சில விசயங்கள் - 2



  இதில் கொஞ்சம் கற்ப்பனைசாக்லேட் கலக்காத சுயபுராணம், ஊர் பயணஅனுபவங்கள...எல்லாம் சுகமானவைகள.   நிறையா இருந்தாலும் நீங்கள் இவனுக்கு வேற வேலையில்லை என்று  ஓடாதவாறு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்...

    
சிறு வயதில் கதை கேட்கும் பழக்கம் அதிகம் உண்டு..காரணம் நண்பர்களோடு விளையாட்டில் சேராமல் "தொம்"மென்று தனியாக உட்கார்ந்து இருப்பேன்..அப்படியே விளையாடும் இடத்திற்கு போனாலும் சேர்க்க மாட்டார்கள்..அருகில் உட்கார்ந்து பார்ப்பேன்..நான்கு,ஆறு, ரன்கள எடுக்கும் போது அவர்கள் கத்துவதை ஏன் இப்படி கத்துகிறார்கள்? என்று ஆச்சர்யமாக பார்த்துவிட்டு அப்படியே எழுந்துவந்தால் வீடு போக பிடிக்காது, போனால் படிக்க சொல்வார்கள். அதற்காக பொழுதுபோக பாட்டிகளிடம் கதைகேட்பது தொடங்கியது, எனைபோல சிலரும் இதில் அடக்கம்.

   பாட்டிகளின் கதைகளில் பெரும்பாலும் ராஜா ராணி இவர்களோடு தீமை செய்யும் ஒருவன் அவனுக்கு இறுதியில் கிடைக்கும் நீதி இதுதான் இருக்கும்..அந்த வயதில் இது எனக்கு பெரிய விசயம்..நிறையா கேட்டிருக்கிறேன்...இந்த முறை பயணத்தின் போது எனக்கு கதை சொன்ன பட்டிகளில் நிறையாபேர் உயிரோடு இல்லை..வருத்தப்பட்டேன்..மீதி இருந்தவர்களும் தங்களது பேரன் பேத்திகளோடு தொலைகாட்சியிடம் கதை கேட்டுகொண்டு இருந்தார்கள்.. .

  அவர்களை சந்தித்து நான் எனக்கு மட்டுமே புரிகின்ற மாதிரி  கதைகள் எழுவதை சொல்லலாம் என நினைத்தேன்....சிறுவயதில்தான் கதை கேட்டு உயிரை வாங்கினான்..இப்போது கதை சொல்லி படுத்தபோறானே.. என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்...
************.

   ஆற்றில் நீர் போய்கொண்டு இருந்தது...குளிப்பதற்கு மூன்று மணியளவில் போனேன்..வெயிலில் குளித்தால் கொஞ்சம் குளிர் கம்மியாக இருக்குமே என்ற எண்ணம..தெளிவான நீரை பார்த்தபடியே அப்படியே உட்கார்ந்து..யோசிக்க ஆரம்பத்ததில் ஆற்றின் நீரை போலவே எண்ணங்களும் நிறையா ஓடியது....என்னவெல்லாம் யோசித்தேன் என்பதை உணராமலேயே தனிமையாக இரண்டுமணி நேரம் கழித்து இருந்தேன்..அந்த நேரம் சுகமானவைகள்..

   சாயங்காலம் ஆனதும்  மீன் பிடிக்க சிறுவர்கள் கையில் சாரத்துடன்(லுங்கி) வந்து இருந்தார்கள்..இரண்டுபேர் ஒவ்வோரு முனையை பிடித்து நீரில் முக்கி மீன் வந்தவுடன் தூக்கி  மீனை பிடிக்கும் முயற்சியில் இருந்தார்கள்..மற்றொருவன் வேகமாக வந்து ஒரு ஊறறை தோண்டினான..பிடித்த மீன்களை போட்டு வைக்க..

   பார்த்து கொண்டு இருந்த நான்..அவர்களிடம் சென்று இப்படி பிடிப்பதைவிட நான் சொல்லுற மாதிரி பிடிங்க என்று சொல்லி அந்த லுங்கியின் ஒரு முனையை முடிச்சிட்டு அதை அப்படியே மீன் உள்ள பகுதியை பார்த்து இழுத்து சென்று மீன் நிறையா உள்ளே சென்றவுடன் தூக்குமாறு சொல்ல ..அவர்கள் அதை செய்ய தொடங்கினார்கள்.. எனக்குள் கொஞ்சம் பயம்..அது தேறவில்லை என்றால் கட்டாயம் வைவார்கள்..நல்ல நேரம் நிறையா மீன் வந்தது.. அந்த சந்தோஷத்தில் மீதம் இருந்த ஒருவன் அவன் தோண்டியிருந்த ஊற்றில் இருந்து துள்ளி விழும் மீன்களை மீண்டும் உள்ளே எடுத்துபோடும் வேலையை என்னிடம் கொடுத்து விட்டு ஆற்றுக்குள் குதித்தான்...அபப்டியே நேரம் போக இரவு வந்து குளிர்ந்த காற்று அடிக்க ஆரம்பித்தது... நடுக்கத்தோடு குளித்துவிட்டு வீடு திரும்பினேன்.

***********

   பதிவரான பாபு (இம்சை அரசன் ) அவர்களை  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..வலைப்பூககளில் வாயில் அரிவாளோடு சுற்றினாலும் அருமையான மனிதர்..நிறையா பேசினோம்.பதிவர்கள் பற்றிய சில வியங்கள் புதியதாக தெரிந்து கொண்டேன்..

************

   வேலையாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வழியாக போக நேர்ந்தது..நினைவில் வந்தவர் சுஜாதா தான் ஏதோ அருமையான வித்தியாசயமான ஒருவித உணர்வு நான் சுஜாதா வாழ்ந்த ஊரை பார்க்கிறேன் அல்லது இருக்கிறேன் என்று நினைக்கும்போது.

   மனிதர் நிறையா பாதித்து இருக்கிறார் என்னை.  அந்த உணாச்சி புதுமையானவை வார்த்தைகள் இல்லை...நிறைய மாற்றியிருக்கிறார் நானும் மாறியிருக்கிறேன்..கற்று கொடுத்து இருக்கிறார் .....எப்போதுமே நினைக்கும்போது  மனதில் பெறும் வலியை  கொடுப்பது சுஜாதா இப்போது இல்லை என்பதே..அப்போதும் அதே வலி. இப்போது சுஜாதா இருந்தால் எப்படி இருக்கும் என்பதை  பற்றிய யோசித்துக்கொண்டே ஊர் வந்தேன்..

13 comments:

MANO நாஞ்சில் மனோ said...

இப்போல்லாம் கதை கேட்டால் டிவி முன்பு உக்கார வச்சிருவாங்க....

கணேஷ் said...

Blogger MANO நாஞ்சில் மனோ////

ம்ம ஆமாங்க..அப்படியே சொன்னாலும் அது ஏதாவது ஒரு முடிஞ்சு போன தொடர் நடகமாத்தான் இருக்கும்))))

நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

நிச்சயமாக சுஜாதா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.......இன்னும் விஞ்ஞான பூர்வமான படைப்புகள் நாம் படித்து இருக்கலாம் கணேஷ் .....நல்ல கதை வசன கர்த்தா கூட

இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ கணேஷ் பொய் சொல்லுறாரு நான் சாதாரணமான ஆள் தான் ........

.நான் கணேஷ் ஐ சந்தித்ததில் எனக்கு தான் மகிழ்ச்சி .....என்னை தேடி வந்து பார்த்த முதல் பதிவர் .....இளம் பதிவர் .......அவோரோட உயர்ந்த எண்ணத்திற்கு இன்னும் நல்ல பல பதிவு எழுதி ..அது புத்தகமாக வரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//இதில் கொஞ்சம் கற்ப்பனைசாக்லேட் கலக்காத சுயபுராணம், ஊர் பயணஅனுபவங்கள...எல்லாம் சுகமானவைகள.//

பல வேலைகளுக்கு இடையில் ஏதாவது நல்லா எழுதி இருப்பனு நம்பி வந்தேன்... :(

நீயுமா இப்படி எழுதனும்? சரி நானும் அப்படி கமெண்ட் போட்டு போறேன்.


அருமையான அனுபவங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

கணேஷ் said...

TERROR-PANDIYAN(VAS) said...

அநேமாக நான் நல்லா எழுதியிருப்பேன் என நம்பிய முதல் மனிதர் நீங்கள் என்பதால்...உங்களின் கருத்தின் படி இனிமேல் உருப்படியாக எழுத முயறசிகிறேன்..

கண்டிப்பாக சுயபுராணம் இருக்காது..

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//கண்டிப்பாக சுயபுராணம் இருக்காது..//

அண்ணா என்ன இப்படி பட்டுனு சொல்லிட்டிங்க. நான் சொன்னது என்னோட கருத்து. இந்த மாதிரி (சுய புராணம்) பதிவு பிடிச்ச நிறைய பேரு இருக்கலாம். அதனால மக்கள் கருத்த கேட்டு செய்யுங்க. அறிவியல் கலந்து சிறு நகைச்சுவை இழையோட கதை எழுதுவது உங்கள் சிறப்பு. அந்த எழுத்து நடைக்கு நான் ரசிகன்... :)

கணேஷ் said...

நான் எங்கே "பட்டுனு" சொல்லவே இல்லையே))))

இல்லை நீங்கள் சொன்னபடி இருந்தாலும் எனக்கு ஓரளவு தெரிந்த அறிவியல் கலந்த கதைகளை எழுதுவதே நல்லது என நினைக்கிறேன்...

"""பெரியவங்க""" சொன்னா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும்னு எல்லோரும் சொல்வாங்க))))

ஆனந்தி.. said...

கணேஷ்...ஒவ்வொரு வரியவும் நான் ரசிச்சேன்...சின்ன வயசிலேயே நீ சோலோ தானா? :)))) பாட்டி கதைகள் கேட்டது...அந்த ஆறு,மீன்பிடிக்க நீ கொடுத்த ஐடியா..சுஜாதாவிற்காக உன் வருத்தம்...பாபு வை சந்திச்சது னு...நல்லா இருந்தது படிக்க...சுயபுராணமா லேசா இருந்தாலும்..ரசிக்கும்படி ஷார்ட் அண்ட் சிம்பிள் ஆ சொல்லி இருந்த..உன் ரசனைகள் கூட ஓரளவு புரிஞ்சது...சூப்பர் டா அன்பு தம்பி...

கணேஷ் said...

சின்ன வயசிலேயே நீ சோலோ தானா? //

நான் சோலோ இல்லைக்கா..யாரும் என்னை செர்க்கலை))

ஆனந்தி.. said...

அதான் தனிமையில் ரொம்ப சிந்திக்க ஆரம்பிச்சிருக்க அப்பவே....:)))

குறையொன்றுமில்லை. said...

மலரும் நினைவுகள் அருமையா இருக்கு. சுஜாதா உங்களைப்போல பலரையும் பாதிச்சுதான் இருக்கார்.

கணேஷ் said...

நிறையா பாதிச்சு இருப்பது உண்மை..

நன்றிம்மா..