம் எனக்கும் அனுப்பிடுங்க))))

ஆனந்தி.. said...

கணேஷ்...சூப்பர் ..சூப்பர்..நீ இதுவரைக்கும் கொடுத்த பெஸ்ட் டில் இதுவும் one of the best story..அதுவும் லாஸ்ட் மூணு பாரா கலக்கல்...கலக்கல்...அறிவியல் கதைகள் மட்டுமே எழுதி உன் வட்டத்தை சுருக்கி கொள்ளாதே அன்பு தம்பி...போன பதிவில் உன் அனுபவங்களை பத்தி எழுதியது கூட சுவாரஸ்யமா தொகுத்து இருந்த...இப்போ இந்த ஸ்டோரி யும் ரொம்ப அழகான presentation ...சுஜாதா மாதிரி பல்வேறு வித பரிமாணங்களில் உன் பதிவுகள் இருக்கனும்கிறது தான் இந்த சகோதரியின் விருப்பம்...:)

தர்ஷன் said...

:)

கணேஷ் said...

ஆனந்தி.. said...//

thanks akka)))

Ram said...

//தலைவருக்கு புத்தகம் எல்லாம் தேவைப்படாது... அவரே தனி புத்தகம் எழுதுற லெவலுக்கு போயிட்டாரு...//

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. என்ன கொடும சார் இது..???

கணேஷ் said...

நீங்களே சொல்லிருங்க சார் என்ன கொடுமைன்னு))))

Ram said...

//நீங்களே சொல்லிருங்க சார் என்ன கொடுமைன்னு))))//

இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்..

கணேஷ் said...

எதுக்கெல்லாம் சார் அதையும் சொல்லிருங்க??)))))

Ram said...

//எதுக்கெல்லாம் சார் அதையும் சொல்லிருங்க??))))) //

என்னயா இங்க ஓவர் மொக்கையா இருக்கு..???

S.முத்துவேல் said...

very nice beauty full ....

thanks sharning...

உளவாளி said...

அருமையான கதை. அந்த புத்தகத்தை யானைக்கும் அனுப்ப முடியுமா?

கணேஷ் said...

எந்த யானை என்று சொல்லவில்லையே))))

அந்த புத்தகம் மட்டும் உணமையிலே எனக்கு கிடைத்து இருந்தால் நான் இந்த கதையே எழுதி இருக்க மாட்டேன்)))

கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கற்ப்பனை)))

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் சூப்பர் கற்பனைதான். நல்லாவே இருக்கு. பலவிஷயங்கள் பற்றியும் யோசிச்சு எழ்தும் கற்பனைத்திறன் நிறையாவே உங்க கிட்ட இருக்கு.வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

Lakshmi said...//

உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஏம்ப்பா அதான் எல்லா திரைப்படங்களும் இதே வேலையாய் இருக்கும்போது நீங்களாது எங்களுக்காக யோசிக்க கூடாதா நண்பரே !

கணேஷ் said...

இதில் நிறையா பதிவுகள் இருக்கின்றன படிச்சு பாருங்கள் படித்துவிட்டு சொல்லுங்க உபோயோகமா இல்லையா என்று.

Sangeetha Nambi said...

Nice Blog :)

http://recipe-excavator.blogspot.com